Mostly in Tamil language in different topics-kavithai,Cartoon,Chemical elements(Vethith thanimangal),Structure of universe and galaxy(Vinveliyil Ulaa),Unwritten letters (Eluthatha Kaditham),Sonnathum Sollathathum(Quotes from Modern Scientists),Mind without fear (encouragement to depressed students),Micro aspects of inherent potentials (self development),Fun with Mathematics,Scientific Tamil
Friday, July 31, 2026
Sunday, July 26, 2026
ஏமாற்றுபவர்கள் ஏமாந்தவர்களை ஏமாற்றினால் நீங்கள் யாரை குறைகூறுவீர்கள் ? ஏமாற்றுபவர்களையா அல்லது ஏமாந்து போவோர்களையா ? என்னைக் கேட்டால் நான் ஏமாற்றுபவர்களையே தண்டிக்க வேண்டும் என்று கூறுவேன் . கோழியா இல்லை முட்டையா எது முதலில் வந்தது என்பதைப்போல முதலில் வந்தது ஏமாற்றுபவர்களா அல்லது ஏமாந்துபோவோர்களா ? ஏமாற்றுபவர்கள் இல்லாவிட்டால் ஏமாந்துபோவோர்கள் இருக்க மாட்டார்கள் .ஏமாந்தவர்கள் என்ற இனம் இயற்கையாக வந்ததில்லை .அது ஏமாற்றுபவர்களினால் மட்டுமே உருவானது . ஏமாற்றுவது என்பது சார்பில்லாத தன்னிச்சையான செயல் . ஏமாறுவது என்பது சார்புறு செயல்.எனவே முதலில் கட்டுபடுத்த வேண்டியது ஏமாற்றுபவர்களையே
ஏமாற்றுதல் ,ஏமாறுதல் என்ற வினைச் செயல்களில் ஏமாற்றுதல் மட்டுமே தன்வினைச் செயல் , ஏமாறுதல் என்பது எம்மாற்றப்படுவதை தடுத்துக்கொள்ள செய்யவேண்டிய எதிர் வினைச் செயலின் செயலின்மை .ஒருவன் நேர்மையாக சமுதாயத்தோடு இணக்கமாக வாழ இந்த இரு வினைகளுமே தேவையில்லை. நேர்மைத்தவறி வாழ நினைப்பவர்கள் ஏமாற்றுவதை த் தொழிலாகக் கொள்கின்றார்கள் . ஏமாற்றுவது வந்ததால்தான் ஏமாறுவது வந்தது. ஏமாற்றுவது இல்லையென்றால் ஏமாறுவதும் இல்லை .ஏமாற்றுவது என்பது இயற்கையின் பார்வையில் மனித இயல்பு இல்லை . அது தீயவர்களின் தீய பண்பு. இது எப்போதும் மறைவொழுக்க நடவடிக்கைகளாகவே இருக்கும் ஏமாற்றுபவர்கள் இயற்கையின் வரம்பிற்கு அப்பாற்பட்டு இயல்புநிலைக்கு மீறிய இயல்புகளை வளர்த்துக்கொள்ள வேண்டியிருக்கு . ஆனால் ஏமாற்றப்படுவோம் என்பதை அறியாமல் அதை தடுத்துக் கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கற்றுக்கொள்ளாமல் போவதால் ஏமாந்துபோவோர்கள் ஏமாந்து போகின்றார்கள்
Friday, July 24, 2026
Human Psycology
A person by appearence is single but his mind is always double - one is open and other is hidden. Every human being possesses two distinct types of minds. Generally, these two minds do not align with each other. The reason for this is that every individual has created and cultivated one mind for themselves and another for society. An open social mindedness is develpned as a way to demonstrate concern for the community's well-being—ensuring one is not ostracized while living within it. Usually the open mindedness is exposed when the person is in a group or among public with an aim that the other will think high about him when this persona is genuine, the individual is largely a good person, whereas when it is feigned, they tend to be somewhat malevolent. In contrast, the mind that contemplates self-interest while in solitude differs from this open social persona, effectively causing the individual to don a mask.The nature of these two minds of a person can be seen by throwing 500 rupee note in the street in which he passes by, if he is alone he may take the money and keep in his packet ,it is done as said by his own and hidden mind. If he is walking along with few unknown public, he will pretend by searching the money loser ultimately he will put it in a hundi in temple.
