Thursday, September 12, 2013

Philosophy

தத்துவம் 
கல்வி கற்கும் மாணவர்கள் எப்படி இருக்கவேண்டும் என்று பலர் பலவிதமாகக் கூறியிருக்கின்றார்கள்.எல்லோருடைய கருத்தும் ஏறக்குறைய மாணவர்களுடைய ஒழுக்கம்,நேர்மை,முயற்சி,தொண்டு இவற்றை மையம் கொண்டிருக்கும்.சமுதாய நலனுக்காக கல்வியைப் பயன்படுத்தும் நோக்கம் மாணவர்களிடம் மேலோங்கி இருக்க வலியுறுத்துவார்கள். 

சீன ஞானி கான்பூசியஸ் மாணவர்களை மூன்று வகைப்படுத்துகின்றார். முதல் தரம் வானம்பாடிப் பறவை போன்றவர்கள். வானம்பாடி ழைத்துளி மேகத்திலிருந்து பிரிந்து பூமியில் விழுவதற்கு முன்னதாகவே வானவெளியில் தன் கினால் பற்றிக் கொள்ளும்.துல்லியமாகச் சரியாகவும்,விரைவாகவும் செய்ய முடிந்தால் மட்டுமே ழைத்துளியை இப்படிக் கவர முடியும்.பறவைக்கு இது வெறும் பயிற்சியினால் மட்டும் வந்ததில்லை.இது அதனுடைய உள்ளார்ந்த இயல்பு,வாழ்வதற்குத் தேவையான ஆதாரம்.வானம்பாடி போன்ற மாணவர்கள் கல்வியைக் கற்கும் போதே அதைப் புரிந்து கொள்வதோடு விரித்துக் கொண்டு பயன்படுத்திக் கொள்ள சிந்திக்கும் திறனையும் வளப்படுத்திக் கொள்வார்கள். கல்வியைப் பயன்படுத்திப் பயனீட்டும் வழிமுறையினால் சமுதாய நலம் காப்பார்கள். வேற்றுச் சிந்தனைகளுக்கு நினைவில் இடமும்,நிகழ்வில் நேரமும் இல்லாததால் தீய செயல்களைச் செய்யத் துணிவதில்லை  இவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்திக் காட்ட வாய்ப்புக்களைத் தேடிச் செல்வார்கள்.வாய்ப்புகள் வரும் வரை காத்திருக்க மாட்டார்கள் .

முத்துச் சிப்பி போன்றவர்கள் இரண்டாம் கையினர் .முத்துச் சிப்பி ழைத் துளிக்காக நெடு நாள் காத்திருக்கும் .ழைத் துளி விழுந்ததும் அதை வாங்கிக் கொண்டு வாயை மூடும்.முத்துச் சிப்பி முத்தினை உருவாக்க இதைச் செய்கிறது.முத்துக்களைப் பெற்று பயன்படுத்த வேண்டுமானால் கடலில் முத்துக் குளிக்க வேண்டும்.முத்துச் சிப்பி போன்ற மாணவர்கள் தங்கள் திறமையை ஒரு குறிப்பிட்ட துறையில் ஒரளவு பெரிதாக வளர்த்துக் கொள்வார்கள்.இவர்களுடைய புலமையையும் திறமையையும் மற்றவர்களே இனமறிந்து வெளிப்படுத்த வேண்டும். இவர்களுக்கு வாய்ப்புக் கிடைத்தாலும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளத் தெரியாது.  

தவளையைப் போன்றவர்கள் மூன்றாமவர். தவளை ழைக்கு முன்னும்,பெய்யும் போதும், பெய்த பின்பும் தொடர்ந்து த்திக் கொண்டே இருக்கும். தன்வாயால் தானே கெடுவது தவளையின் இயல்பு.இவர்கள் தையும் புரிந்து கொள்ள விரும்புவதில்லை.அறிந்து கொள்ளுவதுமில்லை.தானே எல்லாம் அறிந்தவன் போல பேசுவார்கள் .மற்றவர்கள் பேசினால் குறுக்கிட்டுப் பேசுவார்கள் தையும் காது கொடுத்துக் கேட்க மாட்டார்கள்.இவர்கள் தானும் கேட்டு சமுதாயத்தையும் கெடுப்பார்கள். 

நாம் எந்த ரகம் என்பதை நாமே முடிவு செய்து கொள்ளலாமே.

No comments:

Post a Comment