Mind
without fear
மனதில் பயம் எப்போதெல்லாம் வருகின்றது? ஒரு தவறான செயலை அல்லது ஒரு குற்றத்தை யாருக்கும் தெரியாமல் செய்ய நினைத்து செயல்படத் தொடங்கும் போது ,தன் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்ற சூழ்நிலையை உணரும் போது ,தன்னிடம் சிறிதுமில்லாத திறமையால் ஒன்றைச் சாதிக்க வேண்டும் என்று துடிக்கும் போது மனதில் இனம் புரியாத ஒரு பயம் வருகின்றது.
செய்யும் குற்றத்தை யாருக்கும் தெரியாமல் செய்து முடித்து விட்டால் அதன் பலனை முழுமையாக அனுபவிக்க முடியும்,
ஆனால் பிறருக்குத் தெரிந்து விட்டால் குற்றத்தை மறைக்க முடியாமல் போய்விடலாம். அதனால் தண்டிக்கப்படுவதற்கான வாய்ப்பு எப்போதும் இருக்கிறது. தண்டனை மனத்தில் ஒரு விதமான அச்சத்தை ஏற்படுதித்திக் கொண்டேயிருக்கும். குற்றம் புரிந்து பெற்ற பலனை மற்றவர்களுக்கு பங்களிக்க விரும்பாததும் குற்றத்தை மறைக்க முயல்வதற்கு ஒரு காரணமாக இருக்கிறது. தண்டனை ஏற்படுத்தும் அச்சம் பொதுவாக புதிதாக குற்றம் புரிய வருபவர்களிடம் மட்டுமே காணப்படுகின்றது. குற்றம் செய்தே
பழகிப் போனவர்கள் அதை மேலும் மேலும் மறைவாக யாருக்கும் தெரியாமல் விரைவாகச் செய்வது எப்படி என்பதில் தேர்ந்து வருகின்றார்கள். குற்றத்தை வெற்றிகரமாகச் செய்து முடிப்பதிலேயே ஆர்வமுள்ளவர்களாக இருக்கின்றார்கள்.இன்றைக்குச் சமுதாயத்த்தில் இந்த இனம் பெருக்கிக் கொண்டு வருவது கவலை அளிக்கக் கூடிய விஷயமாக இருக்கிறது. இதனால் சமுதாயத்தின் பயனுறு திறன் வெகுவாகக் குறைந்து வருகிறது. சமுதாயத்தின் பயனுறு திறன் என்பது சமுதாய மக்கள் எந்த அளவிற்கு சமுதாயத்திற்குப் பயனுள்ளவர்களாக இருக்கின்றார்கள் என்பதைப் பொருத்திருக்கிறது உயிருக்கு ஆபத்து என்ற சூழல்களில் பயம் தன்னிச்சையாக மனதில் குடி கொள்ளும். இந்த ஆபத்து வலிமை மிகுந்த எதிரிகளால் அல்லது யார் என்று இனமறிந்து கொள்ள முடியாத எதிரிகளால் ஏற்படுவதாக இருக்கலாம்.அப்போது தற்காத்துக் கொள்ள பாதுகாப்பான இடம்தேடி மறைவதும்,முடியாவிட்டால் வரம்பு மீறிப் போராடுவதும் தொடருகின்றது.
திறமையின்மை வெளிப்பட்டு தன் சுயரூபம் தெரியாமலிருக்க பலர் திறமையுள்ளது போல நடிப்பார்கள்.சுயரூபம் பிறருக்குத் தெரிய வரும்போது சிலர் மனம் நொந்து போவார்கள். சிலர் தற்கொலைக்குக் கூட துணிவதுண்டு. இதற்குக் காரணம் திறமையின்மை இல்லை. திறமையை வளர்த்துக் கொள்ளாமல் அதன் பலனை மட்டும் விரும்பியதுதான் .திறமையின்மைக்கு எதிராக மனதில் வளர்த்துக்கொண்டுள்ள தவறனா சுயமதிப்பே. சுயமதிப்பு ஒருவருடைய உண்மையான திறமையின் அடிப்படையில்
வரையறுக்கப்பட்டிருந்தால் இது போன்ற ஏமாற்றங்களிலும் விபரீதங்கள் ஏற்படுவதில்லை.
No comments:
Post a Comment