தத்துவம்
தேடுவனவற்றுள் தெய்வம் ஒன்றே என்றும் பழுதற்ற பொருளாக இருக்கின்றது என்று பலர் மனிதர்களை மறைமுகமாக தாழ்த்திப் பேசுவதை நான்பலமுறை கேட்டிருக்கின்றேன் .இதில் தவசிகளும் அடங்கியிருகின்றார்கள் .
கடவுள் ஒரு அற்புதமான கற்பிதக் கொள்கை.கடவுளை கடவுளாகப் பார்ப்பது வேறு கொள்கையாகக் கொள்வது வேறு.கடவுளை கடவுளாகப் பார்த்து தன் ஆன்மிக நிலையை உயர்த்திக்கொள்ளும் மனிதர்கள் தாங்கள் கடவுளின் அருளைப் பெற்றுவிட்டது போலப் பேசுவார்கள்.அதைக் கொள்கையாக நினைப்போர் மிக அரிதே.
சமுதாயத்தில் மக்கள் கூடி வாழ வேண்டும்,அதற்கு ஒழுக்கம்,கட்டுப்பாடு
,நேர்மை நிறைந்து இருக்கவேண்டும்.இதில் ஏற்படும் சிறிய குறைபாடுகள் கூட சமுதாயத்தை மௌனமாய் சீரழித்து விடும். இந்த இழி நிலையை நோக்கி சமுதாயம் பரிணாம வளர்ச்சி அடையக் கூடாது என்று விரும்பிய சில சான்றோர்கள் மக்கள் எப்போதும் தூய எண்ணத்தை எண்ணும் மனத்தைக் கொண்டவர்களாக இருக்கவேண்டும் என்று கடவுள் என்ற படித்தர மனிதனைக் கற்பித்தார்கள்.கடவுளை வேண்டிக் கொண்டு ஏமாந்து போனவர்கள் கடவுளை மறுத்து வருகின்றார்கள். கடவுளைக் கொள்கையாக ஏற்றுக்கொண்டவர்கள் மெய்ப்பொருளை அறிந்துகொண்டதால் வாழ்கையில் தோல்வியுற்றாலும் கடவுளால் இன்னலுறுவதாக நினைப்பதில்லை.
கடவுளைக் கொள்கையாக நினைப்போர் மனிதர்கள் கடவுளைப் போல வாழ நினைக்கவேண்டும் என்று மட்டுமே கூறுவார்கள். மனிதனை வெறுத்து விட்டு கடவுளை மட்டும் நேசிப்பவர்கள் உலக வாழ்கையில் ஈடுப்பாடு இல்லாதவர்கள் .இவர்கள் தன்னையே வெறுத்து தன் நிழலை நேசிக்கின்ற அறிவாளிகள்.
No comments:
Post a Comment