தத்துவம்
ஒரு மனிதன் பிறக்கும் போது அவனுடன் கூடவே இரண்டு மிருகங்கள் பிறக்கின்றன.அவற்றில் ஒன்று அசைவ உண்ணி,மற்றொன்று சைவ உண்ணி .பிறந்த பிள்ளையைத் தாய் கவனித்துக் கொள்வாள். ஆனால் பிள்ளைக்குள்ளே இருக்கும் அந்த மிருகங்களைக் கவனிக்கும் பொறுப்பு பிள்ளைக்குரியதாகின்றது. பிள்ளை மனிதனாக வளரவளர உள்ளுக்குள் இருக்கும் அந்த மிருகங்கள் ஒன்றையொன்று அழிக்கப் போராடித் தன் ஆதிக்கத்தை நிலை நாட்ட முற்படுகின்றன. அசைவ உணவை ஊட்டி வளர்த்த மிருகம் முரட்டுத்தனமாக காட்டு மிருகம் போல வளர்கின்றது .ஒரு காலகட்டத்தில் அந்த மிருகம் அவனுக்குக் கூட கட்டுப்படுவதில்லை.சைவ உணவை ஊட்டி வளர்த்த மிருகம் வளர்ப்பு மிருகம் போல வளர்கின்றது.
இந்த வளர்ப்பு மிருகத்திற்கு அன்பு ,பாசம் இரக்கம்,,நன்றி ,சந்தோஷம் ,உற்சாகம் ,உதவி இவைதான் தெரியும்.ஆனால் பொல்லாத அந்தக் காட்டு மிருகத்திற்கு பொறாமை,கோபம்,ஆத்திரம்,சூழ்ச்சி,கள்ளம்,கபடம் அகங்காரம், இவைதான் தெரியும் . இதில் எந்த மிருகத்தை ஒரு மனிதன் ஊட்டி வளர்த்து அதன் ஆதிக்கத்தில் வளர்கின்றானோ அவன் அந்த மிருகத்தைத் தான் தன் குணத்தில் பிரதிபலிக்கின்றான். நாம் கடவுளின் படைப்பு .ஆனால் நம்முடைய குணங்கள் யாவும் நம்முடைய வளர்ப்பு
No comments:
Post a Comment