ஒரு சிறந்த அரசுக்கு அழகு குடிமக்களின் நலனை மேம்படுத்தும் வகையிலான சிறந்த நிர்வாகம். குடியுயரத்தானே கோன் உயரும் என்று சான்றோர்கள் பலரும் கூருயிருக்கின்றார்கள்.அரசும் மக்களும் ஒன்றுக்கொன்று நெருக்கமான தொடர்பு கொண்டுள்ளன.ஆணவத்தால் இதைஇருவருமே சரியாகப்புரிந்து கொள்ளவில்லை.மக்களின் நலனில் தொடர்ந்து அக்கறை காட்டாத,மக்களை ஏமாற்றிப் பிழைக்க நினைக்கின்ற அரசாங்கங்கள் நிலைபெற்று வாழ்ந்ததாக சரித்திரமில்லை.
ஆட்சி புரிவது ஒரு தொழிலல்ல. அது ஒரு சமுதாயப் பணி .முன்பெல்லாம் உடல் மற்றும் மனரீதியில் தகுதியான ஒருவரைத் தேர்ந்தெடுத்து,அத் தகுதி பரம்பரைக்கும் பொருந்தும் எனமக்கள் நலனைக் காக்கும் பொறுப்பை அவரிடம் கொடுத்தனர். பின்னர் எல்லோருக்கும் வாய்ப்புக் கிடைத்தால் மாறுபட்ட அணுகுமுறையாலும்
,வேறுபட்ட சிந்தனைகளாலும் சமுதாய முன்னேற்றம் மேலும் முடுக்கப்படலாம்,ஆட்சி புரிவோர் வளர்த்துக் கொண்ட சர்வாதிகாரப் போக்கிற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கலாம் என்ற எண்ணத்தில் தோன்றியது மக்களாட்சி.
ஆட்சியையும் அதிகாரத்தையும் பயன்படுத்துபவர்கள் அவற்றைத் தனதாக்கிக் கொள்ள நினைக்கின்றார்கள்.இதற்குக் காரணம் அங்கே சுயநலத்தைத் தடையின்றி நிறைவேற்றிக் கொள்வதற்கு இருக்கும் வாய்ப்புக்களைத் தேடிக் கண்டுபிடித்து ஆதாயம் அடையும் வழிகள் ஏராளமாய் இருப்பதுதான்.இந்திய மக்களில் நம்பமுடியாத அளவிற்கு அபரிதமான பொருளாதார முன்னேற்றத்தைப் பெற்றவர்கள் அரசியல்வாதிகள் தான்.புள்ளிவிவரங்கள்
இதை வெளிப்படுத்திக் காட்டியிருக்கின்றன.
மக்களிடம் விழிப்புணர்வு ஓரளவு தூண்டப்பட்டிருக்கின்றது என்றாலும் அவர்கள் தொடர்ந்து வாழ்வதற்கு தொடர்ந்து பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டியிருப்பதால் இதை எதிர்த்துத் தொடர்ந்து போராடமுடிவதில்லை .
வரியால் மட்டுமே ஆட்சி செய்துவிடமுடியாது .ஏனெனில் இதை ஒரு அளவிற்கு மேல் உயர்த்திக்கொள்ள முடியாது.ஒரு நல்ல அரசாங்கம் பிற வழி முறைகளால் வருவாயைப் பெருக்க முயலவேண்டும்.
இந்த கூடுதல் வருவாய் அரசாங்கத்தின் நடப்புச் செலவுக்காக இல்லாமல் உண்மையான மக்கள் நலத் திட்டங்களுக்கான செலவுகளாக இருக்கவேண்டும். வெறுப்புக்களை ஏற்படுத்தும் செயல்களைச் செய்யாமல் பொறுப்போடு மக்களின் நம்பிக்கையை மேலும் மேலும் அதிகமாகப் பெறுவதற்கான செயல்பாடுகளைச் செய்வது ஆட்சியாளர்கள் இலக்கணம் .
சட்டங்கள் எல்லோரும் பொதுவானது .எல்லோராலும் எல்லோருக்குமாக இயற்றப்பட்டது .ஆட்சியாளர்களும் மக்களுக்கான அதே சட்டங்களுக்கு உட்பட்டவர்களே.
அவர்களுக்கென்று தனிச் சட்டங்கள் ஏதுமில்லை.செய்யும் தவறுகளுக்கு அரசியலை ஒரு பாதுகாப்பாகக் கொள்ளக்கூடாது .
மக்களாட்சியில் மக்களுக்கான செயல் திட்டங்களை கடைசிவரை இரகசியமாக் வைத்திருந்து இறுதியில் நிறைவேற்ற வேண்டிய அவசியமேயில்லை
.வெளிப்படைத் தன்மை எங்கும் எதிலும் இல்லாததால் அவநம்பிக்கை வெகுவாகத் தூண்டப்பட்டு வருவது தவிர்க்கயியலாததாக இருக்கிறது .
No comments:
Post a Comment