Thursday, September 5, 2013

Vethith Thanimangal-Chemistry

வேதித் தனிமங்கள் செனான்(Xenon) கண்டுபிடிப்பு 
வளிமண்டலக் காற்றில் மொத்த பருமனில் 0.086 % செனான் என்ற மந்த வளிமம் உள்ளது 1898 ல் சர் வில்லியம் ராம்சே என்ற இங்கிலாந்து நாட்டு அறிஞர் வளிமண்டலக் காற்றைக் குளிர்வித்து நீர்மமாக்கி,அதிலுள்ள சேர்மங்களை ஆவியாக்கி நீக்கிய பின்பு கிடைத்த எச்சத்திலிருந்து ஆர்கான் தவிர்த்த பிற மந்த வளிமங்களான ஹீலியம்,நியான்,கிரப்பிட்டான் மற்றும் செனான் ஆகியவற்றைக் கண்டறிந்தார்.இவை வெவ்வேறு வெப்ப நிலைகளில் நீர்மமாவதால் அவற்றை மிக எளிதாகப் பிரித்தெடுக்க முடிகிறது .
பண்புகள் 
Xe என்ற வேதிக் குறியீட்டுடன் கூடிய செனானின் அணுவெண் 54 அணு நிறை 131.30 அடர்த்தி 5.50 கிகி /கமீ. இதன் அடர்த்தி காற்றின் அடர்த்தியைப் போல 5 மடங்கு உள்ளது.இதன் றைநிலையும் கொதிநிலையும் முறையே 161.3 K,165.1 K ஆகும் .இது நிறமற்ற,மணமற்ற,சுவையற்ற ஒரு வளிமமாகும்.

நீண்ட காலமாக செனான் முழு மந்தமானது என்றும் பிற தனிமங்களுடன் சேர்மங்களை உண்டாக்க நிலையற்றதாக உள்ளது என்றும் கருதினர்.இதற்குக் காரணம் அதன் சுழி இணைதிறனே ஆகும் .ஆனால் அண்மையில் செனான் புளுரினோடு சேர்மங்களை உருவாக்கியுள்ளதாக அறிந்துள்ளனர் . செனான் ஹைட்ரேட், சோடியம் பெர் செனேட்,செனான் டியூடரேட்,டை புளுரைடு,டெட்ரா புளுரைடு, ஹெக்கா புளுரைடு,செனான் பிளாட்டினம் புளுரைடு,செனான்
ரெனியம் புளுரைடு போன்ற செனான் சேர்மங்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.சூரிய வெளிச்சத்தில் 400 C வெப்ப நிலையில் செனான் புளுரினுடன் நேரடியாக இணைகின்றது. 
பயன்கள்
வெற்றிடக் குழாய் வழி மின்னிறக்கம் செய்யும் போது செனான் வளிமம் நீல நிறமளிக்கின்றது.செனான் வளிமம் எலெக்ட்ரான் குழாய் ,லி வேறுபாடுகளை அறியும் விளக்குகள் ,மாணிக்க லேசரைத் தூண்ட உதவும் விளக்குகளில் பயன்படுகின்றது 
செனானின் அணு எண் அதிகமாக ருப்பதால் குமிழ் கலனில்(Bubble Chamber) பயனுறுதின் மிக்க ஊடகமாகப் பயன்படுத்தப்படுகின்றது. அயனி என்ஜின்களில் இணக்கமான ளிமமாகக் கொள்ளப்படுகின்றது. பெர் செனேட்டுக்கள் ஆக்ஸிஜினேற்றியாகப் பயன்படுகின்றன.செனான் கதிரியக்க அணு எண்மம் -138 ளி மண்டல ஆய்வுகளில் தடங்காட்டியாகப்(tracers) பயன்படுகின்றது.செனான் நச்சுத் தன்மை கொண்டதில்லை எனினும் அவற்றின் பல சேர்மங்கள் ஆக்ஸிஜினேற்றியாக இருப்பதால் நச்சுத் தன்மை கொண்டிருக்கின்றன. 


No comments:

Post a Comment