Micro
aspects of developing inherent potentials
“புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை”
என்ற கவிஞகரின் பாடல் வரிகளைத் திரைப்படத்தில் சந்திரபாபு பாடுவார். இந்தப் பாடலின் வரிகள் அவர் குரலோடு இன்னும் நினைவில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது
புத்திசாலித்தனத்தால் வெற்றி பெறலாம்.ஆனால் எப்போதும் வெற்றி பெற்றுவிடமுடியாது .வெற்றி பெறுவதற்காக புத்திசாலித்தனம் என்றாலும் புத்திசாலித்தனத்தால் வெற்றி என்றாலும் அது தவறாகும்.ஏனெனில் அவையிரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடையனவாக இருந்தாலும் வேறு சிலவற்றோடும் தொடர்புடையனவாக இருக்கின்றன .புத்திசாலித்தனம் வேறு ,வெற்றி வேறு . புத்திசாலித்தனம் என்பது ஒருவன் அவனைத் தீட்டிக்கொண்ட விதம் .வெற்றி என்பது புத்தியை எப்போது (காலம்),எவ்விடத்தில் (இடம்) எப்படி (முறை),ஏன் (காரணம் ) பயன்படுத்துகின்றாய் என்பதைப் பொறுத்தது . வெற்றியின் மீதுள்ள ஆசையில் புத்தியை மிக விரைவாகப் பயன் படுத்தும் போது தவறுவது இயற்கை போலத் தோன்றினாலும் இயற்கையில் அப்படி இல்லை
இயற்கை ஒருபோதும் தவறாமல் மகத்தான வேலைகளைச் செய்து முடித்துவிடுகின்றது.அதற்குக் காரணம் அது எப்போதும் நிதானமாகச் செயல்படுவதும் ,செயலைச் செயலுக்காகச் செய்வதும் தான்.
சும்மா இருப்பது நிதானமில்லை. நிதானம் என்பது வேறு சும்மா இருப்பது என்பது வேறு.
No comments:
Post a Comment