Friday, September 27, 2013

Vethith thanimangal-Chemistry

வேதித் தனிமங்கள் -பேரியம் -கண்டுபிடிப்பு
1774 ல் ஷீலே என்ற இங்கிலாந்து நாட்டு விஞ்ஞானி பேரியம் தாதுவைக் கந்தக அமிலத்தில் சேர்த்த போது வெண்மையான ஒரு வீழ்படிவு உண்டாவதைக் கண்டார். இது ஏதோ ஒரு புதுத் தனிமமாக இருக்க வேண்டும் என்று நம்பினார்.ஆனால் அவரால் அத் தனிமத்தைத் தனித்துப் பிரித்தெடுக்க முடியவில்லை.1808 ல் சார் ஹம்ரி டேவிக்கு ந்தப் பெருமை கிட்டியது.அவர் நீர்மங்களின் ஊடாக மின்சாரத்தைப் பாய்ச்சி அதில் கரைந்துள்ள கரைபொருளை அதன் கூறுகளாகப் பிரிக்கும் ஒரு புதிய வழிமுறையைப் பயன்படுத்திக் கொண்டதால் இது இயலுவதாயிற்று. பேரியம் குளோரைடை உருக்கி மின்னார் பகுப்பு மூலம் பேரியத்தைப் பிரித்தெடுக்க முடியும். 
பண்புகள் 
இதன் வேதிக் குறியீடு Ba ஆகும். இதன் அணுவெண் 56, அணுநிறை 137.34, அடர்த்தி 3510 கிகி/கமீ, ருகு நிலையும் கொதி நிலையும் முறையே 977.2 K ,1873 K ஆகும்.
கிரேக்க மொழியே பேரியத்திற்குப் பெயர் சூட்டியது. அம் மொழியில்
பாரோஸ் என்றால் கனமான என்று பொருள்(பேரியம் ஆக்ஸைடு அப்போது கனமான பொருளாகக் கருதப்பட்டது)
இது மென்மையான,யம் போன்று பளபளப்பான வெண்மையான உலோகமாகும். வறண்ட காற்றில் நிலையானது,ரக் காற்றில் ஆக்ஸினேற்றம் பெறுகின்றது. இது காற்றில் எளிதாக எரிகின்றது.ஆல்கஹால் நீரோடு வினைபுரிந்து ஹைட்ரஜனை உற்பத்தி செய்கிறது. ஆக்ஸிஜனேற்றத்தைத் தடுக்க தைப் பெட்ரோலியம் போன்ற ஆக்ஸிஜன் இல்லாத நீர்மங்களால் காப்புச் செய்ய வேண்டும்.இது கார மண் தொகுதியைச் சேர்ந்த ரளவு வீரியம் மிக்க உலோகமாகும். பூமியின் மேலோட்டுப் பகுதியில் கிடைக்கும் தனிமங்களுள் இது 6வது  இடத்தில் உள்ளது. 
பயன்கள் 

