Friday, October 11, 2013

Vinveliyil ulaa

விண்வெளியில் உலா 
டெல்பினெஸ் 
30 விண்மீன்களைக் கொண்ட இந்தச் சிறிய வட்டாரம் அக்குயிலே மற்றும் பிகாசஸ் வட்டாரங்களுக்கு இடையில் உள்ளது. இது டால்பின் போலக் கற்பனை செய்யப்பட்டுள்ளது. பெருங்கடலுக்குரிய கடவுளான பொசிடன், தன்னை மணக்கபோகின்ற காதல் தேவதையைக் கொண்டு வருமாறு டால்பினை அனுப்பியதாகக் கதை சொல்வார்கள். பாடகரும், இசை அமைப்பாள ருமான ரியோன் ஒரு முறை கப்பலில் பயணம் செய்யும் போது கடற் கொள்ளையர்களால் தாக்கப்பட்டு கடலில் தூக்கி எறியப்படுகின்றார் அவரை இந்த டால்பீன்கள் காப்பாற்றியது என்று வேறு சிலர் கூறுவார்கள்..
இந்த வட்டாரத்திலுள்ள இரு பிரகாசமிக்க விண்மீன்கள் ஆல்பா மற்றும் பீட்டா டெல்பினி ஆகும்.இவற்றின் தோற்ற ஒளிப் பொலி வெண்கள் முறையே 3.6, 3.8 ஆகும். இவற்றை சூயலோசின்(Sualocin) என்றும் ரோடானெவ்(Rotanev) என்றும் அழைப்பார்கள்.இப் பெயரை நாம் வலப்பக்கத்திலிருந்து இடப்பக்கமாக வாசித்தால் நிக்கோலஸ்(Nicolaus) வெடோர்(Venator) என்று கிடைக்கும்..இது இத்தாலி நாட்டில் உள்ள ஒரு வான ஆராய்ச்சி மையத்தில் பணிபுரிந்த ஒரு வானவியலாரின் பெயராகும், இவர் 19 ஆம் நூற்றாண்டில் பல விண்மீன் வட்டாரங்களைக் கண்டறிந்தார்.
இதிலுள்ள ஆல்பா,பீட்டா காமா மற்றும் டெல்ட்டா டெல்பினி  என்ற நான்கு விண்மீன்கள் ஒரு சிறிய சவப் பெட்டியைப் போல உள்ளது. காமா டெல்பினி  100 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ர் இரட்டை விண்மீனாகும்,தோற்ற ஒளிப் பொலி வெண் 4.3 மற்றும் 5.2 உடைய ஒன்று மஞ்சள் மற்றொன்று வெள்ளை நிறங் கொண்ட இரு விண்மீன்கள் இதிலுள்ளன .இதன் சுற்றுக் காலம் சில ஆயிரம் ஆண்டுகளாக உள்ளது .


No comments:

Post a Comment