வேதித் தனிமங்கள் - டெக்னிடியம் -கண்டுபிடிப்பு
தனிமங்களை அட்டவணைப்படுத்தும் போது 43 வது கட்டம் வெற்றிடமாக இருந்தது.மென்டலீவ் அதற்குரிய தனிமத்தை ஏகா மாங்கனீஸ்(Eka Manganese) எனக் குறிப்பிட்டார்.தனிம அட்டவணை அடிப்படையில் இத்தனிமத்தை கண்டுபிடித்ததாகப் பலர் அறிவித்தாலும் அது தவறாகவே முடிந்தது.அப்போது இல்மெனியம் (Ilmenium)தேவியம் (Devium)
நிப்போனியம்(Nipponium) (இது ஜப்பான் நாட்டின் பழைய பெயர் ) எனப் பலவாறு பெயர் பெற்று மறைந்து போனது.மென்டலீவ் கூறியது போல இது மாங்கனீஸ் ஒந்த தனிமம் இல்லையோ என்று கூட
அய்யப்பட்டனர்.1925 ல் நோடாக் ,டாக்கே,பெர்க் என்ற விஞ்ஞானிகள் ஒன்றிணைந்து அணுவெண் 75 க்குரிய ரெஹனியத்தையும், அணுவெண் 43 க்குரிய தனிமத்தை மசூரியம் எனப் பெயரிட்டு அதையும் கண்டுபிடித்ததாக அறிவித்தனர்.மசூரியம் சில காலம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.ஆனால் எக்ஸ் கதிர் நிறமாலை மூலம் ஆய்வு செய்து அது இருக்கக் கூடிய நிலையின் நிலையாமை பற்றித் தெரிவித்தனர் .
அணு நிறைமம் (Isobar) என்பது சமமான அணு நிறை அதாவது நிறை எண்ணும் வேறுபட்ட அணுவெண்ணும் கொண்டவை .அதாவது வெவ்வேறு தனிமங்களின் ஒத்த நிறையெண்ணும்,வேறுபட்ட மின்னேற்றமும் அல்லது புரோட்டான்களும் கொண்ட அணு
எண்மங்களாகும்.எடுத்துகாட்டாக பொட்டாசியம் -40,ஆர்கான் -40 ஐக் குறிப்பிட்டுச் சொல்லலாம் .பொட்டாசியம் -40 ல் 19 புரோட்டான்களும் 21 நியூட்ரான்களும் ஆர்கான் 40 ல் 20 புரோட்டான்களும் 20 நியூட்ரான்களும் உள்ளன.அணு நிறைமங்களைப் பற்றி ஆராய்ந்த ஜெர்மன் நாட்டு இயற்பியல் விஞ்ஞானி J.Mattauch
இது தொடர்பாக ஒரு விதியை நிறுவினார்.இரு அணு நிறைமங்களுக்கிடையேயான அணுக்கரு மின்னூட்டத்தின் வேறுபாடு 1 எனில் இரு அணு நிறைமங்களில் ஒன்று கதிரியக்கமுடையதாக இருக்கும் என்று தெரிவித்தார்.அதன் பிறகு தனிம அட்டவணையில் மசூரியத்திற்கு இருபக்கமும் அடுத்துள்ள மாலிப்பிடினம்
(42),ரூத்தெனியம் (44) இவற்றின் அணு எண் மங்களின் நிறை எண்களை ஒப்பிட்டார் .மாலிப்பிடினம்
94,95,96,97,98,100 ஆகிய நிறை எண்களையும் ரூத்தெனியம்
96,98,99,100,101,102 ஆகிய நிறை எண்களையும் பெற்றிருந்தன .அதாவது 94 லிருந்து 102
வரையிலான நிறை எண்கள் தனிமம் 43 ன் அணு எண்மங்களுக்குத் தவிர்க்கப்படுகின்றன,அல்லது நிலைத்த மசூரிய அணு எண்மம் ஏதுமில்லை.அதாவது Z
=43 என்ற அணுவின் எல்லா அணு எண்மங்களும் கதிரியக்கமுடையவை,இயற்கையில் காணப்படுவதில்லை.ஜெர்மன் விஞ்ஞானியின் கருத்து ஓர் அனுமானம் என்றும்,யுரேனியம்-238,
தோரியம் -232,பொட்டாசியம் -40,ரேடியம்
-226 போல மசூரியமும் கதிரியக்கமுள்ளதாக இருக்கலாம் என்றும் கருதினர் .கனமான கதிரியக்கத் தனிமங்களின் அரை வாழ்வு அதிகமாக இருப்பதால் அவை பூமியில் எஞ்சியிருக்கின்றன .அது போலன்றி மசூரியம் குறைந்த அரை வாழ்வுடையதாக இருக்கலாம் என்பதால் அது பூமியில் இல்லாதிருக்கலாம் என்று முடிவு செய்தனர் .
