Wednesday, September 25, 2013

Mind without fear

Mind without fear 
ஆண்களை விடப் பெண்களே சிறந்த பணியாளர்களாக இருக்கின்றார்கள் என்பது இப்போது அலுவலக நிர்வாகிகளுக்குப் புரிய வந்திருக்கும் ஒரு புதிய உண்மையாகும்.பெண்களுக்குச் சரியான  பாதுகாப்பு இருக்குமானால் எல்லா அலுவலகங்களிலும் பெண்களே பணியில் சேர்ந்திருப்பார்கள். அவர்கள் பாதுகாப்பின்மையினால் ஒதுக்கிக் கொண்டதால் தான் ஆண்களுக்கு பணி வாய்ப்புக் கிடைக்கின்றது .
இதற்குக் காரணம் பெண்கள் பணியைப் புறக்கணிப்பதில்லை. .நேர்மையாக,ஒழுங்காக,முழுமையாகச் செய்கின்றார்கள்.கூடுதல் நேரம், கூடுதல் பணி கொடுத்தாலும் அதைச் செய்வதற்குத் தயக்கம் காட்டுவதில்லை. லஞ்சம்,ஊழல் போன்றவற்றில்
டுபடுவதில்லை.முரட்டுத்தனமாக செயல்படுவதில்லை.தீய

எண்ணங்ளை வளர்த்துக் கொள்வதில்லை. முடிந்த ரை இணைந்து செயலாற்றுகின்றார்கள். பணியில் அன்பு,அறம் அதிகம். பெண்கள் மட்டுமே தாயாக இருக்க முடியும்ன்பதால் அவர்களுடைபண்பில் அன்பும்,அறமும் இல்பாகவே மிகுந்திருக்கின்றது.ஒரு பெண் சிறந்த தாயாக இருப்பாளேயானால் அவள் நாட்டிருக்கு நல்ல குடிமக்களைத் தரமுடியும்.சாதாரணமான ஒருவன் எதிர்காலத்தில்  மிகச் சிறந்த சாதனையாளராக வருவதற்குப் பல காரணங்கள் இருக்கலாம் .ஆனால் உடல் ஊனமுற்ற ஒருவன் எதிர்காலத்தில் மிகச் சிறந்த சாதானையாளராக வருவதற்கு ஒரு காரணம்தான் இருக்கிறது. அது அவனைச் சரியாக கவனித்துக் கொள்ளும் அவனுடைய தாயைத் தவி வேறு யாரும் இருக்க முடியாது. 

No comments:

Post a Comment