Creative thoughts
வெற்றிக்குத் தேவையான விஷயங்கள் அனைத்தும் நம்மிடம் நிறையவே இருக்கின்றன.அவை இயல்பான அறிவு,உறுதியான தீர்மானம்,பரிபூர்ணமான நேர்மை.ஆம்,அவை மட்டுமே.இந்த மூன்றும் வெற்றிக்கு சிவப்புக் கம்பளம் விரித்து நம்மை வழி நடத்திச் செல்கின்றன -ராஜ மரியாதையோடு.இயல்பான அறிவு என்பது கற்ற அறிவை அனுபவங்களுக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்வதாகும்.உறுதியான தீர்மானம் என்பது ஒரு குறிப்பிட்ட இலக்கை நோக்கி பயணிக்கும் போது ஒரே நிலைப்பாட்டில் இருப்பதாகும். தனக்கும் சமுதாயத்திற்கும் உள்ள தொடர்பை புரிந்து கொண்டு வளப்படுத்திக் கொள்வது பரிபூர்ண நேர்மையாகும்.
மிகக் குறைந்த எதிர்ப்புக்களைக் கொண்ட பாதை என்றால் வழிந்தோடும் ஆறுகளும் வளைந்தோடும்.மனித மனமும் இந்த ஆற்றைப் போல. எதிர்ப்புக் குறைந்திருந்தால் நேர்மையும் குறைவாக இருக்கிறது.மிக குறைந்த எதிர்ப்புக்களைக் கொண்ட பாதையில் மனிதர்கள் நேர்மையைத் தவற விட்டுவிடுகின்றார்கள்.
வீட்டில் பெற்றோரின் எதிர்ப்பு இருப்பதால் பிள்ளைகள் நேர்மையாய் வளருகின்றன.நாட்டில் சமுதாய எதிர்ப்பு இல்லையென்றால் அரசியல் வாதிகள் நேர்மையைத் துறந்து விடுகின்றார்கள்.
மன்னிப்பதின் மூலம் ஒருவரின் அன்பு உச்சத்தை எட்டுகின்றது. அவருடைய இதையமே பரிபூர்ணமாகத் தூய்மையாக இருக்கின்றது இதற்கு ஆன்மீகம் மட்டுமே வலிமையான தூண்டுகோலாக இருக்கின்றது.
உடலையும் உள்ளத்தையும் முறையே இயக்கும் இன்ஜின் இதயமும் மனமும் தான் ஒரு சுத்தமான இன்ஜின் பழுதுற்று ஏமாற்றமளிப்பதில்லை.அதுபோல சுத்தமான இதயமும் மனமும் சமுதாயத்தின் நலங் கெடுப்பதில்லை.
\
எப்போதும் எஜமானராக நினைத்துக் கொண்டு சேவகனாகப் பணியாற்றப் பழகிக் கொள்ளுங்கள்.உண்மையான உழைப்பு அங்கு தான் வெளிப்படுகின்றது.கடமையும் உரிமையும் சுதந்திரமும், பொறுப்பும் ஒரு சேர இருக்கும்.
தலைவன்,எஜமானன் என அழைக்கப்படுமளவிற்கு உயர்வது ஒருவரது சாதனையல்ல.
No comments:
Post a Comment