Saturday, October 5, 2013

Vethith thanimangal-Chemistry

வேதித் தனிமங்கள்-லாந்தனம்-கண்டுபிடிப்பு.
அருமண்  உலோகங்களின் லைச்சன் லாந்தனமாகும்.அதனால் இத் தொகுதியை லான்தனைடு என்று கூறுவார்.1794 ல் பின்லாந்து நாட்டு வேதியியலாரான ஜோகன் டோலின் என்பார் யெட்டர்பைட் என்ற கனிமத்திலிருந்து ஒரு புதிய தனிமத்தின் ஆக்சைடைப் பிரித்தெடுத்து அதற்கு யெட்ரியம் என்ற பெயரும் இட்டார்.அதன் பிறகு பிரான்சில் வாக்குலின் (L.Vauquelin),ஜெர்மனியில் கலாப்ரோத் ஒரு புதிய தனிமத்தின் ஆக்சைடு அதே கனிமத்தில் இருப்பதாக உறுதிசெய்தனர்.1803 ல் ஸ்வீடன் நாட்டின் பெர்சிலியஸ் மற்றும் ஹிஸ்சிங்கர்(W.Hisinger) தனித்தனியாக ஒரு புதிய தனிமத்தின் ஆக்சைடைப் பிரித்தெடுத்து அதற்கு சீரியம் என்றும் பெயரிட்டனர். ஆனால் உண்மையில் சீரியம் ஆக்சைடு எனப்பட்டது சீரியத்திலிருந்து(58) காடோலினியம்(64) ரையுள்ள அருமண் உலோகங்களின் ஆக்சைடுகளின் கலவையாக இருந்தது.அது போல யெட்ரியமும் டெர்பியம்(65) திலிருந்து லுடிசியம்(71) வரையுள்ள அருமண் உலோகங்களின் கலப்பாக இருந்தது.
1839 ல் ஸ்வீடேன் நாட்டின் மொசாண்டர் தூய்மையற்ற சீரியம் நைட்ரேட்டிலிருந்து லாந்தனம் என்ற அருமண்  உலோகத்தைப் பிரித்தெடுத்த்தார். கிரேக்க மொழியில் லாந்தெனின் என்றால் மறைத்திரு என்று பொருள். ஒரே கனிமத்தில் ஏறக்குறைய ஒத்த வேதிப் பண்புகளுடன் சேர்ந்து மறைந்திருந்ததால் இது அப்பெயர் பெற்றது.லான்தனம் மொனோசைட் பாஸ்ட்னாசைட் போன்ற கனிமங்களில் 25 முதல் 38 % வரை லான்தனம் காணப்படுகின்றது.
லாந்தனத்தை அயனிப் பரிமாற்றம் புற கரைப்பான்களால் பிரித்தல் முறை போன்ற புதிய வழிமுறைகளினால் 1923 ல் பெற்றனர். நீர் மூலக்கூறு நீக்கமுற்ற புளூரைடை கால்சியத்துடன் ஆக்ஸிஜநீக்க வினைக்கு உட்படுத்தி இந்த உலோககத்தை மிக எளிதாகப் பிரித்தெடுக்கலாம்.
பண்புகள்
La என்ற வேதிக்குறியீட்டுடன் கூடிய இதன் அணுவெண்  57 அணு நிறை 138.91 அடர்த்தி 6190 கிகி/கமீ .இதன் ருகு நிலையும் கொதி நிலையும் முறையே 1193 oC, 3673o C ஆகும்.
லான்தனம் வெள்ளி போன்ற பளபளப்புடைய, தகடா அடிக்கக் கூடிய,கம்பியாக நீட்டக் கூடிய, வெறும் கைக்
கத்தியால் வெட்டக் கூடிய அளவிற்கு மென்மையான உலோகமாகும்.இது அருமண்  உலோகங்களில் தீவிரமாக வினையாற்றக் கூடிய தனிமமாகும்.

காற்று வெளியில் ஆக்ஸிஜனுடன் சேர்ந்து ஆக்சைடாகி விடுகின்றது .குளிர்ந்த நீர்  லான்தனத்தை மெதுவாகப் பாதிப்படையச் செய்கின்றது .இதுவே சூடான நீர் எனில் பாதிப்பு விரைவாக ஏற்படுகின்றது .இது கார்பன்,நைட்ரஜன் ,போரான் ,செலினியம் ,சிலிகான் பாஸ்பரஸ்,கந்தகம் மற்றும் ஹாலஜன்கள் போன்ற தனிமங்களுடன் நேரடியாக வினை புரிகின்றது.310oC வெப்ப நிலையில் லான்தனம் ஆறுமுகி(hexagonal) யிலிருந்து முக மைய கனச் சதுரம், 865oC வெப்ப நிலையில் உடல் மைய கனச் சதுரம் எனக் கட்டமைப்பில் மாற்றம் பெறுகின்றது இயற்கையில் கிடைக்கும் லான்தனம் அணுவெண் 138 மற்றும் 139 கொண்ட அணு எண்மங்களின் கலவையாக உள்ளது.

No comments:

Post a Comment