Micro aspects of developing inherent potentials
தேவையான போது பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நூல்களை வாங்கி பார்வையில் படுமாறு அடுக்கி வைத்துக் கொள்வது அறிவாகாது .அந்த நூல்களை அவ்வப்போது படித்துவிட்டு செய்திகளை எடுத்தாள்வதும் அறிவாகாது .அவற்றை எந்தச் சூழ்நிலையிலும் பயன்படுத்திக் கொள்ளும் விதத்தில் புரிந்து கொள்வதுதான் உண்மையான அறிவாகும் .அதிகமாகத் தெரிந்திருப்பதும் அறிவாகாது. கொஞ்சமே படித்திருந்தாலும் அது பயன்படத் தக்கதாக இருந்தால் அதுவே அறிவு.அவர்களே பலவான்களான புத்திமான்களாவர் ஏனையோரெல்லாம் புத்தியால் நோஞ்சான்களே ஆவர்.
ஒருவர் முன்னேற வேண்டுமானால் அவருடைய தனித்திறமை மேம்பட வேண்டும். ஒரு குடும்பம் அல்லது ஒரு சமூகம் ,அல்லது ஒரு நாடு முன்னேற வேண்டுமானால் தனித்திறமை கொண்டவர்கள் அதிகம் வேண்டும்.
நாம் பலரோடும்,பல நிகழ்வுகளோடும் தொடர்புடையவர்களாக இருக்கும்போதுதான் அறிவைப் பயன்படுத்தும் விதத்தைத் தெரிந்து கொள்கிறோம் .ஒதுங்கி இருந்தால் அறிவின் முழுப்பயனைப் பெறுவதில் பின்தங்கி விடுகின்றோம். ஒதுங்கி ஒதுங்கிப் போவதால் பல வாய்ப்புக்களை இழப்பதோடு தனித்திறமையை வளர்த்துக்கொள்ளவும் தவறிவிடுகின்றோம்.காட்டில் ஒரு குட்டி மிருகம் தான் தாயோடு தொடர்பு கொண்டு வாழ்வதற்குத் தேவையான அனைத்து விஷயங்களையும் கற்றுத் அறிந்துகொள்கிறது.
அறிவு என்பது நிலையாற்றல் தான் .அது சேமிக்கப்பட்டுப்
பயன்படுத்தப்படாமல் பொதிந்திருக்கும் ஆற்றல்.பயன்படுத்தக் கூடிய அறிவு என்பது இயக்க ஆற்றல்.நிலையாற்றலை இயக்க ஆற்றலாக மாற்றும் வித்தையே பயனறிவு .நிலையாற்றல் எப்போதும் நிலையாற்றலாகவே இருக்குமானால் அதனால் யாருக்கும் யாதொரு பயனுமில்லை.பயன்படுதித்திக்
கொள்ளப்படாத அறிவு கல்லாமை போன்றதே .அணையில் தேக்கி வைக்கப்பட்ட நீர் போன்றது. தேவையான போது ஆறுகளில் பாய்ந்து சென்றால்தான் நிலம் வளம் பெறும். இல்லாவிட்டால்
அந்நீரால் என்னபயன்?
No comments:
Post a Comment