விண்வெளியில் உலா
அல்டையருக்கு
அருகாமையில் 3.71 தோற்ற ஒளிப்பொலிவெண்ணுடன்45 ஒளி
ஆண்டுகள் தொலைவில் அல்சேயின்(Alshain) என்ற பீட்டா(β)
அக்குலியே உள்ளது.ஆனால் அக்குலியே வட்டாரத்தில் இதை விடத் தோற்றப் பிரகாசமிக்க
விண்மீன்கள் பல உள்ளன.460 ஒளிஆண்டுகள் தொலைவில் 2.72 என்ற
தோற்ற ஒளிப்பொலிவெண்ணுடன் டாராஸ்டு(Tarazed)என்ற காமா(γ) அக்குலியேயும் 83ஒளிஆண்டுகள் தொலைவில்
2.99தோற்ற ஒளிப்பொலிவெண்ணுடன் டெனெப்(Dheneb)என்ற
சீட்டா(ζ)அக்குலியேயும்என்ற,287 ஒளிஆண்டுகள்
தொலைவில் 3.24 தோற்ற ஒளிப்பொலிவெண்ணுடன்தீட்டா(θ) அக்குலியேயும் 50ஒளி
ஆண்டுகள் தொலைவில்3.36 தோற்ற ஒளிப்பொலிவெண்ணுடன் டெல்டா (δ) அக்குலியேயும் 125 ஒளி ஆண்டுகள் தொலைவில்
3.43 தோற்ற ஒளிப்பொலிவெண்ணுடன் அல்தாலிமையின்(Althalimain) என்ற லாம்டா அக்குலியேயும் பீட்டா
அக்குலிலேயை விடப் பிரகாசமாகத் தெரிகின்றன.
ஈட்டாஅக்குயிலே 1170 ஒளி ஆண்டுகள்
தொலைவில் 3.87 தோற்ற ஒளிப்பொலிவெண்ணுடன் மாபெரும் விண்மீனாக உள்ளது.இது
ஒரு சிபிட்ஸ்(Cipids) வகை
மாறொளிர் விண்மீன்
என்று 1783 ல் ஜான்குட்ரிக் என்பார் கண்டறிந்தார் .உருவ மாற்றத்தின் போது இதன் ஒளிப்பொலிவெண் 3.6லிருந்து 4.5 என்ற நெடுக்கையில் 7 நாள் 4 மணி சுற்றுக்காலத்துடன் மாற்றம்
பெறுகின்றது.இதனால் ஏற்படும் பிரகாச மாற்றத்தை
வெறும் கண்ணால் கூட காணமுடிகின்றது. சொல்லப்போனால்
இது போன்ற மாறொளிர் விண்மீன்களை அக்குயிலிட்ஸ் என்றே அழைக்கவேண்டும்.ஆனால் சிபிட்ஸ் என்று வழக்கத்தில் நிலைபெற்று விட்டதால் இக்கலைச்சொல்
ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
1918 ஜூன் மாதத்தில் வானவியலார் அக்குயிலா வட்டாரத்தில் திடீரென்று ஒரு புதிய விண்மீன் தோன்றியதைக்
கண்டனர்.ஒரு சில மணி நேரத்தில் இந்த விண்மீன் சீரியஸ் போல மிகப்
பிரகாசமாக மாறியது. சில நாட்களுக்கு முன்பு எடுத்த இதே விண்மீனின் ஒளிப்படத்துடன் ஒப்பிட்டுப் பார்த்த போது இந்த விண்மீனின்
பிரகாசம் 100,000 மடங்கு ஆறு நாட்களில் அதிகரித்திருப்பது தெரிந்தது. இதை முதலில் புதிய விண்மீன் என்றும் புதிய வரவு என்றும் நம்பினார்கள். பெருமப் பிரகாசத்தை எட்டிய நோவா அக்குயிலியே பின்னர் மங்கத் தொடங்கியது. எனினும் எந்த வீதத்தில் அதிகரித்ததோ அதே அளவில் இல்லாது மிக மெதுவாகக்
குறைந்தது. 100 மடங்கு குறைய 1 மாதகாலமும், இயல்பு நிலையை எட்ட ஏழு ஆண்டுகளையும் எடுத்துக்கொண்டது .
இவ் வட்டாரத்தில் NGC
6803,NGC 6891 என்று பதிவு செய்யப்பட்ட கோளக நெபுலாக்களும் NGC 6709 என்ற தனிக் கொத்து விண்மீன் கூட்டமும் உள்ளன.
No comments:
Post a Comment