Friday, June 14, 2013

Creative Thoughts

.வாய்ப்புக்கள்  குறைவாக இருக்கும் போது தன்விருப்பத் தேர்வுகளும் குறைவாக இருக்கும் 

.வாழும் போதே வளரவேண்டும் வளரும் போது வாழ நினைக்க வேண்டும் .வளர்ந்து முடிந்தபின்பு வாழ்வதும் வாழ்ந்து முடிந்த பின்பு வளர நினைப்பதும் இயற்கையில் இல்லாதொன்று .

.தெய்வ நம்பிக்கை மனதிற்கு உற்சாகமென்னும் ஊதியம் கொடுக்கும் மேற்கொள்ளும் மேற்கொள்ளும்  முயற்சிகளே மனிதனுக்கு உயர்வென்னும் ஊதியம் கொடுக்கும் 

.வெற்றி என்பது இறுதியில்லை 
வெற்றிக்கு மேல் வெற்றி இல்லாவிட்டால் 
அது தோல்வியாகிவிடும் 
அதுபோல தோல்வி என்பது ம்  இறுதி யில்லை 
தோல்விக்குப் பிறகு நீ விழித்துக் கொண் டால் 
தோல்விகள் தொடர்வதில்லை 

.வெற்றியும் தோல்வியும் ஒருநாளும் இறுதி முடிவாகிவிடாது .உனக்கு இன்னும் வாழ்நாள் இருக்கும் போது வெற்றிக்கு மறு பிறப்பும் உண்டு தோல்விக்கு இறப்பு ம் உண்டு .

.நம்பிக்கை என்பது மனம் என்ற ராஜ்யத்தை நீயே ஆளும் போது தோன்றுவது .அவநம்பிக்கை என்பது ராஜ்யத்தை வேற்று நாட்டான் அபகரித்துக் கொண்டு ஆள்வது போன்றது.

.நம்பிக்கையும் அவநம்பிக்கையும் ஒன்றுக்கொன்று எதிரிகள்.இவையிரண்டும் ஒரே சமயத்தில் ஒரே இடத்தில் இருப்பதில்லை .இதில் அவநம்பிக்கை மட்டுமே நம்பிக்கை போல வேடமிட்டு ஏமாற்றிவிடும் .

.அறிவு ,உழைப்பு ,முயற்சி சுறுசுறுப்பு, போன்றவையெல்லாம் நம்பிக்கையின் உறவினர்கள் .அறியாமை ,சோம்பல் ,பேராசை ,சந்தேகம் போன்றவை அவநம்பிக்கையின் தோழர்கள். 

.அவநம்பிக்கை மனதில் புகுந்துகொண்டால் ,அது அங்கே நிலைத்திருக்க என்னென்ன செய்ய வேண்டுமோ அதையெல்லாம் தயக்கமின்றி செய்து விடும்


No comments:

Post a Comment