Creative thoughts
எல்லோரும் எல்லா வளத்தோடு நலமாய் வாழும் சூழ்நிலை இருந்தால் அங்கு ஊழல் நடக்க வாய்ப்பே இல்லை.எது நலம் தரும் போதுமான வளம் என்பதை முறையாக வரையறுக்காமல் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக வரையறுத்துக் கொண்டிருப்பதால் ஊழல் நலமாய் வாழ்ந்து கொண்டிருக்கின்றது.
எதையும் கொடுக்கப் போவதில்லை என்பது முன் கூட்டிய தெரியுமானால் யாரும் யாருக்கும் எவ்வளவு வாக்குறுதிகளை வேண்டுமானாலும் கொடுக்கலாம்.
ஊழல் புரிந்தவன் பயப்படவில்லை. ஊழலுக்கு எதிராகப் போராட நினைக்கின்றவன் புரியாமல் பயப்படுகின்றான்.பொருளைத் திருடியவன் சதோஷமாய் மகிழ்ச்சியாக இருக்கின்றான், பொருளை இழந்தவன் பரிதவிக்கின்றான்.இந் நிலை நிலைப்படும் போது சமுதாயம் உண்மையான முன்னேற்றத்தைக் காண்பதில்லை.
செய்யாத பணிக்குச் சம்பளமும் செய்யக் கூடாத பணிக்கு கிம்பளமும் வாங்கும் பழக்கம் இருக்கும் வரை நலம் பயக்கும் ஒரு சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தவே முடியாது. அதைப் புரிந்து கொண்ட மக்கள் ஊழலை ஒழிக்க முடியாமல் ஊழலால் ஒழிக்கப் பட்டார்கள்.
நீதியை நிலை நாட்டுவதற்கு ஒருவர் அநீதியால் இழந்ததை விடப் பல மடங்கு செலவு செய்ய வேண்டிய நிலையிருப்பதால் பல அநீதிகளுக்கு எதிராகக் குரல் எழுப்பப் படாமல் இருக்கின்றது. சமுதாயம் மெள்ள மெள்ளச் சீரழிவதற்க்கு இது காரணமாக இருக்கின்றது.
No comments:
Post a Comment