தத்துவம்
ஒரு குழந்தைக்கு அன்பெனும் பாலத்தால் ஒரு உறுதியான பந்தத்தில் நமபிக்கையை ஏற்படுத்துவது முதலில் தாய்தான். அதன் பின்னர் பெற்றோர்கள் குழந்தைக்கு ஆசிரியாக மாறுகின்றாரகள்.சொல்லிக் கொடுப்பவர் தான் ஆசிரியர் என்பதில்லை, செய்யும் செயல்களைப் பார்த்துப் பார்த்து தானாகக் கற்றுக்கொள்வதற்குக் காரணமாக இருப்பவரும் ஆசிரியர்தான். விலங்கு,பறவை இனங்களில் குஞ்சுகளுக்கும்,குட்டிகளும் அவற்றின் தாயே குருவாக இருக்கின்றது.ஒரு குழந்தை நல்லவனாக வருவதும் கெட்டவனாக
வாழ்வதும் உண்மையில் அது பெற்றோர்களின் கையில் தான் இருக்கிறது. இக் கருத்தைச் சொல்லாமல் ஒவ்வொரு நிமிடமும் சொல்லிக்கொண்டிருப்பவை விலங்குகளும் பறவைகளும் தான்.
ஒரு குழந்தையைப் பாராட்டி வளர்த்தால் அது தன் சுயமதிப்பை அறிந்து கொண்டு மதிப்பு மிக்க குடிமகனாக வாழத் தன் தனித் திறமைகளை மேன் மேலும் வளர்த்துக் கொள்ள அக்கறை செலுத்தும்.
பகையைச் சொல்லி வளர்த்தால் எதையும் எதிர்க்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுவதால் எல்லோரிடமும் சண்டைபோட்டு எதிரிகளை உருவாக்கிக் கொள்ளும். மனித நேயமில்லாத சமுதாயத்தில் மனிதர்கள் மகிச்சியோடு வாழமுடியாது என்பதைக் காலங் கடந்து உணர்வதால் யாருக்கும் பயனில்லை.
கேலி செய்து வளர்த்தால் கூச்சத்தால் தன் திறமைகள் அனைத்தையும் வெளிப்படுத்திக் காட்ட தயங்கி காலப் போக்கில் அவற்றை இழக்கும். படித்த புத்தகங்கள் இருக்கும்,பட்டங்கள் பல பெயருக்குப் பின்னால் இருக்கும்,ஆனால் அதற்குரிய திறமைகள் மட்டும் காணமல் போவதற்கு உண்மையான காரணம் இதுதான் என்பதை பெற்றோர்களும் ஆசிரியர்களும் தெரிந்து கொள்ளவேண்டும்
நியாயத்தைச் சொல்லி வளர்த்தால் நேர்மையாய் வாழக் கற்றுக் கொள்ளும்.சாகாத சமுதாயம்
அவர்களால் எஞ்சிப் பிழைத்து வாழும்.
அன்பாய் ஒட்டி வளர்த்தால் பிறரை நேசிக்கக் கற்றுக் கொள்ளும். குறைகளைச் சொல்லி வளர்த்தால் வெறுப்பைக் கற்றுக் கொள்ளும். எதையெல்லாம் பிள்ளைகளுக்கு அனுபவங்களின் வாயிலாகக் கற்றுக் கொடுக்கின்றோமோ அவற்றையே அவர்கள் கல்வி வழியாகக் கற்றுக் கொள்வதை விடத் திடமாக ஏற்றுக் கொண்டுவிடுகின்றார்கள் .நாம் எதை பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்கின்றோமோ அதன் பலனை பின் நாளில் வட்டியோடு திரும்பப் பெற வேண்டியிருக்கும். வாழ்க்கையைக் குறுகிய கால கண்ணோட்டத்துடன் பார்ப்பவர்களால் இதைப் புரிந்து கொள்ள முடிவதில்லை.
No comments:
Post a Comment