Saturday, September 14, 2013

Vethith Thanimangal-Chemistry

வேதித் தனிமங்கள் சீசியம்(Cesium) -கண்டுபிடிப்பு 
சீசியம் ஒரு கார மண் உலோகமாகும் .நிறமாலை மூலம் அறியப்பட்ட முதல் தனிமம் இதுவேயாகும் .
1846 ல் எல்பா தீவுகளிலிருந்து பெறப்பட்ட னிமங்களை ஆராய்ந்த போது பிரைட் ஹௌப்ட்(Breithaupt)  என்ற கனிம வல்லுநர் நிறமுள்ள குவார்ட்ஸ்சைட் வகைகளில் கவனம் செலுத்தினார் அதற்கு
போலிசைட்(Pollycite) என்று பெயருமிட்டார்.இது ஒரு சமயம் ஜெர்மன் நாட்டு வேதியலாரான பிளாட்னர்(Plattner) என்பாரிடம் பகுப்பாய்விற்குச் சென்றது .அதிலுள்ள சேர்மானத்தை கணக்கிட்டபோது மொத்தம் 92.75 சதவீதம் மட்டுமே கணக்கிற்கு வந்தது போதிய மூலப்பொருள் இல்லாததால் இவ்வாய்வைத் தொடராமல் விட்டுவிட்டார். எனினும் இதில் சோடியம்,பொட்டாசியம் போன்ற கார உலோகங்களின் சேர்க்கை மிகுந்துள்ளது என்றும் சீசியம் சால்பேட்டை தவறுதலாக சோடியம் பொட்டாசியம் சால்பேட்டுகளின் கலவை என்றும் முடிவு செய்தார்.

1860 ல் புன்சனும் கிர்சாப்பும் ஊற்று நீரில் சேர்ந்துள்ள பல்வேறு உப்புகளின் வேதியியல் பண்புகளை நிறமாலை வரிகள் மூலம் ராய்ந்து கொண்டிருந்தனர்.கால்சியம்,ஸ்ட்ரான்சியம்,மக்னீசியம்,லித்தியம் இவற்றை ஒரு மாதிரியிலிருந்து பிரித்தெடுத்த பின்பு எஞ்சிய துளியின் ஆவியை நிறமலைமானியால் ராய்ந்தனர்.அப்போது செறிவான,நெருக்கமான இரு வரிகள் நீல நிறப் பகுதியில் காணப்பட்டன.இத்தகைய நிறமலை வரியைத் தரக்கூடிய காரத் தனிமங்கள் ஏதும் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதால் இது புதிய தனிமமாக இருக்க வேண்டும் என முடிவு செய்தனர். இதற்கு சீசியம் எனப் பெயரிட்டதும் இவர்களே. இலத்தீன் மொழியில் சீசியஸ் என்றால் நீலத் தன்மை என்று பொருள்
பண்புகள் 
Cs என்று குறிப்பிடப்படும் சீசியம் அணுவெண் 55 ம் அணு நிறை 132.91 ம் ,அடர்த்தி 1900 கிகி/கமீ ம் கொண்டது இது காரத்தன்மை மிக்கதாகவும் நேர் மின்னூட்டம் மிக்கதாகவும் இருக்கின்றது.பாதரசம், காலியம் மற்றும் சீசியம் இவை மூன்றும் றை வெப்ப நிலையில் நீர்மமாக இருக்கின்றன.சீசியம் ஹைட்ராக்சைடு கார நிலை மிக்கது,கண்ணாடியையும் பாதிக்கின்றது. இதற்குக் காரணம் சீசியம்  ஆக்ஸிஜன் மீது மிகுந்த நாட்டம் கொண்ட ஒரு உலோகமாகும்.
பயன்கள் 
ஒளித்துகள் பெருக்கி(Photo multiplier) என்ற சாதனம் ஒளி ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றுகின்றது.இது அணுக்கதிர் ஆய்வில் முக்கியப் பங்கேற்றுள்ளது. இதில் பல எதிர்மின் வாய்கள் சீரான மின்னழுத்த வேறுபாட்டுடன் அமைக்கப்பட்டிருக்கும்.எதிர்மின் வாய்கள் எல்லாம் சீசியம் -ஆண்டிமொனி அல்லது வெள்ளி மக்னீசியம் உலோகத்தால் ஆனவை .இதில் ஒளி விழும் போது அதன் பரப்பிலிருந்து எலக்ட்ரான்கள் உமிழப்படுகின்றன. இவை முடுக்கப்பட்டு அடுத்த எதிர் மின் வாயில் குவிக்கப்பட்டு மேலும் எலக்ட்ரான்கள் பெருக்கப்படுகின்றன. இறுதியாக அவை நேர்மின் வாயில் குவிக்கப்பட்டு அளவிடப்படுகின்றன.அதன் செறிவிலிருந்து அதற்கு மூல காரணமான அணுக்கதிரின் தன்மையை மதிப்பிடலாம்

சில கரிம கூட்டுப் பொருட்களில் ஹைட்ராஜனூட்டம் செய்வதற்கு சீசியம் ஒரு வினையூக்கியாகச் செயல்படுகின்றது.அண்மையில் சீசியத்தின் ஒரு புதிய பயன்பாட்டை அறிந்துள்ளனர்.அயனி உந்தலியக்க முறையில் சீசியம் பயன்படுகின்றது.ஒரேயளவு திண்ம அல்லது நீர்ம எரிபொருளை விட 140 மடங்கு சீசியம் ஒரு செயற்கைக் கோளை  உந்தித் தள்ளுகின்றது , சீசியம்  அணுக் கடிகாரங்களில் பயன்படுகின்றது .சீசியம் கடிகாரம் ஒரு வினாடிக்கான (பன்னாட்டு அலகு முறையில் ) வரையறையாகக் கொள்ளப்பட்டுள்ளது . சீசியம் அணுவின் இரு ஆற்றல் நிலைகளுக்கிடைப்பட்ட ஆற்றலை இது அடிப்படையாகக் கொண்டுள்ளது .இது அணுவெண் அலகில் 9192631770 ஹெர்ட்ஸ் ஆகும் .எனவே ஒரு வினாடி என்பது அடி ட்ட ஆற்றல் நிலையில் கந்தப்புத்தால் பிரியும் இரு நுண் நிலைகளுக்கிடையே நிகழும் பரிமாற்றத்தால் சீசியம் -133 உமிழும் அணுக்கதிர் வீச்சின் 9192631770 திர்வுளாகும். 

No comments:

Post a Comment