எல்லோரும் இன்றைக்கு இந்து மதம் பற்றி பேசுகின்றார்கள் . எனக்குத் தெரிந்த வரை யாரும் இந்து மதம் இல்லை வேறு எந்த மதம் பற்றியும் பேசுவதற்கு அறுகதையில்லாதவர்கள். உலகில் எல்லோரும் ஏதாவதொரு மதம் சார்ந்து இருந்தாலும் அவர்கள் முழுமையாக அவர்களுடைய மதத்தின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றுபவர்களாக இருப்பதில்லை. அப்படியிருக்க ஒரு மதத்தினர் மற்றொரு மதத்தை விமர்சிப்பது தவறாகும் உண்மையில் யாருக்கும் அவர்களுடைய மதத்தைப்பற்றிய தெளிவு இல்லை. ஒவ்வொருவரும் தங்களுடைய மதமே உயர்ந்தது என்று நினைத்துக்கொண்டு பிற மதங்களில் குறை காண்கிறார்கள் .
மதம் என்பது இனிய மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு அடிப்படையான ஒவ்வொருவரும் கடைப்பிடித்து ஒழுகவேண்டிய வாழ்வியல் ஒழுக்கங்களாகும். மதம் எம்மதமாக இருந்தாலும் அதன் அடிப்படையான கொள்கை இது மட்டுமே. இனிய வாழ்க்கை வாழ இயற்கையைப் பின்பற்றினாலே போதும். அந்தவகையில் இயற்கை எல்லோருக்குமான ஒரு பொதுவான மதம். கடவுள் ஒருவரே என்பதைப்போல மதமும் ஒன்றே .
வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனும் தனித்து வாழ்ந்து விடமுடியாது. பிறரைச் சார்ந்து வாழவேண்டியிருப்பதால் வாழ்க்கை , சமுதாய வாழ்க்கையாகின்றது .சமுதாய வாழ்க்கை கொஞ்சம் வேறுபட்டது . அதில் தனிமனித வொழுக்கத்தோடு சமுதாய நலனுக்காக பொதுவொழுக்கமும் சேர்ந்திருக்கிறது . சுய முன்னேற்றம் என்பது ஒவ்வொரு மனதர்களுக்குள்ளும் இருக்கும் மிகவும் வலிமையான உந்து சக்தி . பொருளாதார ஏற்றத்தைத் தரும் சுய முன்னேற்றத்தில் எல்லோருக்கும் சம வாய்ப்பு உள்ளது என்றாலும் அதில் முன்னிலை பெற திறமையை விட்டுவிட்டு மதம் என்ற பெயரால் புதிய நிபந்தனைகளை வரையறுத்துக் கொள்ளும் பழக்கம் உட்புந்தது.பின்னால் வந்தவர்கள் பொருளாதாரம் ,அரசியல் , தொழில் மற்றும் வர்த்தகம் போன்றவற்றில் கூடுதல் ஆதாயம் பெற மதத்தில் புதிய விதிகளையும் புகுத்தினார்கள். இந்த கூடுதல்விதிகள் பெரும்பாலும் இயற்கைக்கு முரண்பட்டதாகவே இருக்கும் . சமுதாயத்திற்கு பாதுகாப்பு என்று ஒரு சமுதாயத்தையே மாற்றுவதற்கு சிலபல புதிய கோட்பாடுகளை உட்புகுத்தி புதிய மதங்களை ஏற்படுத்தினார்கள் அப்போது இயற்கை என்ற மதம் சுய நலம் மிக்க மனிதர்களால் பல மதங்களாகப் பிரிந்து செயற்கையானது . நம் பிரிவினைக்கு பல காரணங்கள் புனைந்து கூறப்படுகின்றன ஆனால் ஒற்றுமைக்குத் தான் ஒரு காரணமும் இல்லை. ஒருநாள் இந்த உலகம் அழிய நேரிடலாம். அப்போது எல்லா மதமும் பாகுபாடின்றி இயற்கையோடு ஒன்றினையும்.
புரியாது புரியாது வாழ்க்கையின் ரகசியம் புரியாது
வளரும் ஆசைக்கு அளவேது
முடிவேது முடிவேது
முடிந்தபின் உலகம் நமக்கேது- Kannadasan
.