Micro aspects of developing inherent potentials
வெற்றி என்பது எல்லோருக்கும் எளிதுதான்.ஆனால்
வழிமுறையில் நேர்மையில்லாத போதுதான் அது கடியதாகத் தோன்றுகின்றது.
ஒருவர் நேரத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் விதம்தான் வெற்றியைத் தீர்மானிக்கின்றது.ஒருவர் தனது நேரத்தை எப்படிப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதை அவரே மிகச் சரியாக வரையறை செய்யமுடியும் என்பதால் அவரே அவருடைய வெற்றி தோல்வியைப் பற்றி முன் கூட்டியே அறிந்துகொள்ள முடியும்.நேரத்தைக் கடந்த காலத்தில் செலவிடுபவனும்,எதிர் காலத்தில் செலவிடுபவனும் வெற்றியை எளிதில் அடைந்து விடுவதில்லை. எவன் நிகழ் காலத்தில் செலவிகின்றானோ அவனே வெற்றிப் பாதையில் முன்னேறிச் செல்கின்றான். வெற்றி-தோல்வி என்பது உண்மையில் பூவா தலையா மாதிரி வெறும் நிகழ்திறத்தோடு தொடர்புடையது என்று கருதிவிடமுடியாது. அதில் ஒருவருடைய
ஈடுபாடும் ஒன்றரக் கலந்திருக்கின்றது.
ஒருவர் எதிர்கொள்ளும் எல்லாவற்றிலும் ஈடுபடுவதும் அதில் எல்லாம் வெற்றி கொள்ளுவதும் நடைமுறைச் சாத்தியமில்லை. எதில் ஈடுபடவேண்டும்,எதில் ஈடுபடத் தேவையில்லை என்பதை அறிந்துகொண்டு,தன் தேவை,நோக்கம்,பயன்பாடு கருதி தேர்வு செய்து ஈடுபட்டால் வெற்றி மனம்போல கைகூடும்.இதற்கு அதிர்ஷ்டம் தேவையில்லை.கற்றறிவு போதும்.எதில் ஈடுபட்டு சாதனை படைக்க நினைக்கின்றோமோ அதில் திறமையை படிப்படியாக வளர்த்துக் கொண்டு வலுப்படுத்திக் கொள்ள வேண்டும்.அதற்கு ஆர்வமும் அனுபவமும் தேவை.இதை ஒருவர் நேரம் ஒதுக்கீடு செய்யாமல் பெறவே முடியாது.
ஒருவர் ஆங்கில அகராதியிலிருந்து ஒவ்வொரு நாளும் 10 நிமிடங்கள் அர்பணித்து
ஒரு வார்த்தையை முழுமையாகக் கற்றுத் தேர்ந்தால் ஒரு வருடத்தில் 365 வார்த்தைகளையும் ஐந்து வருடங்களில் 1825 வார்த்தைகளையும் பயன்படுத்தும் புலமையைப் பெறலாம்.ஒவ்வொருவரும் அவர்களுடைய வளர்ச்சியில் காட்டும் அர்ப்பணிப்பே அவர்களை ஒரு வல்லுநராக்குகின்றது என்பது வல்லுநர்களால் நிரூபிக்கப்பட்ட உண்மை. கிடைக்கும் சிறு சிறு நேரங்களை வீணாக்கி விடாமல் சுய ஆர்வம் மற்றும் விருப்பத்திற்கு ஏற்றவாறு ஆக்கப் பூர்வமான பணிகளில் தங்களைத் தாங்களே ஈடுபடுத்திக் கொள்வது நல்ல பழக்கம். கியூவில் நிற்கும் போதும்,காத்துக் கொண்டிருக்கும் போதும் ,உலாவும் போதும், பயணம் செய்யும் போதும் கிடைக்கும் சிறு சிறு நேரங்களில் பயனுள்ளவாறு பயன்படுத்திக் கொள்ள முன் திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment