ஆதாரமே இல்லாமல் ஊழல் புரியும் நுட்பத்தில் கைதேர்ந்தவர்களாக இன்றைய அரசியல்வாதிகள் மாறிவருகின்றார்கள். இதற்கு ஓட்டுப் போட்ட மக்கள் மட்டுமே காரணம் என்று கூறிவிடமுடியாது. ஜனநாயக ஆட்சி முறையில் அளவில்லா அதிகாரம் ஒருவரிடம் மட்டுமே இருக்கக்கூடாது. கட்சிக்கும் ஆட்சிக்கும் சுய விளம்பரம் இருக்கக்கூடாது .அல்லது அவை ஒரு வரம்பிற்கு உட்பட்டிருக்கவேண்டும் . நீதித்துறையை யும் காவல் துறையையும் தூய்மைப்படுத்தவேண்டும் .இலவசங்களால் நாட்டில் உற்பத்தி யைப் பெருக்கவேமுடியாது. .மக்கள் உழைப்பும் இல்லாமற் போகும் . மேலும் மேலும் அரசின் இலவசத்தை நம்பியே வாழும் சூழல் ஏற்படும். அதுமட்டுமல்ல பிற்காலத்தில் இலவச த்தை நிறுத்தவே முடியாது . அரசியல் ஞானிகளே மக்களுக்கான அரசியல் சட்டங்களை த் திருத்தி அமையுங்கள் . ஆட்சியாளர்களின் உல்லாச வாழ்க்கையை மட்டுப்படுத்துங்கள் .
No comments:
Post a Comment