These two different minds determines the real character of a person. A person cannot be 100 % good or 100 % bad The percentage of mixing of these two minds measures how good or bad a person is.
Thursday, July 23, 2026
I am happy to say that one of my research orineted book is published today by Amazon KDP,USA. I did this research for more than one and half years.
Message from Amazon KDP
Hello,
Congratulations, your book “Optimization of Bohr's Theory of Hydrogen atom” is now live and available for purchase in the Kindle Store and enrolled in KDP Select! If you republished your book, your changes will be published based on these timelines.
We hope you enjoy the benefits of KDP Select. In addition to your KDP royalties, you’ll earn a share of the monthly global fund from Kindle Unlimited for each page a customer reads in your book for the first time. Plus, you can use the book promotion tools, including Kindle Countdown Deals, time-bound promotional discounting on Amazon.com or Amazon.co.uk, or a Free Book Promotion.
Sunday, July 19, 2026
Psycology test-I
First prepare a kind of very simple question paper the nature of which depends upon the person considered for psycological examination . Suppose the person to be tested is suspected thief. I give him a question paper which contain a set of questions .Each question has 5 photos of famous people either living or past. For example in the first question very strict police, very liberal, corruptive , very non reactive,helpful to criminals . Give the question paper to rank them in the order 1 to 5 (no same rank) in accordance to one's taste. Like this a set of five corruptive politicians belonging to different parties, corruptive government officials having differrnt skill , kings who ruled India with different character etc., How much time he takes to answer each question , is the any same ranking ? From the knowledge of the score earned and the deviation from the setter's assessment the mind of the criminal can be read.
I am happy to say that one of my researh oriented books entitled optimization of Bohr's Theory of Hydrogen atom is published on 23-7-2026 by Amazon KDP , both kindle and paper back. Please give your valuable feedback
Saturday, July 18, 2026
எதிர்பார்க்கப்படும் எதிர்கால இலாபங்களுக்காக இன்றைக்கு அழிவைச் செய்வதை இந்தச் சமுதாயம் மாற்றமின்றி காலங் காலமாய் ஏற்றுக்கொண்டுள்ளது. ஊழல் ,லஞ்சம் போன்றவை இதன் மாற்றுருவங்களே . ஆன்மிக வழிமுறைகளிலும் இது சமுதாய எதிர்ப்பின்றி மக்களால் பின்பற்றப்படுகின்றது .எது சமுதாய மாற்றமில்லாமல் பின் தொடரப்படுகின்றதோ அது மக்களின் எதிப்பின்றி ஏமாற்றுவதற்கும் , ஏமாற்றப்படுவதற்கும் ஒரு வழிமுறையாகி நிரந்தரமாகிவிடும் . அதன்பிறகு மக்களால் மட்டுமல்ல சட்டத்தால் கூட தடுக்கமுடிவதில்லை
I am happy to say that one of my researh oriented books entitled optimization of Bohr's Theory of Hydrogen atom is published on 23-7-2026 by Amazon KDP , both kindle and paper back. Please give your valuable feedback
Monday, July 13, 2026
V
; ஒவ்வொருவரும் அவரவர்களுக்கு ஏற்படும் துன்பங்களுக்கும் இழப்புகளுக்கும் அவர்களுடைய அறியாமையும் ஆசைகளும் தான் காரணம் என்று ஒருபோதும் உணர்வதில்லை . எடுத்துச் சொன்னாலும் ஒப்புக்கொள்வதில்லை. மக்களின் இந்த உணர்வை ஏமாற்றுக்காரர்கள் பலவிதங்களில் பயன்படுத்திக்கொள்கின்றார்கள். உரிமையில்லாத கல்வி எல்லோரிடமும் இருக்கும் வரை அதை ஏமாற்றுக்காரர்கள் பயன்படுத்திக்கொள்வார்கள் . பாடத்திட்டத்தில் மாற்றம் வேண்டும் என்ற சூழலில் இக்கருத்தை மனதில் கொள்ளவேண்டும்
I am happy to say that one of my researh oriented books entitled optimization of Bohr's Theory of Hydrogen atom is published on 23-7-2026 by Amazon KDP , both kindle and paper back. Please give your valuable feedback
எல்லா ஆட்சியாளர்களும் மக்களுக்கான நேர்மையான பணியாளர்களை அமர்த்துவதற்கு விட தங்களுக்கு இணக்கமான , தாங்கள் சொல்வதை மறுப்பின்றி அப்படியே செய்து முடிக்க க் கூடிய பணியார்களையே நியமனம் செய்கின்றார்கள். அரசு சம்பளத்தில் அவர்களுக்கு ஒரு வேலையாள் கிடைத்துவிடுகிறது .இதனால் ரெட் டேப்பிசம் உட்புகுந்துவிடுகின்றது.