இதன் பிறகு சைக்லோட்ரான் போன்ற துகள் முடுக்கிகளின்(Particle accelerators) துணை கொண்டு அணுக்கருக்களைத் தாக்கி செயற்கையாக அணுக் கரு வினைகளைத் தூண்டினர்.அணுவெண் 92 க்கும் அப்பாற்பட்ட இயற்கையில் காணப்படாத பல செயற்கைத் தனிமங்களை உற்பத்தி செய்தனர்.1936
ல் இத்தாலி நாட்டின் இயற்பியலாரான சாக்ரே(E.Sagre) மாலிப்பிடினத்தை டியூட்ரான்(deuteron) கொண்டு தாக்கி செயற்கை அணுவெண் 43 க்குரிய டெக்னிடியத்தை இனமறிந்தார் .இதுவே முதன் முதலாகச் செயற்கையாக உற்பத்தி செய்யப்பட்ட இயற்கைத் தனிமமாகும்.இதன் பிறகு இத் தனிமம் பூமியில் இருப்பதற்கான ஆய்வுகள் விரிவாக மேற்கொண்டும் பயனில்லாது போயிற்று.எனினும் இதை
S,M,N வகை விண்மீன்களின் நிறமாலைகளில் இனமறிந்துள்ளனர் .இது விண்மீன்களில் கனமான தனிமங்களின் உற்பத்தி அல்லது தொகுப்பாக்கம் பற்றிய புதிய கருத்துகளுக்கு அடிப்படையானது.
நிறை எண் 92 முதல் 107 வரையுள்ள 16 அணு எண்மங்களை இதுவரை இனமறிந்துள்ளனர்.இதில் டெக்னிடியம் 96 ன் அரை வாழ்வு 1.5 x 10 6
ஆண்டுகளாகும் .டெக்னிடியம் -95 ன் அரை வாழ்வு 61 நாட்கள் .இது ஆற்றல் மிக்க காமாக் கதிரை உமிழ்கிறது .
பண்புகள்
Tc
என்ற வேதிக் குறியீட்டுடன் கூடிய டெக்னிடியத்தின் அணுவெண் 43 ,அணு நிறை 99 ,அடர்த்தி 11500கிகி /கமீ .இதன் உருகு நிலையும் ,கொதி நிலையும் முறையே 2373 K ,4873 K
ஆகும் .
1
கிலோ கிராம் டெக்னிடியம் உலோகத்தை உற்பத்தி செய்துள்ளனர் .வெள்ளி போன்ற பளபளப்பும்,ஈரக்காற்றில் பொலிவு குன்றிப் போவதும் அறியப்பட்டன .டெக்னிடியம் சல்பேட் (Tc 2S7) டை 1100 டிகிரி வரை சூடுபடுத்தி அதன் மீது ஹைட்ரஜனை பாயச் செய்தும்,அமோனியம் பெர் டெக்னிடேட்டை ஹைட்ரஜன் மூலம் ஆக்ஸிஜ நீக்க வினைக்கு உட்படுத்தியும் டெக்னிடிய உலோகத்தைப் பெறலாம் .
இதன் வேதியல் பண்பு ஏறக்குறைய ரெஹனியத்தை ஒத்திருக்கிறது
டெக்னிடியம்,நைட்ரிக் அமிலம்,இராஜ திராவகம் அடர் கந்த அமிலங்களில் கரைகிறது.ஆனால் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தில் சிறிதும் கரைவதில்லை.கிரேக்க மொழியில் டெக்னிடோஸ் என்றால் செயற்கையான என்று பொருள் .இச் சொல்லே இத் தனிமத்திற்கு நிலைத்த பெயரானது
பயன்கள்
எஃகுப் பொருட்களுக்கு அரிமான எதிர்ப்பூட்ட அதனுடன் சிறிதளவு
டெக்னிடியம் சேர்ப்பார்கள்.எனினும் இது கதிரியக்கமுடையதால் இதைத் தகுந்த பாதுகாப்புடன் கையாளவேண்டும். டெக்னிடியம் 11 K வெப்ப நிலை வரை மீக்கடத்துகின்றது
No comments:
Post a Comment