வேதித் தனிமங்கள் -ரோடியம் (Rhodium
)-கண்டுபிடிப்பு
1803 ல் பல்லாடியத்தின் கண்டுபிடிப்பு ரோடியத்தின் கண்டுபிடிப்புக்கு வழி வகுத்தது .தென் அமெரிக்காவிலிருந்து பெற்ற கச்சா பிளாட்டினம் ரோடியத்திற்கு ஒரு மூலமானது .இதே மூலத்திலிருந்து தான் இங்கிலாந்து நாட்டின் வேதியியலாரான வுல்லாஸ்டன் () முதலில் பல்லாடியம் என்ற தனிமத்தைக் கண்டுபிடித்தார் .
கச்சா பிளாட்டினத்தை இராஜ திராவகத்தில் கரைத்து ,காரத்தினால் உபரி அமிலத்தை நடு நிலைப்படுத்தி வுல்லாஸ்டன் முதலில் அமோனிய உப்பைச் சேர்த்து பிளாட்டினத்தை அமோனியம் குளோரோ பிளா ட் டினேட்டாகப் படிய வைத்து ,எஞ்சிய கரைசலில் பாதரச சையனைடை ச் சேர்த்து பால்லாடியம் சையனைடைப் படிய வைத்து ,பின்னர் உபரியாக இருக்கும் பாதரச சையனைடை கரைசலி லிருந்து நீக்கி வரளுமாறு ஆவியாக்கினார் .கருஞ் சிவப்பு நிறத்தில் ஒரு வீழ்படிவு தோன்றியது ,ஹைட்ரஜன் வளிமத்தை பாயச் செய்து சூடுபடுத்தி வீழ்ப டிந்த உப்பைப் பகுத்தனர் .அதிலுள்ள சோடியம் குளோரைடை நீக்கிய பின்பு உலோகப் பொடி மீந்திருந்தது .இதையே ரோடியம் என்றனர் .கிரேக்க மொழியில் ரோடான் என்றால் ரோஸ் என்று பொருள் ,ரோடியத்தின் சிவப்பு நிறம் அதற்கு ரோடான் என்ற சொல்லிலிருந்து பெயரைப் பெற்றுத் தந்தது .
பிளாட்டின உலோகங்களில் மிகவும் செழுமை குறைந்தது இந்த உலோகமே .இதற்கு இருக்கும் ஒரே கனிமம் ரோடைட் ஆகும் .இது தங்கச் சுரங்கங்களில் சில விடங்களில் காணப்படுகின்றது .எனினும் பிலாட்டினத்தின் கனிமத்தில் பெரும்பாலும் சேர்ந்து காணப்படுகின்றது .
பண்புகள்
Rh என்ற வேதிக் குறியீட்டுடன் கூடிய ரோடியத்தின் அணுவெண் 45, அணு நிறை 102.91, அடர்த்தி 12440 கிகி /கமீ .இதன் உருகு நிலை ,கொதி நிலை முறையே 2233 K ,3973 K ஆகும் .
ரோடியம் ,பல்லாடியத்தை விட உயர் உருகு நிலையும் ,தாழ்ந்த அடர்த்தியும் கொண்டது .தூய ரோடியம் வெள்ளி போன்று வெண்மையானது
.அதைப் பழுக்கச் சூடுபடுத்தும் போது காற்று வெளியில் ஆக்சைடாகி விடுகின்றது
.இன்னும் கூடுதலான வெப்பநிலையில் அது மீண்டும் உலோகமாகி விடுகின்றது ..
பயன்கள்
பிளாட்டினம் ,பல்லாடியம் ,போன்ற உலோகங்களின் வலிமையை மேம்படுத்துவதற்கு இது ஒரு கலப்பு உலோகப் பொருளாக விளங்குகின்றது .சோதனைக் கூடங்களுக்கான
உயர் வெப்ப நிலை தாங்க வல்ல குப்பிகள்,வான வூர்திகளில் பயன்படும் பொறித் தக்கைக்கான மின் முனை ,கண்ணாடி இழை உற்பத்தி முறையில் சக்கரத்தின் இருசு சுழல்கின்ற உருளைக்கு உலோகக் கலவைப் பூச்சு ,வெப்பமின் இரட்டைக்கான ஒரு உலோகக் கூறு,வெப்ப உலைகளுக்கான மின் சுருளாகவும்
ரோடியம் பயன் படுகின்றது .மின் சுற்றுக்களில் இணைப்பூட்டும் தொடுவான்களாகப் பயன் தருகின்றது .இதன் மின்தடை குறைவாக இருப்பதும்
தொடு நிலைத் தடை மாறாது தாழ்வாக இருப்பதும் ,அரிமானத் தடை மிக்கதாக இருப்பதும் இதற்கு மிகவும் அனுகூலமாக இருக்கிறது ,
மின் முலாம் மூலம் ரோடியம் பூச்சிட்ட தகடுகள் மிகவும் உறுதியாக இருப்பதால் ,பல கருவிகளைக் குறிப்பாக ஒளியியல் கருவிகள் செய்யப் பயனுள்ளதாக இருக்கின்றது
.இதன் எதிரொளிப்புக் குணகம் அதிகமாக இருக்கின்றது
.கடினமாக இருப்பதால் இது நீண்ட காலப் பயனுக்கு வருகின்றது .நகை செய்யும் தொழிலில் ரோடியத்தைப் பயன்படுத்துகின்றார்கள் .வினையூகியாகவும் வேதியியலார் பயன்படுத்துகின்றார்கள்
No comments:
Post a Comment