Saturday, July 11, 2026
Practical Psycology-2
The mind of all people is two folded - one for his own. It is his secret agent At all time he will follow the silent words spelled by this inherent mind . The other one is open for the shake of public..If one is good usually the other one will be bad.Larger the diffeence larger will be his observed and real character. The best way to read the mind of a human to ascertain his real character is properly assessing this difference. The practical psycologists have proposed few methods -three interviews with the concerned alone, in the presence of his friends and in the presence of his opponents separately.
I am happy to say that one of my researh oriented books entitled optimization of Bohr's Theory of Hydrogen atom is published on 23-7-2026 by Amazon KDP , both kindle and paper back. Please give your valuable feedback
Thursday, July 9, 2026
I have some ideas on the applicability of human psychology , a kind of modern scientific study of the mind and behavior. It explores how biological, environmental, and cognitive factors—such as memory, perception, and social conditioning—shape our thoughts, feelings, and actions . The success of any orgnaization is connected with the devlopment of such factors among its employees. Before giving appointment order, the employer must be clever to choose the proper candidates . Because they only can cater the concern at all times - voluntarily involve in the promotion and performance of the company with his creative and innovative ideas, take part in its ups and downs-maintain good relationship with employer and co-workers etc., Beyond the required qualifictions,specificed skill and wellness of the body, one must know the social attitude of the employee that is the connecting factor between employer-employee-public. This can be done very succefully with the help of human psychology. There are few well designed methods- (1) comparison between personal interview and group interview,(2)comparison between one's behaviour and stable character when they work alone and with group ,(3) questionnaire MCQ, (4) getting answers for typical set of questions.
The study of human psychology helps to investigate the mind of criminals, the truthness of their statement can be studied and confirmed with the help of questionnaires properly prepared.
It provides mind without fear. Counselling for couples waiting for divorce , for students who failed in their studies, for merchants lost his capitals can be done wiht Human psychology.
I am happy to say that one of my researh oriented books entitled optimization of Bohr's Theory of Hydrogen atom is published on 23-7-2026 by Amazon KDP , both kindle and paper back. Please give your valuable feedback
Wednesday, July 8, 2026
100 ஆண்டுகள் வாழ்வது எப்படி என்ற நூல் வெளியீட்டுவிழா .50 வது வயதில் அவர் எளிதிய 100 வது நூல்.எல்லோரும் பாராட்டிப் பேசினார்கள் மகிழ்ச்சியால் இதயம் துள்ளாமல் துள்ளியது விழா முடிந்து கனத்த இதயத்துடன் வீடு திரும்பிய நூலின் ஆசிரியர் வீட்டின் கதவைத் தட்டிவிட்டு காத்திருந்தார் .அதிக மகிழ்ச்சியை அவரது சின்ன இதயம் தாங்கிக்கொள்ளவில்லை. கதவைத் திறந்த மனைவியின் மேல் கட்டையாகச் சாய்ந்தார். 100 ஆண்டுகள் வாழ்வது எப்படி நூலின் முதல் பிரதி கீழே விழுந்து கிடந்தது. கையில் வைத்திருந்த மாலை அதன் மேல் விழுந்து இறுதி மரியாதை செய்தது .
Tuesday, July 7, 2026
கோயிலுக்குப் போய் கையெடுத்துக் கும்பிட்டவர்களுக்கெல்லாம் கடவுள் கொடுத்துவிட்டால் நாட்டில் ஏழைகளும் வறுமையும் இல்லாதிருக்கும். ஆனால் ஏழ்மையும் வறுமையும் கோயில்கள் ,கடவுள்கள் இருந்தும் மக்களிடையே நிலைத்து வருகின்றன என்றால் கடவுளுக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றுதான் நினைக்கவேண்டியிருக்கின்றது . முயன்று உழைக்க விருப்பமின்றி எல்லாம் தனாகக் கிடைக்கவேண்டும் என்று விரும்பி உழைப்பில்லா வருமானத்திலேயே எல்லோரும் அக்கறை காட்டும் போது ஏமாற்றி ப் பிழைக்கும் எண்ணமே தலைதூக்குகின்றது.
Sunday, July 5, 2026
இந்திய அரசியல்வாதிகள் பெரும்பாலானோர் பயனுறுதிறன் அற்றவர்க ளாகவே இருக்கின்றார்கள். ஆள்பவர்கள் மக்கள் பணத்தை வீண் விரயமாகச் செலவழித்தும், இலவசம் என்று வளர்ச்சியற்ற செலவினங்களை ச் செய்தும், ஊழல் செய்வதும் , லஞ்சம் பெற்றும் அரசின் நிதியை தெடர்ந்து வீணடிக்கின்றார்கள். எதிர்க்கட்சியினர் இந்த வாய்ப்புக்களை அவர்களிடமிருந்து தட்டிப்பறிக்க முயன்று வாழ்நாள்முழுவதையும் வீணடித்துவிடுகின்றார்கள். துருவிப் துருவிப் பார்த்தாலும் இந்த இரு வகையினரும் மக்களுக்கு பயனுள்ளவாறு செய்த நன்மைகள் ஏதுமில்லை
Friday, July 3, 2026
டிஜிட்டல் அர்ரெஸ்ட் என்பது ஏமாற்றுக்காரர்கள் செய்யும் தில்லுமுல்லு.அப்படி என்று எதுவுமில்லை அதனால் அதைக்கண்டு மக்கள் பயப்படத்தேவையில்லை என்று அரசு சார்பாக மக்களுக்கு அறிவுரை கூறுகின்றார்கள். ஆனால்உண்மையில் பெரும்பாலான சமுதாய மக்கள் ஏற்கனவே தங்களை டிஜிட்டல் அரஸ்ட்டை தாங்களாகவே ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.அதனால்தான் போலியான மனிதர்களை ,போலியான வாக்குறுதிகளை , போலியான செயல்பாடுகளை , போலியான விளம்பரங்ளை ,போலியான கணக்கு மற்றும் புள்ளி விவரங்களை எந்தவிதமான எதிர்ப்பின்றி நம்பும் அடிமைத்தனத்திற்கு உள்ளாகிறார்கள்.சினிமா , சுவரொட்டி ,விளம்பரம் போன்றவற்றால் ஒரேநேரத்தில் எல்லோரையும் அரெஸ்ட் செய்தது தெரியாமல் டிஜிட்டல் அர்ரெஸ்ட் செய்துவிடுகிறார்கள் . இதனால் ஹீரோயிசம் - காரணமின்றி ஒருவரைப் புகழ்தல் , பெஸிமிஸ்டிக் - காரணமின்றி ஒருவரை க் குற்றம் காணுதல் போன்ற பண்புகள் நம்மிடம் மிகுந்து வருகின்றன.
