Creative
thoughts
உழைக்காமல் கிடைக்கும் எதுவும் ஒரு சில நாட்கள் பயன்தரலாம்.ஆனால் வாழ்க்கை முழுதும் நற்பயனளிப்பதில்லை
கடின உழைப்பின்றிக் கிடைக்கும் எந்த வெகுமதியும் மதிப்புள்ளதில்லை
உன் தேவைகளை நீ தேடினால் அது வளர்ச்சி, நான் கொடுத்து விட்டால் அது விலையில்லாப் பொருள். அப்போது நீ உழைப்பை மறந்து விடுவாய்.கருவிகளைக் கொண்டு பயனீட்டத் தெரியாதவன், பயன் கொடுக்கத் தெரியாதவனாகவே இருப்பான்.
ஒருவன் மொழியைக் கற்றறிந்திருந்தால்
அவன் தன் விருப்பம் போல கவிதை,கட்டுரை எதை வேண்டுமானாலும் படைக்கலாம். நானே ஒரு கவிதை எழுதி அவனிடம் கொடுத்து விட்டால் அதைச் சபையில் சரியாகப் படிக்கக் கூட அவனுக்குத் தெரிவதில்லை.ஒரு தச்சனிடம் சில கருவிகளைக் கொடுத்தால் அவன் தன் விருப்பம் போல தேவையறிந்து மரச் சாமான்களைப் படைப்பான். நானே ஒரு சிம்மாசனத்தை அவனிடம் கொடுத்து விட்டால் அவன் அதில் ஏறி அமரக் கூட பயப்படுவான்.தன் படைப்பாற்றலை இழந்துவிடுவான்.
உழைக்கவேண்டும் என்ற எண்ணமும் நேர்மையும் இருக்கும் வரை தோல்வி என்ற பயம் தலை தூக்குவதில்லை.
முன்னேறி மேலே போகும் போது வேகத்தைக் கட்டுப்படுத்தலாம் .இக் கட்டுப்பாடு புறக் காரணங்களைப் பொருத்து நாம் மேற்கொள்ளும் செயல்களினால் இருக்கும்.ஆனால் பின்னேறும் போது இந்த வேகக் கட்டுப்பாடு நம்மை மீறியதாக இருக்கும்.புறக்காரணங்களோடு நம்முடைய இயலாமையும் கைகோர்த்துக் கொண்டு விடுகின்றது
உழைக்காமல் எப்போதும் ஓய்வாயிருப்பது தப்பு. அவன் சாகாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றான். ஓய்வில்லாமல் எப்போதும் உழைத்துக்கொண்டிருப்பது அதைவிடத் தப்பு. அவன் வாழாமல் செத்துக் கொண்டிருக்கின்றான்.
ஆற்றலின் உழைப்பே பொருளானது. அதனால் இப் பேரண்டமே உருவானது. ஒரு சின்ன விதையின் உழைப்பே பெரிய மரமானது. அதுவே இவ்வுலகிற்கு உணவானது.
No comments:
Post a Comment