அறிக இயற்பியல்
ஒரு துகளொன்று எளிய சீரிசை அலைவியக்கத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்றது .ஒரு குறிப்பிட்ட பாதையை மீண்டும் மீண்டும் கடந்து சம காலத்தில் ஓர் அலைவை ஏற்படுத்துவதையே சீரிசை அலைவியக்கம் என்கிறோம்.ஓய்வுச் சமநிலையிலிருந்து அலையும் துகள் விலகிச் செல்ல அதன் மீது செயல்படும் மீள் விசை அதிகரிக்கின்றது. இந்த மீள் விசை எப்போதும் ஓய்வுச் சமநிலையை நோக்கிச் செயல்படுவதோடு இடப்பெயர்ச்சிக்கு நேர் விகிதத்தில் இருக்கின்றது இதை மீள் விசை (F) =
- k (மாறிலி) x இடப்பெயர்ச்சி(y) எனலாம் .இதில் k
என்பது விசைமாறிலி எனப்படும் .
F = ma = m
d2y /dt2 = - ky இதில் a = முடுக்கம் ,அலைவியக்கதிற்கான ஒரு பொதுச் சமன்பாடு y = A Sin (ωt + θ) இதிலிருந்து d2y /dt2 = - w2y .இது
ω = (k /m)1/2 என்ற தொடர்பையும் T = 2π (m /k)1/2 என்ற தொடர்பையும் தருகின்றது .
ஒரு துகள் ஒரு நேர் கோட்டில் சீரிசை அலைவியக்கத்தில் இயக்கிக் கொண்டிருக்கின்றது. அதன் இடப்பெயர்ச்சி ஓய்வுச் சமநிலையிலிருந்து
x 1, x 2
என்றிருக்கும் போது அதன் இயக்க வேகம் u 1 , u 2
ஆக இருந்ததென்றால் அதன் அலைவு நேரம் எவ்வளவு ?
நேர்கோட்டுத் திசை வேகத்திற்கும் கோணத் திசை வேகத்திற்கும் உள்ள தொடர்பு v = r ω எனவே u 1= ω (a 2 - x 12),u
2= ω (a 2- x 22).இதிலிருந்து
u l 2 - u 22
= ω 2 (x 22- x 12)
.ω வின் மதிப்பைக் கண்டறிந்துT = 2π /ω வைக் கொண்டு அலைவு நேரத்தை மதிப்பிடலாம்
No comments:
Post a Comment