எழுதாத கடிதம்
இன்றைக்கு இந்தியாவில் இருக்கின்ற அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளில் 99.9 % இலக்கணம் மீறிச் செயல்பட்டு சமுதாயச் சீரழிவிற்குக் காரணமாக இருந்து வருகின்றார்கள்.
ஊழல் புரியாதிருப்பதும்,லஞ்சம் வாங்காதிருப்பதும் அரசியல்வாதிகளிடம் இருக்கவேண்டிய ஒரு முக்கியக் குணமாகும்.ஆனால் அத்தகைய குணமுள்ளோர் அரசியலுக்கு வருவதேயில்லை. அதுவே தவறான இந்திய அரசியலின் வளர்ச்சியை காட்டக் கூடியதாக இருக்கின்றது.
ஊழல் புரியப் புரிய, லஞ்சம் வாங்க வாங்க அது மென்மேலும் தீவிரமாகப் மக்களிடையே பரவுவதோடு,நாகரீக வளர்ச்சியில் வேரூன்றியும் விடுகின்றது.இந்த நிலையை எட்டிய பின்பு அதை வளர்த்து விட்டவர்களே முயன்றாலும் தடுக்க முடிவதில்லை. இன்றைக்கு இதன் பரிணாம வளர்ச்சி எல்லோருக்கும் அச்சம் தரக் கூடியதாக இருக்கின்றது. ஊழல் புரிய,லஞ்சம் வாங்க வழியும்,வாய்ப்பும் கிடைக்காதவர்கள்,மெல்ல மெல்ல அரக்க குணத்தைத் தழுவி வருகின்றார்கள்.இவர்கள் கொள்ளையிடுவதும், தடுப்போரை அல்லது தர மறுப்போரைக் கொலை செய்து விட்டு கொள்ளையிடுவதும் இன்றைக்கு சமுதாயத்தில் அதிகரித்த்து வருகின்றது.இது திமிரிச் செல்லும் தவறான சமுதாயப் போக்கின் வலிமையைக் காட்டுகின்றது.
ஊழல் புரிவோரும்,லஞ்சம் வாங்குவோரும் தங்களுடைய தேவையை ஒரு வரம்பிற்குள் வைத்திருப்பதில்லை தேவையின் எல்லை தெரியாததால் ஊழல் லும் லஞ்சமும் கட்டுப்பாடின்றிப் பெருக்கமடைந்து வருகின்றன.
ஊழல் புரியா,லஞ்சம் வாங்காத குணம் இருந்தால் மட்டுமே ஒருவர் அரசியலில் பதவி வகிக்க முடியும் என்று சொன்னால் இந்தியாவில் ஒருவர் கூட தேர்தலில் போட்டி போடவோ பதவி வகிக்கவோ முன் வரமாட்டார்கள்.
No comments:
Post a Comment