விண்வெளியில் உலா -ஸ்கார்பியோ கூட்டம்
கிரேபியஸ்(Graffias) என்ற பீட்டா(β) ஸ்கார்பி 530 ஒளி ஆண்டுகள் தொலைவில் 2.56 தோற்ற ஒளிப்பொலிவெண் கொண்ட ஒரு தனி விண்மீன் போலத் தோன்றினாலும் அது ஒன்றுகொன்று தொடர்பில்லாத இரு விண்மீன்களின் இணையாக உள்ளது .ஏனெனில் துணை விண்மீன் 1100 ஒளி ஆண்டுகள் தொலைவில் 4.9 தோற்ற ஒளிப்பொலிவெண்ணுடன் காணப்படுகின்றது.
சீட்டா(ζ) ஸ்கார்பியும் அகன்ற இடைவெளியுடன் கூடிய ஒன்றுகொன்று தொடர்பில்லாத இரு விண்மீன்களின் இணையாகும் .சீட்டா-1 வெண் நீலநிறங்கொண்ட தோற்ற ஒளிப்பொலி வெண் 4.7 உடைய மாபெரும் விண்மீனாகும் .இது NGC 6231 என்று பதிவு செய்யப்பட்ட கொத்து விண்மீன் கூட்டத்திலுள்ள பிரகாசமிக்க விண்மீனாகும்.சீட்டா -2,150 ஒளி ஆண்டுகள் தொலைவில் 3.6 என்ற தோற்ற ஒளிப்பொலிவெண்னுடன் உள்ளது.
517 ஒளி ஆண்டுகள் தொலைவில் மறைப்பு வகை மாறொளிர் விண்மீனாக உள்ள மியூ(μ) ஸ்கார்பியோ ஓர் உண்மையான இரட்டை விண்மீன்.இதனால் பிரகாசமான முதன்மை விண்மீனின் ஒளிப்பொலி வெண் 2.9 முதல் 3.2 வரை 34 மணி நேர அலைவு காலத்துடன் மாறுகின்றது .துணை விண்மீனின் ஒளிப்பொலிவெண் 3.6 ஆகும்.
உமெகா(ω) ஸ்கார்பி தொடர்பில்லாத ஒரு இரட்டை விண்மீனாகும் .இவை 420, 260ஒளி ஆண்டுகள் தொலைவில் 3.9 மற்றும் 4.3 தோற்ற ஒளிப்பொலி வெண்ணுடன் உள்ளன .
65 ஒளி ஆண்டுகள் தொலைவில் 2.29 என்ற தோற்ற ஒளிப்பொலிவெண் ணுடன் வெய் (Wei) என்ற எப்சிலான்(ε) ஸ்கார்பியும்
402 ஒளி ஆண்டுகள் தொலைவில் 2.29 என்ற தோற்ற ஒளிப்பொலிவெண் ணுடன் டி சூப்பா(Dschubba) என்ற டெல்ட்டா ஸ்கார்பி(δ) யும் (இதை நாம் அனுசம் என அழைக்கின்றோம் ).464 ஒளி ஆண்டுகள் தொலைவில் 2.39 ஒளிப் பொலி வெண் ணுடன் கிர்டாப்(Girtab) என்ற கெப்பா(κ) ஸ்கார்பியும்
519 ஒளி ஆண்டுகள் தொலைவில் 2.7 ஒளிப்பொலிவெண் ணுடன் லெசாத் என்ற அப்சிலான்(υ) ஸ்கார்பியும் 430 ஒளி ஆண்டுகள் தொலைவில் 2.82 ஒளிப் பொலிவெண்ணுடன் டௌ(τ) ஸ்கார்பியும் 735 ஒளி ஆண்டுகள் தொலைவில் அல்நியாட் என்ற சிக்மா(σ) ஸ்கார்பியும் உள்ளன .சிக்மா ஸ்கார்பி ஒரு மாறொளிர் விண்மீனாகும். 703 ஒளி ஆண்டுகள் தொலைவில் 1.62 ஒளிப் பொலி வெண்ணுடன் கூடிய ஷாயுலா(Shaula) என்ற லாம்டா(λ) ஸ்கார்பியை நாம் மூல நட்சத்திரம் என அழைக்கின்றோம் .2.72 ஒளி ஆண்டுகள் தொலைவில் 1.86 ஒளிப் பொலிவெண்ணுடன் கூடிய சர்காஸ்(Sargas)
என்ற திட்டா (θ) ஸ்கார்பியும் 459 ஒளி ஆண்டுகள் தொலைவில்
2,89 என்ற ஒளிப் பொலி வெண்ணுடன் பை(π) ஸ்கார்பியும்,72
ஒளி ஆண்டுகள் தொலைவில் 3.32 என்ற ஒளிப் பொலிவெண்ணுடன் ஈட்டா (η) ஸ்கார்பியும் உள்ளன.46 ஒளி ஆண்டுகள் தொலைவில் 5.49 என்ற ஒளிப்பொலிவெண்ணுடன் 18 ஸ்கார்பி என்ற ஒருவிண்மீன் உள்ளது
நிறை ,வெப்பநிலை நிறம் ,தற்சுழற்சி போன்றவற்றால் சூரியனைப் போலவே தோன்றும் இந்த விண்மீன் நமக்கு அருகில் இருக்கும் விண்மீன்களுள் ஒன்று .இதன் பிரகாசம் சூரியனை விட 5 சதவீதம் அதிகம் .
சக்கிடாரியஸ் வட்டாரம் போல ஸ்கார்பியோ வட்டாரமும் எண்ணிறைந்த கொத்து விண்மீன் கூட்டங்களைக் கொண்டுள்ளது .M.6, M.7 எனப் பதிவு செய்யப்பட்ட இரு தனித்த கொத்து விண்மீன் கூட்டங்கள் தேளின் கொடுக்கு நுனிக்கு அருகாமையில் உள்ளன .2000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள M .6 வண்ணத்துப் பூச்சி இறக்கையை விரித்தது போல அமைந்துள்ளது .தொலை நோக்கியின் உதவியால் இதிலுள்ள விண்மீன் களைத் தனித்துப் பிரித்துப் பார்க்க முடிகிறது.இதிலுள்ள பிரகாசமிக்க விண்மீன் ஆரஞ்சு நிறங் கொண்ட மாறொளிர் விண்மீனாக உள்ளது.இதன் ஒளிப்பொலிவெண் 5 முதல் 7 வரை மாற்றத்திற்கு உள்ளாகின்றது .M.7 ன் பிரகாசம் பிளியட்சுக்கு அடுத்ததாக உள்ளது
780 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள இது கெப்பா ஸ்கார்பிக்கும்
காமா சக்கிடாரிக்கும் நடுவில் அமைந்திருக்கின்றது .முழு நிலவின் உருவத்தைப் போல இரு மடங்கு உள்ள இது நமக்கு மிக அருகாமையில் இருக்கும் தனிக் கொத்து விண்மீன் கூட்டங்களுள் ஒன்றாகும் .
அண்டாரசுக்கு 1.5 டிகிரி கோண விலக்கத்தில் M.4 எனப் பதிவு செய்யப்பட்ட ஒரு கோளக் கொத்து விண்மீன் கூட்டமுள்ளது. 7000 ஒளி ஆண்டுகள் தொலைவிலிருந்தாலும் நமக்கு அருகில் இருக்கும் கோளக் கொத்து விண்மீன் கூட்டங்களுள் இதுவும் ஒன்று .இது தோற்றத்தில் முழு நிலவின் முக்கால் பங்கு பரப்பில் விரவியுள்ளது
No comments:
Post a Comment