Thursday, October 17, 2013

Philosophy

ஒரு சமுதாயம் தன் போக்கிலேயே போகும் பழக்கத்தால் தவறான பாதையில் செல்லும் மனப்பான்மையைப் பெற்று வருகின்றது.இதனால் கடமைகளும்,ண்ணியமும் ,கட்டுப்பாடும் மக்களால் மீறப்பட்டு வருகின்றது.அதை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும் என்று ஏற்பட்டதே அரசியல். இயற்கை தந்த எல்லா வளத்தையும் எல்லோருக்கும் சரி சமமாகப்
பங்கீடு செய்யப்படுவதை உறுதி செய்வதே அரசியலின் தலையாய நோக்கமாகும். மக்களை ஒரு சேரப் பாதுக்காக்க வல்ல வலிமையுள்ள,நேர்மையாகவும்,நிர்வாகத் திறமையுடன் தொண்டு செய்யும் மனப்பான்மை கொண்ட சான்றோர்களிடம் சமுதாயத்தை ஒப்படைக்க காலப்போக்கில் அதுவே அரசியலாக உருவெடுத்தது. அரசியலில் பங்கேற்றவர்களுக்குச் சமுதாயம் அளவுக்கு மீறிய வாறு மதிப்பும் மரியாதையும் கொடுக்கப் போக அது போட்டியையும் பொறாமையையும் வளர்த்துவிட்டது.இந்நிலையால் எந்த நோக்கத்திற்காக அரசியல் ஏற்பட்டதோ அந்த நோக்கம் திரிவுற்று சீர்கெட்டுப் போய்வருகின்றது. வேலியே பயிரை மேய்ந்த கதைக்கு மிகச் சரியான எடுத்துக்காட்டு கூறவேண்டுமானால் அது இந்திய அரசியல்வாதிகள் தாம்.ல்வியாளர்கள்,ஆன்மீகவாதிகள், சமுதாய ஆர்வலர்கள்,துறவிகள் இவர்களை விட ஞானிகளே இது பற்றி மிகத் தெளிவான சிந்தனை உடையவர்களாக இருக்கின்றார்கள். ஒரு தவறான போக்கை மக்கள் அறியுமாறு செய்யக்கூடாது.முளையிலேயே கிள்ளி எறியவேண்டும். சமுதாயத்தைக் காக்க சமுதாயம் தவறி விட்டால் அதற்கு சமுதாயம் ஒரு விலை கொடுக்க வேண்டி வரும்.
எவ்வளவு குறைவான இழப்புடன் இதைச் செய்யமுடியும் என்பதை அவர்கள் சுட்டிக்
காட்டியிருக்கின்றார்கள்.சமுதாயம் நலம் பெறும் மாற்றத்தை இரு விதமாக ஏற்படுத்தமுடியும். நூலிலுள்ள சிக்கலை நீக்க வேண்டுமானால் முதலில் அதன் முனைகளில் ஒன்றைக் கண்டுபிடிக்க வேண்டும். அது எந்த முனையாக வேண்டுமானாலும் இருக்கலாம்..அது போல சமுதாயச் சீர்குலைவை அகற்றி ஓர் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமெனில்,ஒன்று மக்களின் மனத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.இது பரவலாகவும்,மனத்தைப் பாதிக்கக் கூடியவாறு அழுத்தமாகவும் இருந்தால்தான் பயன்தரும். இதன் அடிப்படை மக்களை மனம் திருத்தி வாழ்வியலைப் புரிந்து கொண்டு வாழச் செய்வது மட்டுமல்ல,அவர்களை ஆளச் சரியான தலைவர்களைத்  

தேர்ந்தெடுக்கும் பக்குவத்தை தூண்டுவதாகும்.மற்றொரு வழி முறை.ஆளும் தலைவர்களையே பக்குவப்படுத்தி மன மாற்றத்தைத் தூண்டுவதாகும்.தலைவர்களாகத் தொடர்ந்து இருப்பதற்காகத் தலைவர்களானவர்களை மன மாற்றம் செய்வது அவ்வளவு எளிதில்லைi.தலைவர்களை மாற்றுவதின் மூலமே ஒரு மறு மலர்ச்சியை ஏற்படுத்த முடியும் என்று ஞானிகள் சொல்லியிருக்கின்றார்கள் கான்பூசியஸ் இதற்கு ர் எடுத்துக் காட்டு.

No comments:

Post a Comment