Micro aspects of developing inherent potentials
காட்டு விலங்கினங்களின் வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் பல இருக்கின்றன. வாழ்க்கை நெறிமுறை தொடர்பான பல இயற்கை உண்மைகளைப் புரிந்து கொள்ள இது உதவுகின்றது.
பாதுகாப்பில்லாத காடுகளிலும் சரி,பரந்து விரிந்து கிடக்கும் கடலிலும் சரி பலமான விலங்குகளே எஞ்சி வாழ்கின்றன..இவை போராடிப் பிழைப்பதற்கு உடல் வலிமையை மட்டுமே நம்பி இருக்கின்றன .போராடி வாழ், இல்லையென்றால் போராடுபவனுக்கு உணவாகி மடி(do or die) என்ற தத்துவத்தை உணர்த்தக் கூடியதாக இருக்கின்றது.
ஒரே இனத்தில் பலமிக்க ஆண் மட்டுமே ஆதிக்கம் செலுத்த்தி ஆட்சி செய்கிறது. மற்ற ஆண் விலங்குகள் எல்லாம் இனச்சேர்க்கைக்காக புணர்ந்து மகிழக் கூட அனுமதி கிடையாது..உணவிற் காக வேட்டையாடி வீழ்த்திய இரையை ,யார் வீழ்த்தினாலும் முதலில் உண்பது வலிமை மிக்க விலங்குகளே.
பலவீனமான ,நோய்வாய்ப்பட்ட அல்லது போராட்டத்தின் போது காயம்பட்ட விலங்குகள் மற்றும் அனுபவமில்லாத பயமறியாத இளம் கன்றுகள் மிக எளிதாக பலமிக்க விலங்குகளுக்கு இரை யாகிப் போகின்றன.
பிழைத்து பாதுகாத்துக் கொள்வதற்கு காட்டு விலங்குகள் எப்போதும் விழிப்போடு இருக்க வேண்டியது அவசியமாக இருக்கிறது.உணவு, குடிநீர் தேடி அலையும் போதும்,புதிய குட்டிகளை ஈன்று அவற்றிற்கு காவலாய் நிற்கும் போதும் பலம்மிக்க விலங்குகள் அவற்றை எளிதாக வேட்டையாடி விடுகின்றன.பலமுறை போராடித் தோற்றுப் போக வாய்ப்பிருப்பதாலும், பிடித்த இரையை உண்பதற்கு முன்பாக பறிகொடுக்க வாய்ப்பிருப்பதாலும் இரையை விரைந்து உண்ணும் பழக்கம் கொண்டுள்ளன. இரையாகி விடாமல் தற்காத்துக் கொள்வதற்கும்
இரையைத் தேடிப்பிடிப்பதற்கும் விலங்குகளின் நுகர் திறன் பொதுவாக அதிகம். செவியால் சிறு அசைவுகள் எழுப்பும் அதிர்வுகளைக் கூட கேட்கின்றன.ஒவ்வொரு விலங்கும் ஒவ்வொரு தனித்திறமைப் பெற்றுள்ளன.
நுகர்திறன் மிக்க விலங்குகள் இரையைத் தேடிப் பிடிக்க நெடுந்தொலைவு கடந்து செல்கின்றன. நுகர் திறன் மிக்க விலங்குகளே இரையைப் பிடிப்பதிலும், தற்காத்துக் கொள்வதிலும் வெற்றி பெறுகின்றன.
சூழ்நிலைகளே அவைகளுக்கு அத் தன்மைகளை வளர்த்துள்ளன. அரிதாகக் கிடைக்கும் இரையைத் தேடி நெடுந்தொலைவு செல்ல வேண்டியிருப்பதால் துருவக்
கரடிகளுக்கு மோப்ப சக்தி மிகவும் அதிகம் மட்டுமில்லை, அவை உணவில்லாமல் பல மாதங்கள் உயிர் வாழும் திறைமையையும் வளர்த்துக் கொண்டுள்ளன.
வாழ்க்கையில் வெற்றி என்பது காட்டு விலங்குகளைப் பொருத்த வரையில் எஞ்சிப் பிழைத்திருப்பதுதான். வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்று என்ணிஎண்னி கரடிகள் சூழ்நிலைக்கேற்ப வளர்த்துக் கொண்ட திறமைகளே இவை.கரடிகள் தங்கள் எல்லைக்குட்பட்டு திறமைகளை வளர்த்துக் கொண்டதால் அதை காலப் போக்கில் மேம்படுதித்திக் கொள்வது இயலுவதாயிற்று..
No comments:
Post a Comment