Thursday, October 24, 2013

Kavithai

கவிதை
உனக்குள் ஒரு சமுதாயம்

நீ திருடினால் நானும் ஒருநாள் திருடனாவேன் 
நான் திருடினால் நீயும் ஒருநாள் திருடனாவாய் 

திருடினால் திருடப்படும் 
கொள்ளையடித்தால் கொள்ளையடிக்கப்படும் 
ஏமாற்றினால் ஏமாறப்படும் 
பொய் பேசினால் பொய் பேசப்படும் 

லஞ்சம் வாங்கினால் லஞ்சம் கொடுக்க வேண்டிவரும் 
வஞ்சித்து வாழ்ந்தால் வஞ்சிக்கப்பட நேரிடும் 

ஒருசிலர் திருடர் என்றால்
திருடர்கள் திருந்தி வா ழியுண்டு
ஊரே திருடர்கள் என்று சொன்னால்
மக்கள் வருந்திச் சார் துயர்கொண்டு

இதுதான் இயற்கை இதுதான் வாழ்க்கை 
இதை எப்போது உணரப்போகின்றாய் மானுடனே 

  
தப்பென்று பிறர் பயன்படுத்த மறுத்ததை 
சட்டென்று நீ பயன்படுத்தத் துணிந்துவிட்டாய் 
உனக்கிருக்கும் வாய்ப்பு ஊருக்கும் இருக்கு  
ஏனோ நினைத்துப் பார்க்கத் தவறுகின்றாய்   

சமுதாயத்தில் நீயொரு தனிமனிதன்தான் 
ஆனால் உனக்குள் ஒரு சமுதாயம் இருக்கு


No comments:

Post a Comment