Creative thoughts
மூளை எண்ணங்களின் பாதுகாப்புப் பெட்டகமாக இருக்க வேண்டும், குப்பைத் தொட்டியாக இல்லை.ஒரு முறை நினைத்த எண்ணங்கள் உடனே மறக்கப்படுவதில்லை.ஆழமாக நினைவில் பதிவாவதுமில்லை .மீண்டும் மீண்டும் நினைக்கப்பட்டு புதிப்பிக்கப்படும் எண்ணங்களே பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்படுகின்றன.எண்ணத்தை பாதுகாப்புப் பெட்டகத்தில் வைப்பதும் குப்பைத் தொட்டியில் போடுவதும் ஒருவருடைய விருப்பத்தில்தான் அமைகின்றன
நிலம் உன் தாய்
நீர் உன் தந்தை
வேர் உன் ஒழுக்கம்
சல்லிவேர் உன் திறமை
கிளைகள் உன் முயற்சி
இலைகள் உன் வளர்ச்சி
கனிகள் உன் புகழ்
உலகில் பிரச்சனைகள் இல்லாத மனிதர்களே கிடையாது. பிறந்த குழந்தைக்குக் கூட பிரச்சனைகள் உண்டு.அதனால் தான் அவை அழுகின்றன.பிரச்சனைகளே இல்லாமல் இருக்க வேண்டுமென்றால் ஒன்று பிரச்சனைகளைத் தீர்வு செய்ய வேண்டும் அல்லது பிரச்சனைகளை விட்டு ஒதுங்கி இருக்க வேண்டும்.தீர்வு செய்வது அறிவு ஆற்றல் அழகு,ஆண்மை,நன்மை,வளர்ச்சி,விரிவு,வீரம்.ஒதுங்கி இருப்பது அழிவு,சோம்பல்,அறிவீனம்,திறமையின்மை,
தீமை,குறுக்கம்,கோழை.
ஒரு மனிதன் தன்னுடைய பலவீனத்தை உணராமல் பலத்தைச் சரியாக
எடைபோட முடியாது .தோற்ற எடை இழப்பு குழப்பத்தை ஏற்படுத்திவிடுகின்றது.பலத்தை ஒரு தட்டிலும் பலவீனத்தை மறு தட்டிலும் வைத்து நிறுத்தாலே சரியாக மதிப்பீடு செய்யமுடியும்.
எதையும் அவசரப்பட்டு கற்க இயலாது.எப்படி எதையும் அவசரப்பட்டு செய்யமுடியாதோ,அவசரப்பட்டு முடிவு எடுக்க முடியாதோ அதுபோல. அவசரப்பட்டு கற்கும் போது புரிதல் இல்லாமையால் அதன் பயன்பாடும் இல்லாதிருக்கும்.
No comments:
Post a Comment