Thursday, July 2, 2026
ஒரு எரிமலை வெடித்து அனல் குழம்பை கக்கத் தொடங்கியது. இந்த முறை அது விடமால் மாதக்கணக்கில் குழம்பை உமிழ , அது வழிந்தோடி மலையடிவார கிராமங்களுக்கு ச் சென்று படிந்தது. மக்களுக்கு அது தங்கம் என்று வெகுநாட்கள் கழித்தே தெரியவந்தது . தங்கமலை ரகசியம் மலையடிவார கிராமங்களில் உள்ள மக்களுக்குத் தெரியவர பாறைப் படி வுகளை வெட்டி வெட்டி எடுத்துச் சென்றனர். போட்டி பொறாமையில் ஒருவருக்கொருவர் சண்டை போட்டு மாண்டும் போயினர் . வெட்டி எடுத்து ஒவ்வொருவரும் வீட்டில் சேர்ந்து வைத்திருக்கும் தங்கமே மலைபோல குவிய அங்கிருக்கும் மக்களுக்கு தங்கத்தின் மேல் உள்ள ஆசை குறையத் தொடங்கியது . பயனற்ற பொருளும் .பயன்படுத்தப்படாத பொருளும் ஒன்றுதான் பயன்படுத்தப்படாதபோது பயனுள்ள பொருளும் பயனற்ற பொருளாகிவிடுகின்றது .தேவையின்றி ஆசை காரணமாக சேர்க்கப்படும் எந்தப்பொருளும் பயனற்ற பொருளாகி விடும்
Saturday, June 27, 2026
ஒரு கட்சி ஆட்சிக்கு வந்தபிறகு ஆயிரக்கணக்கான திட்டங்களை ச் சொல்கின்றார்கள் . அவை பெரும்பாலும் நடைமுறைக்கு வருவதில்லை. வந்தாலும் முழுமை பெறுவதில்லை. செலவுக்கணக்கை சமர்ப்பிக்க மட்டுமே அவை உதவுகின்றன. இது வரம்பின்றி வளரும்போது கூடுதல் வரிவிதிப்பு சட்டமாகின்றது .ஆட்சியை இழந்தபிறகு மௌனமாகி விடுகின்றார்கள். மக்களைவிட வெற்றிபெற்ற எதிர்க்கட்சியினரை எதிர்ப்பதே அவர்கள் முக்கிய வேலையாகிவிடுகின்றது. ஆளுங் கட்சியினரும் எதிர்கட்சியினரும் மக்களுக்கு சேவைசெய்யவேண்டும் என்ற சுய விருப்பத்துடன் அரசியலுக்கு வந்தவர்கள் . இதைத் தனித்தனி யாகச் செய்தாலென்ன சேர்ந்து செய்தாலென்ன . சுய லாபம் கருதும்போது இது விடுபட்டுப்போகின்றது . உயிரினும் மேலான மக்களாவது மண்ணாங்கட்டியாவது
நீதியைப் பாதுகாப்பது அனைவரின் கடமை என்றாலும் நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களின் பங்களிப்பு மக்களுடையதைக் காட்டிலும் அதிகம் என்றே நான் சொல்வேன், நீதிபதிகளுக்கு அது கட்டளை.சமுதாயத்தின் நலன் காக்க தீயவைகளை அழிக்கவேண்டிய பொறுப்பு அவர்களுடையது . மக்கள் தீய செயல்களை ச் செய்யாமல் இருக்கவேண்டும் .இழப்பு ஏற்பட்டால் தீயவர்களுக்கு எதிராக வழக்குத் தொடர வேண்டும். மக்கள் அப்படிச் செயல்படும் வாய்ப்பு குறைந்துவருகின்றது. அதற்குக் காரணம் அவர்கள் செல்வாக்கு மிக்க தீயவர்களால் அச்சுறுத்தப்படுகின்றார்கள்/ தீயவர்களின் கூட்டணி அவர்களுக்கு எதிரான எல்லாச் செயல்களையும் முறியடித்து விடுகின்றார்கள் . அங்கு நீதியின் விலை நேர்மியான ஒரு தனிநபரின் ஆயுட்கால சமபாதியத்தை விட அதிகமாக இருக்கின்றது.இழப்பை ஏற்கனவே ஏற்பட்ட இழப்போடு நிறுத்திக்கொள்வதேஇனிவரும் எல்லையில்லா இழப்பை தடுத்துக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை மக்களை ஒரு குற்றத்திற்கு எதிராக புகார் அளிக்க முடியாதிருக்கிறது
Monday, June 15, 2026
நேர்மையானவன் தான் குற்றவாளியைத் தண்டிக்கும் தகுதியைக் கொண்டிருக்கின்றான் . குற்றவாளிகளே குற்றவாளிகளைத் தண்டிக்கவும் , மன்னித்துவிட்டு குற்றம் புரிய கூட்டாளியாக்கிக்கொள்வதும் இங்கு வெகு இயல்பாக அனுமதிக்கப்படுவதால் குற்றங்கள் மறைவொழுக்கமாக வளர்ந்து வருகின்றன .நீதிமன்றத்தின் நோக்கம் எனக்கு உண்மையிலேயே புரியவில்லை . குற்றம் இல்லாத சமுதாயம் என்றால் அங்கு நீதிமன்றத்திற்கு வேலையில்லை . வருமானம் வேண்டுமென்றால் குற்றவாளிகள் தொடர்ந்து வந்துகொண்டேஇருக்கவேண்டும். இதில் வழக்கறிஞர்கள் எதை விரும்புவார்கள் . குற்றவாளிகள் நிறைந்த சமுதாயாமே அவர்களுக்கு வாழ்வாதாரம் .
