Thursday, June 6, 2013

Eluthaatha Kaditham

எழுதாத கடிதம்

இன்றைக்கு இந்தியாவில் பல இளைஞர்கள் புரியாமலேயே புகைக்கும் பழக்கத்திற்கு ஆளாகி உடல் நலத்தைப் பாழாக்கிக் கொண்டு வீட்டிற்கும் நாட்டின் எதிர்காலத்திற்கும் பிரச்சனையாகி வருகின்றார்கள்.புகைப்பதால் அவர்கள் மட்டுமல்ல ,அருகில் இருப்பவர்கள் நலமும் கெடுகின்றது; சுற்றுப் புறம் பெரிதும் மாசுபடுத்தப்படுகின்றது.சிகெரெட் உற்பத்தியாலும் விற்பனையாலும் வரி மூலம் அரசுக்கு நிறைய வருமானம் கிடைக்கின்றது என்பதற்காக எப்போதும் அதைத் தடை செய்ய உள்ளூர நினைப்பதில்லை.வருமானத்தை இழக்க விரும்பாத அரசு மென்மையான அறிவிப்புக்களினால் மட்டுமே மக்களுக்கு உபதேசம் செய்யும்.

ஒவ்வொரு முறையும் பட்ஜெட் வரும்போது சிகெரெட்டுக்கு வரியை உயர்த்துவார்கள்.ஆனால் அதனால் புகைப்போர் எண்ணிக்கை குறைவதேயில்லை.மாறாக சிகெரெட்டின் விலை உயர்த்தப்படும். விற்பனையில் குறைவு ஏற்படுவதில்லை.இதன் இலாபத்தை சிகெரெட் உற்பத்தி நிறுவனங்களே அடைகின்றன.கடந்த நிதியாண்டில் ITC  நிறுவனம் இலாபத்தை பெருமளவு அதிகரித்துள்ளது.(வணிகச் செய்தி).

சிகெரெட் புகைக்கப்பட்டு சாம்பலாகும்.சாம்பலாவது சிகெரெட் மட்டுமல்ல புகைப்பவன் வாழ்கையும் தான்.சிகெரெட்டால் வாழவேண்டிய மனிதனும் சிகெரெட் போல சாம்பலாவான் ஆனால் புதைக்கப்பட்டு

ஒவ்வொரு சிகெரெட்டும் உன் வாழ்நாளை ஒரு நாள் குறைத்துவிடும் .

இப்படிச் செய்யும் விளம்பரங்கள் எதற்காக? இதனால் என்ன பயன் விளைந்திருக்கிறது? சிகெரெட் புகைப்போர் கணிசமான அளவிலாவது திருந்தியிருக்கின்றார்களா?  விளம்பரச் செலவு அதிகரித்ததைத் தவிர்த்து வேறு எதுவும் நடக்கவில்லை. ஒருவேளை இந்த விளம்பரங்களைப் பார்த்து மக்கள் சிகெரெட் பிடிக்காமல் விட்டுவிட்டால் ,வருவாயில் ஏற்படும் குறைவுக்கு என்ன செய்வது  என்று அரசு  சிந்திக்கும் நிலைக்கு மக்கள் ஆளாக்கவில்லை என்பது அரசுக்குக் கிடைத்த ஒரு வெற்றி.


No comments:

Post a Comment