எழுதாத கடிதம்
உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஓரிடத்தில் தங்கப் புதையல் இருப்பதாக ஒரு சாமியர் சொன்னார் என்று இந்திய அரசாங்கம் அதை நம்பி தன் நேரத்தையும் மனித வளத்தையும் பொருள் வளத்தையும் வீணாக்கி வருகின்றது. இதற்காகச் செலவிடும் பணத்திற்கு தங்கத்தையே வாங்கிவிடலாம். உண்மையான உழைப்பு மற்றும் அதனால் கிடைக்கும் பலன்களில் நம்பிக்கையில்லாதவர்களே இப்படி அதிர்ஷ்டத்தை நம்பி கெடுதல் செய்கின்றார்கள். அரசாங்கத்திற்கு உருப்படியான வேறு மக்கள் நலத் திட்டங்கள் இல்லையா. புதையல் கிடைத்தால் வரவு மற்றதெல்லாம் செலவு என்று தங்கப் புதையல் மயக்கத்தில் இருக்கின்றார்களா?
அறிவியல் மிகவும் வளர்ந்துள்ள இந்நாளில் குருட்டு அதிர்ஷ்டத்தை ஒரு நாடே நம்புகின்றது என்பது நாடு இன்னும் எவ்வளவு பழங்காலத்தில் இருக்கின்றது என்பதைத்தான் காட்டுகின்றது.
No comments:
Post a Comment