Wednesday, June 10, 2026
ஒரு அரசியல்வாதி ஊழல் புரியாமல் நேர்மையாகத் தன் கடமைகளைச் செய்கின்றார் என்று அவரைப் பாராட்டக்கூடாது . ஒரு ஆசிரியர் தினம் தினம் பள்ளிக்கூடத்தில் பாடம் நடத்துகின்றார் என்பதற்காக , ஒரு ஓட்டுநர் பேருந்தை நேரந்தவறாமல் ஓட்டினார் என்பதற்காக . ஒரு தபால் காரர் ஒவ்வொருநாளும் தபாலை உரியவரிடம் சேர்க்கிறார் என்பதற்காக, ஒரு கடைக்காரர் எடை குறையாமல் நிறுத்துப்போடுகின்றார் என்பதற்காக, ஒரு ஊழியர் ஒப்புக்கொண்ட படி ஒரு வேலையைச் செய்து முடித்தார் என்பதற்காக யாரும் யாரையும் பாராட்டவேண்டியதில்லை. கடமைகளுக்கு அப்பாற்பட்டு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் மனிதாபிமானத்துடன் செய்யப்படும் சில செயல்களுக்கு பாராட்டலாம் . அப்பொழுதுதான் அது போன்ற நல்ல செயல்களை செய்ய எல்லோரும் முன்வருவார்கள் சமுதாயத்திற்கு பயன்தராத ஒருவருக்கு மட்டும் பயன்தருகின்ற தவறான புகழ்ச்சி உரைகளை எல்லோரும் தவிர்க்கவேண்டும்
ஒருவர் தன்கடமையைச் சரிவரச் செய்யவேண்டும் . அதற்கு அவர் பாராட்டை எதிர்பார்க்கக்கூடாது . கடமைகளுக்கு அப்பாற்பட்டு தவறுகளை ச் செய்ய அவர்க்கு அதிகாரமும் செல்வாக்கும் இருக்கும்போது அதைச் செய்யக்கூடாது . செய்யும் கடமைகளில் சாதனை படைக்கும் போது பாராட்டலாம் . அனால் இன்றைக்கு அரசியல்வாதிகள் கடமைகளை ச் சரிவரச் செய்வதில்லை. தவறுகள் பல செய்கின்றார்கள் . அதை மறைத்து விட்டு அடிமைத் தொண்டர்களின் அறியாமையைப் பயன்படுத்தி இவர்கள் புகழ் பாடவைத்து மக்களுக்கு எதோ நல்லது பண்ணியதைப்போல ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி விடுகின்றார்கள் .விளம்பரத்திற்காகவே ஒரு தொலைக்காட்சி சானல் . பத்திரிக்கை யாளர்களுக்கு ஊக்கத் தொகை . உரிமையில்லாத அறிவுள்ளவர்களால் இந்த நாடு ஒரு சில தீயவர்களின் பிடியில் சிக்கிக்கொண்டு வருகின்றது. வரும் ஆபத்தை உணர்ந்து எல்லோரும் இணைத்து செயல்பட்டாலே சமுதாய முன்னேற்றம் சாத்தியம் . நாம் மேலும் மேலும் பிரிவதற்கான காரணங்களை த் தேடிக்கொண்டிருக்கும் போது இது காணாமற் போய்விடுகின்றது
Subscribe to:
Posts (Atom)