Friday, October 18, 2013

Sonnathum sollaathathum

சொன்னதும் சொல்லாததும்




ஜான் மில்டன் 1608 முதல் 1674 வரை வாழ்ந்த இங்கிலாந்து நாட்டு கவிர்.இவர் ஒரு அச்சுக் கோர்ப்பவரின் மகனாகப் பிறந்தார்.
இவர் எழுதிய (Paradise Lost) சொர்கத்தின் இழப்பு என்ற கவிதை உலகப் புகழ் பெற்ற ஆங்கில இலக்கியமாகும்.இவருடைய டைப்புக்களில்  சுதந்திரத்தின் மீது ஆவல்,கொள்கையில் மனவுறுதி, மற்றும் அவர் காலத்திய அரசியல் குழப்பங்கள் போன்றவை  அதிகம் விஞ்சி நிற்கும். மிகவும் புகழ் பெற்ற  செய்யுளைப் படைப்பதற்கு முன்னரே தனது 43 வது வயதில் இவர் தன் கண் பார்வையை இழந்தார். குருடாய்ப் போனதால் மனம் தளரவில்லை.இக் காலத்திலும் இலக்கியத்தில் ஆர்வம் கொண்டு படிக்கச் சொல்லி கேட்டறிந்தார். இவர் பல் துறை சார்ந்த புலமை பெற்றுத் திகழ்ந்தார். ஆங்கிலக் கவிகளில் மேதாவித்தனம் மிக்கவர் என்று போற்றப்பட்டவர்..இவர் குருடராய் இருந்துகொண்டே ஒரு சிறந்த காவியத்தைப் படைக்க இவருடைய பல் துறை அறிவும், மனவுறுதியும், வற்றாத ஆர்வமும் தான் காரணமாக இருந்தன.
ஜான் மில்டனின் சில பொன் மொழிகள்
மனம் எப்போதும் மனமாகத் தானிருக்கும் இடத்திலேயே இருக்கின்றது.அதனால் நரகத்தில் ஒரு சொர்க்கத்தையும் ,சொர்க்கத்தில் ஒரு நரகத்தையும் உருவாக்கிக் காட்ட முடியும் .

யார் ன்னைத் தானே திறம்பட ஆட்சி செய்து ஆசைகளையும் உணர்ச்சிகளையும் பயத்தையும் அடக்கிக் கொண்டு வாழ்கின்றார்களோ அவர்களே நாட்டை ஆளும் அரசனை விட மேலானவர்கள்.

சாவு  என்பது நிலைப்பேறுடைய இன்பச் சோலையைத் திறந்து காட்டும் ஒரு தங்கச் சாவி 

குருடாய் இருப்பது துயரமல்ல குருடைத் தாங்கிக் கொள்ளமுடியாமல் வாழ்வதுதான் துயரமானது

வலிமையால் வெற்றி கொள்வோர் வெற்றி பெறலாம் என்றாலும் அவர்கள் பாதி எதிரிகளைத்தான் வெற்றிகொள் கின்றார்கள்.


No comments:

Post a Comment