அறிக அறிவியல்
பாதியளவு நீர்
நிரப்பப்பட்ட,முற்றும் மூடப்பட்ட ஒரு கொள்கலனை எடுத்துக் கொண்டு ஒரு லாரி f என்ற சீரான முடுக்கத்துடன் ஒரு கிடைமட்டமான சாலையில் செல்கிறது .லாரி ஓய்வு நிலையில் இருக்கும் போது கொள்கலனில் உள்ள நீரின் மட்டம் கிடைமட்டமாக இருந்தது .லாரி சீரான முடுக்கத்துடன் செல்லும் போது நீரின் மட்டம் எப்படி இருக்கும் ? சீரான வேகத்துடன் லாரி இயங்கிச் செல்லும் போது நீரின் மட்டம் எப்படி இருக்கும் ? லாரியின் முடுக்கம் புவி ஈர்ப்பு முடுக்கத்திற்குச் சமமானால் நீரின் மட்டம் எப்படி இருக்கும் ?
நீரின் முடுக்கம் = - லாரியின் முடுக்கம் = - f
இது கிடைமட்டமாக லாரியின் இயக்கத் திசைக்கு எதிர் திசையில் செயல்படும். புவி ஈர்ப்பு முடுக்கம் g செங்குத்துத் திசையில் செயல் படும்.எனவே நீரின் புறப்பரப்பு இவை இரண்டின் விளைவு முடுக்கத் திசைக்கு செங்குத்தாக அமையும். எனவே நீரின் மட்டம் கிடைமட்டமாக இல்லாது சரிவுடன் இருக்கும். நீரின் மட்டம் முன் பகுதியில் தாழ்ந்தும்,பின் பகுதியில் உயர்ந்தும் இருக்கும். θ என்பது நீர் மட்டத்திற்கும் கிடைமட்டத்திற்கும் இடைப்பட்ட கோணம் எனில் சாய்வு கோணம் tan
θ = f/g அல்லது θ =tan -1 f/g
f=g எனில் tan
θ= 1, θ = 45. சீரான வேகம் எனில் முடுக்கம் = 0 ,எனவே நீரின் மட்டம் கிடைமட்டமாகவே இருக்கும்
No comments:
Post a Comment