பேரியம் ஆக்ஸிஜனுடனும் ரத்துடனும் உடனடியாக வினையாற்றும் தன்மையால்,வெற்றிடம் தோற்றுவிக்க வேண்டிய வெளியில் பேரியத்தைச் சிறிதளவு இட்டு தேவையற்ற வளிமங்களை அகற்றிக் கொள்ள முடிகின்றது. பேரியம் கலந்த கலப்பு உலோகங்கள் பொறித் தக்கைகளைச்(Spark plug) செய்யப் பயன்படுகின்றன.ஏனெனில் இது வெப்ப உமிழ்வு(thermionic emission) எலெக்ட்ரான்களை வெளிவிடுகின்றது.எலெக்ட்ரான் வால்வுகளில் எலெக்ட்ரான் உமிழ்வானாக ஆக்சைடு பூச்சிட்ட பேரியம் பயன் தருகின்றது 
பேரியம் ல்பேட், பிளாஸ்டிக், செயற்கை ழை,ளிப்படப் பதிவுத் தாள் மற்றும் லித்தோபோன் என்ற வெண்ணிற வர்ணத்திற்கு நிறமியாக உள்ளது.மத்தாப்பு,வெடிகளில் பேரியக் கூட்டுப் பொருள் ச்சை நிறம் தருகிறது.பேரியம் பிளாட்டினோ சயனைடு மின்மினுப்பு எண்ணி(Scintillation counter) போன்ற அணு ஆய்கருவிகளில்  பயன்படுகின்றது இது ஆல்பா மற்றும் பீட்டாக் கதிர்களுக்கு உடனொளிர்வைத் தருகின்றது. பேரியம் டைட்டானேட் ர் லிமின்(Piezo electric) படிகமாகும். இது கேளா லியை(Ultra sound) உற்பத்தி செய்யப் பயன்படுகின்றது.பேரியத்தின் மற்றொரு கூட்டுப் பொருளான பேரியம் சோடியம் நையோபேட்டும் லிமின் விளைவுக்கு உட்படுகின்றது.
பேரியக் கூட்டுப் பொருளின் மற்றொரு முக்கியப் பயன் உயர் வெப்பநிலை மீக் கடத்திகளா விளங்கும் பீங்கான் பொருட்களைத் தருவதாகும். பேரியம்(Ba),காரீயம்(Pb), பிஸ்மத்((Bi) மற்றும் ஆக்ஸிஜன் கலப்புள்ள ஒரு கூட்டுப் பொருள் Ba Pb1-x Bix O (BPB  என்று குறிப்பிடப்படும் இதில்x- ன் மதிப்பு சுழியிலிருந்து 1 வரை மாறுகின்றது.) BPB - ன் மின்னியல் பண்புகள் x- ன் மதிப்பைப் பொருத்து பெரிதும் வேறுபடுகின்றன.இதன் பெயர்ச்சி வெப்ப நிலை 13.7 K ஆகும்.லான்தனம்-பேரியம்-செம்பு (La-Ba-Cu-O) இவற்றின் ஆக்சைடுகளின் கலப்பு 30 K வெப்ப நிலை வரை மீக் கடத்துகின்றது இதன் மீது அழுத்தத்தைச் செயல்படுத்தி பெயர்ச்சி வெப்பநிலையை 40 K க் முதல் 57 K வரை அதிகரிக்க முடிகின்றது . யெட்ரியம் -பேரியம்-செம்பு இவற்றின் ஆக்சைடுகளினால் ஆன கலப்பு உலோகம் (YBCO) 0-90 K என்ற வெப்ப  நிலை வரை மீக் கடத்துகின்றது. இதில் புளூரினேற்றம் செய்து பெயர்ச்சி வெப்ப நிலையை 155 K வரை உயர்த்த முடியும் என்ற தெரிவித்துள்ளனர். பேரியமும்,பேரியக் கூட்டுப் பொருட்களும் நஞ்சானவை. .எனினும் பேரியம் சல்பேட் வீதி விக்கானது. இதன் காரணம் அது பொதுவாக நீரிலும், ஹைட்ரோ குளோரிக் அமிலத்திலும் கரைவதில்லை. எக்ஸ் கதிர் மருத்துவர் பேரியம் சல்பேட்டை நோயாளியின் உணவுப் பாதையில் உட்செலுத்தி உடலுறுப்புக்களை எக்ஸ் கதிர் மூலம் ஆராய்கின்றார்.பேரியம் சல்பேட் மிகவும் அடர்த்தியான உப்பாக இருப்பதால் அது எக்ஸ் கதிருக்கு ஒளி கடத்தாப் பொருளாகி விடுகின்றது

பேரியம் கார்போனேட்,பேரியம் நைட்ரேட்,பேரியம் குளோரைடு பேரியம் ஹைட்ராக்சைடு,பேரியம் சல்பைடு,பேரியம் குளோரேட் பேரியம் அசிடேட் போன்றவை நச்சுத்தன்மை கொண்டவை.இதில் பேரியம் கார்போனேட்டும்,பேரியம் சல்பைடும் எலிகளைக் கொல்வதற்கான நச்சு வில்லைகளில் பயன்படுகின்றன

No comments:

Post a Comment