Monday, October 7, 2013

Eluthatha Kaditham

எழுதாத கடிதம் 
கோவிலூரில் உள்ள கல்வி நிறுவனங்கள்,காந்தி கிராம கிராமியப் பல்கலைக் கழகத்துடன் இணைந்து இவ்வாண்டு அக்டோபர் திங்கள் 4 ஆம் நாள் காந்தி ஜெயந்தி விழாவைக் கொண்டாடின.அன்று 'பசியில்லா,சாதியில்லா,ஊழலில்லா இந்தியாவை உருவாக்குவோம்’ என்ற தலைப்பில் பல அறிர் பெருமக்கள் பேசினார்கள்.
பொதுவாக ஆசிரியர்களாகட்டும்,ஆன்மீகவாதிகளாகட்டும், சமுதாய நல விரும்பிகளாகட்டும் எல்லோரும் இதுபோன்ற தீவிரமான சிந்தனைகளை மாணவர்களிடம் மட்டும் சொல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள்.அதற்காக பள்ளிகள்,கல்லூரிகள் பல்கலைக் கழகங்கள் என கல்விக் கூடங்களையே 
தங்கள் இலக்காகக் கொண்டுள்ளார்கள்.வளரும் மாணவர்கள் வருங்கால இந்தியாவின் சொந்தக்காரர்கள் என்பதால் அப்படிபட்ட வழிகாட்டல் தேவைதான் என்றாலும்அதற்கு முன்னால் செய்யவேண்டிய முக்கிய செயலொன்று இருக்கிறது .ஊழலைப் பற்றி ஒன்றும் தெரியாத இளம் மாணவர்களிடம் அது பற்றித் தெரிவிக்கும் போது அது தங்களுக்குச் சம்பந்தமில்லாத விஷயம் என்று பெரும்பாலான மாணவர்கள் செவிமடுப்பதில்லை.

பொதுவாக இத் தலைப்பிலான கூட்டங்கள் அரசு அலுவலகங்கள்,வருவாய்த் துறை அலுவலகங்கள்,வர்த்தக மையங்கள்,அமைச்சரவை மற்றும் அவர்கள் உதவியாளர்கள்,மத்தியில் நடத்தப்படவேண்டும்..அப்போதுதான் தீய பழக்கங்களுக்கு பின்பற்ற நம்பிக்கையளிக்கக் கூடிய எடுத்துக் காட்டுகள் இல்லாதொழியும். நன்மையும், நலமும் வரவேண்டும் என்றால் முதலில் துன்பந்தரும் தீமைகளையும் நஷ்டத்தையும்  போக்க வேண்டும்..தீமைகளை வளர விட்டுவிட்டு நன்மைகளை எதிர்பார்ப்பது எப்போதும் முழு நன்மை தருவதில்லை.தொடரும் இழப்பைத்  தடுத்து  நிறுத்திக் கொள்ளாமல் எதிர்கால வருவாயைப் பெருக்கத் திட்டமிடுதல் பயன் தருவதில்லை.
ம் முயற்சிகள் எப்போதும் தொடரும் முயற்சிகளாகவே இருக்கும். பலன் விளைவதில்லை.
மாணவர்களிடமும், பொது மக்களிடமும் உரத்த குரலில் பேசும் இவர்கள் ஊழல் மிகுந்திருக்கும் உரிய இடங்களில் மௌனிகளாகி விடுகின்றார்கள்.பாதுகாப்பின்மையால் ஏற்படும் பயம் அவர்களை அடக்கிவிடுகின்றது.
ஊழலை இந்தியாவில் ஒழிக்க முடியாது. ஏனெனில் அதை நாம்
நெடுங்காலமாக வளர விட்டுவிட்டு ஏற்றுக்கொண்டு விட்டோம். ஊழல் ஒன்றும் தப்பில்லை என்ற அபிப்பிராயம் பலரிடம் இருக்கிறது.வாங்குவோர் கொடுப்போரைக் கொடுக்க வைக்க
சட்டத்திற்குத் தெரியாத பல வழிமுறைகளைத் தெரிந்து வைத்திருக்கின்றார்கள்.தாமதம் செய்யச் செய்யச் காரியத்தை முடிக்க நினைப்போர் லஞ்சம் கொடுக்கத் தயங்குவதில்லை.இதுவே வாங்குவோருக்கு ஆயுதமாகி விடுகின்றது .ளை எடுக்காமல் பயிர் விளைச்சலில் சாதனை
டைக்க நினைக்கின்றோம்.இக் கருத்தரங்கம் முதலில் நடைபெற வேண்டிய இடம் பள்ளிகள்,ல்லூரிகள்,பல்கலைக் கழகங்கள் இல்லை.  

No comments:

Post a Comment