கார்ட்டூன்
இந்தியாவிலிருந்து பல ஆயிரங் கிலோமீட்டர் தொலைவிலுள்ள அந்தமான் ,நிக்கோபார் தீவுகள் மற்றும் இலட்சத் தீவுகள் எல்லாம் இந்தியா என்கிறோம் ஆனால் மிக அருகாமையிலுள்ள ஸ்ரீ லங்காவை வேறு நாடு எனச் சொல்கிறோமே,ஏன் அப்பா அப்படி ?
மகனே,மதம் ,இனம் ,மொழி ,நாகரிகம்,கலாச்சாரம் ,பழக்க வழக்ககங்கள் என ப் பல வேற்றுமைகளைக் கொண்ட மக்கள் தங்களை வேறுபடுத்திக் கொண்டு வாழ்வதால் நாடுகள் பலவானது.ஸ்ரீ லங்காவும் அப்படித்தான் .
நல்ல வேடிக்கைதான் அப்பா.பல்வேறு வேற்றுமைகள் இருந்தாலும் எல்லோரும் இணைந்து வாழ்வதால்தானே இந்தியாவே உருவானது .வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியாவோடு ஸ்ரீ லங்காவும் ஏன் இணையக்கூடாது? இந்தியாவில் இன்னும் இரண்டு மாநிலங்கள் கூடும் .ஈழத் தமிழர் பிரச்சனை,தமிழக மீனவர் பிரச்சனை,கச்சத் தீவு பிரச்சனை என எல்லாப் பிரச்சனைகளுக்கும் அது ஒரு தீர்வாகவும் இருக்கும் .
உன் யோசனை நல்லாத்தான் இருக்கு ஆனால் நடைமுறைச் சாத்தியமில்லை .இன்னொரு படேல் பிறந்து வந்தாலும் முடியாது .
இயற்கையில் ஒன்று பலவாவதும்,பல ஒன்றாவதும் இயல்பானது .காலங்காலமாய் நடந்து வருவது.நம் மனங்கள் செயற்கையின் மயக்கத்தில் இருக்கும்போது இது எதோ விபரீதம் போலத் தோன்றுகிறது .
No comments:
Post a Comment