Wednesday, October 28, 2026

 அரசியல்வாதிகளும் ஆட்சியாளர்களும் மக்களுக்கு ச் சேவை செய்வதாகக் கூறிக்கொண்டு  அரசின் நிதியை கொஞ்சம் கொஞ்சமாக த் தனதாக்கிக்கொண்டுவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள் .இது மக்களுக்கு அவர்கள் செய்யும் நம்பிக்கைத் துரோகம் .குற்றச் செயல்களை மறைவொழுக்கமாகச் செய்கின்றார்கள் . தவறான வழிகளில் ஈட்டும் பணத்தில் கொஞ்சம் அரசு அதிகாரிகளுக்கும் கொடுத்து கூட்டணி யை ஏற்படுத்திக்கொண்டு குற்றச் செயல்கள் வெளியே தெரியாமல் புதைத்து விடுகின்றார்கள் . ஊழலில்  லஞ்சம் வாங்கி அவர்களுக்கு இவர்கள்  அடிமைகளாக  வாழ்கின்றார்கள் .  

பாவப்பட்ட பணத்தை வாங்கிக்கொண்டு அவர்களுக்காக இவர்கள் வேலை செய்தால் அந்தப் பாவம் காலங் கடந்து இவர்களையும் பாதிக்கும் . இவர்களுடைய  பிள்ளைகள் ஒழுக்கமின்றி வளர்வார்கள் . வருங்காலத்தில் இளைய தலைமுறையினர் எல்லோரும் ஒழுக்கமின்றி , ஒரு திறமையுமின்றி ஒருவருக்கொருவர் குறையை மட்டுமே கூறிக்கொண்டு வாழும் போக்கைத்தான் பெறுவார்கள் 

No comments:

Post a Comment