Sunday, September 8, 2013

Kavithai

முன்னேற்றம் 
சாலை வசதிகளை மேம்படுத்தாமல் 
வாகனங்களை அதிகம் அனுமதிக்கின்றோம் 
பள்ளிகளில் வசதிகளை மேம்படுத்தாமல் 
கல்வியின் முழுப்பயன் பெற நினைக்கின்றோம் 
மறுத்துவ மனைகளில் வசதிகள் இல்லாமல் 
நோயாளிகளைக் குணப்படுத்த முயல்கின்றோம் 
உணவுப் பொருள் கைவசமில்லாமல் 
நீரைக் குடித்து வாழப் பழகிக்கொள்கிறோம் 

பசுவிற்கு தீவனம் வைக்காமல் 
பால் கறந்து விற்க முயற்சிக்கின்றோம் 
அழித்து வனவளங்கள் இல்லாமல் 
மழை வேண்டிப் பிரார்த்திக்கின்றோம் 
உழைத்து சம்பாதிக்க விருப்பமில்லாமல்
பிறர் சம்பாத்தியத்தை ஆசைப்படுகின்றோம் 
சட்டியில் ஒன்றுமில்லாமல் 
ஏதோ கிடைக்க துளாவிப் பார்க்கின்றோம் 

திறமைகளை வளர்த்துக் கொள்ளாமல் 
பெரிதாய்ச் சம்பாதிக்க துடிக்கின்றோம் 
முன்னேற முடியுமா முதலில்லாமல் 

முன்னேறினாலும் நிலைக்குமா எந்நாளும் 

No comments:

Post a Comment