Creative
Thoughts
கோபமாய் இருக்கும் போது எடுக்கப் படும் எந்தவொரு முடிவும் சரியாக இருப்பதில்லை. மகிழ்ச்சியாக இருக்கும் போது கொடுக்கப்படும் எந்தவொரு வாக்குறுதியும் சரியாக இருப்பதில்லை.எண்ணங்கள் செயலுக்கு முன்னோடி,உணர்ச்சிகள் எண்ணத்திற்கு முன்னோடி .எண்ணங்களில் உணர்ச்சிகளின் தாக்கம் இருக்கும் போது இது போன்ற பிரச்சனைகளில் நாம் வெகு இயல்பாக சிக்கிக் கொண்டுவிடுகின்றோம். உணர்ச்சிகள் தணிந்து போன பிறகு மாறுபட்ட எண்ணங்கள் ,முந்திய எண்ணங்களை வெளியேற்றி விடுகின்றன.
ஒருவருக்கு ஒருவர் பொருளை இரண்டு விதமாகக் கொடுக்கமுடியும்.-வெகுமதியாக (அன்பளிப்பாக)
அல்லது இலஞ்சமாக.வெகுமதி என்பது ஒருவருடைய அரிய செயலுக்காக,லஞ்சம் அவருடைய இழிய செயலுக்காக. பொருள் எப்படிக் கொடுக்கப்படுகின்றது என்பதைப் பொறுத்தே சமுதாயத்தின் உண்மையான வளர்ச்சி அமையும்.
சமுதாயத்தை அதிகம் கெடுப்பவர் யார் - இலஞ்சத்தைக் கொடுப்பவரா அல்லது கொடுக்குமாறு செய்பவரா ? இதில் ஒருவர் இருக்க மற்றவரும் இருப்பார் என்பதை யாரும் புரிந்து கொள்வதில்லை.மேலும் கொடுப்பவர் வாங்குபவராகவும்,வாங்குபவர் கொடுப்பவராகவும் இருப்பதால் ,மக்களை இரு வகையாகப் பிரிப்பது கடினம்.எனினும் கொடுப்பவர் கொடுக்க வைப்பவரைக் கெடுக்கின்றார் ,கொடுக்க வைப்பவர் சமுதாயத்தைக் கெடுக்கின்றார் .கொடுப்பவர் நிலைத்து இருக்கவும்,எண்ணிகையில் அதிகரிக்கவும் விரும்புவவர் கொடுக்க வைப்பவரே.
இந்தியாவில்முழு வளர்ச்சி பெற்றுவிட்ட இலஞ்சத்தையும் திருட்டையும் இனி யாராலும் ஒழிக்க முடியாது. ஒவ்வொருவரும் அதனால் ஆதாயம் அடையவேண்டும் என்று உள்ளூர விரும்புகின்றார்கள் .அவர்களே அதனால் எதையும் இழக்க விரும்புவதில்லை,அதனால் எதிர்ப்பது போல காட்டிக் கொள்கின்றார்கள்.மக்களின் இந்த மனநிலையால் இலஞ்சமும் திருட்டும் மறைவிடங்களில் கொழுத்து வளருகின்றன.
தங்கள் தேவையைத் தாங்களே நிறைவேற்றிக் கொள்ளுமளவிற்கு சாம்பாதிக்க தகுதியோ,வழியோ ,வாய்ப்போ இல்லாததாலும் ,எல்லா இன்பங்களையும் அனுபவிக்க ஆசைப்படுவதாலும் ,வாழ்கையின் உண்மையான
நோக்கத்தைப் புரிந்து கொள்ள உண்மையான கல்வி இல்லாததாலும் ,இலஞ்சத்தையும் திருட்டையும் தடுக்க முடியாது .
No comments:
Post a Comment