எழுதாத கடிதம்
அரேபிய நாடுகளில் குற்றங்கள் அதிகம் நடைபெறுவதில்லை என்றும் ஒரு சில மேலை நாடுகளில் குற்றங்கள் மிகவும் குறைவாகவே இருக்கின்றது என்றும் கூறுவார்கள் .அதைப் பற்றி கேட்டறியும் போதும் படித்தறியும் போதும் நம் இந்திய நாட்டிலும் அப்படியொரு நாகரிக மேன்மையான நிலை உருவாகி வளர்ச்சி பெறாதா என்று நினைப்பதுண்டு .அரேபிய நாடுகளில் குற்றங்களுக்கு எதிராகக் கடுமையான சட்டங்கள் உள்ளன .பொது விடங்களில் கசையடியும் .மரண தண்டனையும் குற்றம் செய்ய நினைப்போரை மறு சிந்தனை செய்யத் தூண்டும் .அப்போது கிடைக்கும் கால தாமதத்தில் மனதில் நல்ல மாற்றங்கள் ஏற்படலாம் .
குறைவான மக்கட் தொகை,நிறைவான கட்டுப்பாடு,முழுமையான கண்காணிப்பு போன்ற சமுதாய அனுகூலங்கள் அவர்களுடைய நிர்வாகத்திற்கு பக்கபலமாக இருக்கின்றன.மேலை நாடுகளில் நிலைமை வேறுபட்டது .அங்கே கல்வியறிவும்,புரிதலும் பிற உலக நாடுகளை விட அதிகமாக இருப்பதாலும்,வறுமை இல்லாததால் கூடுதல் தேவைக்கு அவசியம் இல்லாததாலும்,மக்களிடம் இயல்பாகவே குற்றம் புரியாதிருக்கும் மனப்பான்மை உறுதியாக இருக்கிறது .
இந்தியாவில் சட்டங்கள் சாதுவாக இருக்கின்றன,பாய வேண்டிய நேரத்தில் கண்ணை மூடிக்கொள்கின்றன.சட்டம்,ஒழுங்கை நிர்வகிப்போர் தாங்களும் அதற்குக் கட்டுப்பட்டவர்கள் என்ற எண்ணம் இல்லாதவர்களாக இருக்கின்றார்கள்.நேர்மை நேர்மையிலிருந்துதான் உருவாகி வளர்ச்சியடையும் என்பதை முயற்சித்துப் பார்க்க இங்கே யாருக்கும் துணிவில்லை.பழைய அறநெறி நூல்களைத் தவிர வேறு நன்மைதரும் உண்மையான வழிமுறைகள் இல்லை.வெளியே தெரியவரும் 10 சதவீதக் குற்றங்களே நம்மை பெரும் அச்சதிற்குள்ளாக்குகின்றன .எதிர்கால நிம்மதியை இப்பொழுதிலிருந்தே இழந்து வருவதை எல்லோரும் உள்ளூர உணர்ந்து வருகின்றார்கள்.இப்பொழுதே குற்றங்கள் வரம்பையும் தாண்டி நடந்து வருகிறன .பேராசையால் பணக்காரர்கள் ,அரசியல் வாதிகள் ,அதிகாரிகளும் ,போதையால் நடுத்தர மற்றும் கீழ் தட்டு மக்களும் ,வறுமையால் ஏழைகளும் ,வேலையின்றி வெட்டிப் பொழுது போக்கும் இளைஞர்களும் ,சுகம் தேடும் காமுகர்களும் ,புரிதலின்றி வாழ்கையைப் பாழாக்கிக் கொண்ட தீவீரவாதிகளும்,எல்லோரும்தான் செய்கின்றார்கள் நாமும் செய்தால் என்ன என்று புரியாமலேயே இதில் ஈடுபடுபவர்களும் இந்திய நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.கண்காணிப்பில் நேர்மை
காணாமற் போய்விடுவது வளர்ச்சிக்கு அனுகூலமாயிருக்கிறது.
ஏதாவது ஒரு சில காரணங்களினால் ஒருவன் குற்றம் செய்து தண்டனையை முழுதும் அனுபவிக்க முடியாமல் போனால் அவனுக்குப் பிரியமான மனைவியோ அல்லது பிள்ளைகளோ யாரோ ஒருவர் மீதியுள்ள தண்டனையை பிறிதொரு வழியில் அனுபவிக்க வேண்டும் என்றும் இக்காலத்தில் அவர்களுக்கு தன் உறவினர்கள் குற்றம் செய்வதைத் தடுக்க மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் பற்றி
கற்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்றும்
சட்டத்திருத்தம் செய்தால் இம்மையில்
செய்த பாவங்கள் மறுமையில் தொடர்ந்து வந்து தண்டிக்கும் என்ற நீதி நெறிக்குப் பயந்து
அல்லது புரிந்து புண்ணியங்களைத் தேடிக் கொள்ளும் மக்கள் போல இவர்களும் தங்களுக்குப்
பிரியமான உறவுகள் தன்னால் பாதிக்கப்படக்கூடாது என்று விரும்பி குற்றங்கள் செய்வதிலிருந்து
தங்களைத் தாங்களே விடுவித்துக் கொள்ளலாம். .
No comments:
Post a Comment