Saturday, September 30, 2023

என் புத்தகங்கள் என் வாழ்க்கை

தமிழ் பழமொழிகளில் அறிவியல்

 

 

தலைப்பு : தமிழ்ப் பழமொழிகளில் அறிவியல்

வெளியீட்டாளர் : இலக்குமி நிலையம்

ஆண்டு : ஏப்ரல்  1996

மொழி : : தமிழ்

கருப்பொருள் தமிழ் பழமொழிகள்

பக்கங்கள் 248 விலை Rs.50

 

       சில நேரங்களில்  அனுபவ ரீதியிலான கருத்துக்கள் விவாதப் பொருளாகி ஒட்டியும் வெட்டியும் தர்க்கம் செய்வார்கள். அதில் கடவுள் மட்டுமில்லாது தமிழ் பழமொழிகளும் உண்டு.  தமிழ் பழமொழிகள் சில வார்த்தைகளால் பிறழ்ச்சி அடைந்து கருத்து மாற்றத்தை ஏற்படுத்துவதால் மறுக்கப்படுவதுண்டு (ஏ.கா. சோழியன் குடுமி சும்மா ஆடாது .இது சோழியன் குடுமி சும்மாடு ஆகாது என்ற பழமொழி மருவி வழக்காற்றில் தவறாகவே நிலைபெற்றுவிட்டது).. பொது அறிவியல் நூல்களை மட்டும் எழுதாமல் தமிழ் இலக்கியங்களோடு தொடர்புடைய நூல்களையும் எழுதவேண்டும் என்ற விருப்பம் எனக்குள் இருந்தது. .தமிழ் இலக்கியங்களில் திருக்குறள் தவிர்த்த பிறவற்றில் எனக்குப்  பயிற்சி  இல்லை. அறிவியலில் அதிகம் ஈடுபாடு காட்டியதால் இலக்கியங்களைப் படிக்க நேரிட்டாலும் அவற்றை அறிவியல் பார்வையுடன் தான் நோக்குவேன். அப்போது தமிழ் பழமொழிகளின் தொகுப்பு நூலொன்று எனக்குக் கிடைத்தது. தமிழ் பழமொழிகளில் புதைந்திருக்கும் அறிவியல் கருத்துக்களை தோண்டி எடுத்தால் என்ன என்று நினைத்தேன். அதன் வெளிப்பாடே தமிழ் பழமொழிகள் கூறும் பல்துறை அறிவியல் கருத்துக்களைக் கொண்ட இந்த நூல் .பழமொழிகளில் இலக்கிய நயம் மட்டும் இல்லை நுட்ப்பமான அறிவியல் சார்ந்த கருத்துக்களும் உண்டு என்பதை இந்நூல் தக்க விளக்கத்துடன் கூறுகின்றது. இந்நூலில் 5 அத்தியாயங்கள் உள்ளன .பழமொழிகளில் காணப்படும் இயற்பியல்,உயிரியல், உளவியல் , நலவாழ்வியல்  மற்றும் வேளாண்மை சார்ந்த கருத்துக்களை எடுத்தியம்புகிறது. சிந்தனையைத் தூண்டும் சின்னக் குறள்களால் என்னைக் கவர்ந்த தெய்வப்புலவர் திருவள்ளுவருக்கு இந்நூலைச் சமர்ப்பித்து மகிழ்வடைந்தேன்.

       செல்விப் பதிப்பகம் வெளியிட்ட வள்ளுவதில் இயற்பியல் கூறுகள் ,மணிவாசகர் பதிப்பகம் வெளியிட்ட அறிவியல் ஆக்கத்  தமிழ் ,அழகப்பா கலைக்கல்லூரி வெளியிட்ட கருத்தரங்கக் கட்டுரைகளின் தொகுப்பு நூலான கலைச்சொல்லாக்க நெறிமுறைகள் போன்றவை தமிழ் இலக்கியங்களில் நான் கொண்ட அறிவியல் பார்வையை வெளிப்படுத்துகின்றது.ஒரு சமயம் காரைக்குடி கமபன் கழகம் (கம்பன் அடிசூடி) ஒரு கருத்தரங்கம் நடத்தியது. அதில் வாசிக்க ஆய்வுக் கட்டுரையொன்று தருமாறு பழ .பழனியப்பன் கேட்டுக்கொண்டார்கள். என்னிடம் ராஜாஜி எழுதிய கம்பராமாயணம் என்ற நூல் மட்டுமே இருந்தது அதற்காக அவர்களிடமிருந்தே பொழிப்புரையுடன் கூடிய கம்பராமாயணத்தை வாங்கி படித்து கம்பனின் வார்த்தைகளில் அடங்கியிருக்கும் அறிவியல் கருத்துக்களை சேகரித்து ஒரு கட்டுரையாக்கிச் சமர்பித்தேன் . அது தொகுப்பு நூலில் இடம்பெற்றுள்ளது . அப்பொழுதிலிருந்து தமிழ் இலக்கியங்களில் அறிவியல் ,கலைச் சொற்கள் போன்ற ஆய்வுகளுக்கு பழந்தமிழ் இலக்கியங்கள் மூலப்பொருளாக  இருப்பதால் அறிவியல் தமிழில் ஆய்வு மேற்கொள்ள ஆராய்ச்சி  மாணவர்கள் முன்வரவேண்டும் என்று கூறிவருகின்றேன். அவர்கள் விரும்பினால் என்னால் இயன்ற உதவிகளைச் செய்வேன் .

என் புத்தகங்கள் என் வாழ்க்கை

 அறிவியல் நோக்கில் அழகு வைரங்கள்(Science of Diamonds)


 

தலைப்பு அறிவியல் நோக்கில் அழகு வைரங்கள்

வெளியீட்டாளர் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் ,சென்னை

ஆண்டு  : நவம்பர் 1994

பதிவு எண் ISBN 81-234—0356—9, A -798

மொழி : : தமிழ்

கருப்பொருள் அறிவியல் , வைரங்கள்

பக்கங்கள்139 விலை Rs.25

 

            இந்நூல் வள்ளல் அழகப்பச் செட்டியார் அவர்களுக்கு சமர்ப்பித்து மகிழ்ந்துள்ளேன் . அவர் காரைக்குடியில் கல்விக்கூடங்களை எழுப்பியிருக்கா  விட்டால் நான் படித்திருக்கவே  முடியாது..தனது சொத்து செல்வம் அனைத்தையும் கல்விக்காக வழங்கிய இவரைப்போல வேறொரு மனிதரைப் பார்க்கவே முடியாது ,கடவுளே வாழ்த்திய ஒரு மனிதர் உலகில் உண்டென்றால் அது வள்ளல் அழகப்பச் செட்டியாராகத்தான் இருக்கும். இந்த நூல் எனக்குள் கிடைத்தபோது அதிலொரு பிரதியை அழகப்பச் செட்டியாரின் ஒரே மகளான உமையாள் ராமநாதன் அவர்களுக்குக் கொடுத்தேன். கோகினூர் போன்ற சில வைரங்களின் வரலாறுகளை ப் படித்திருக்கின்றேன். அவற்றோடு வைரங்கள் பற்றிய இயற்பியல் கருத்துக் களையும் இணைத்து ஒரு நூலாக வெளியிடலாம் என்று நினைத்தேன் . அப்போது எனக்கு கிடைத்த ஒரே மூலம் மிர் பதிப்பகத்தார் வைரம் பற்றி வெளியிட்ட ஒரு நூல்தான் . மேலும் விவரங்கள் சேகரிக்கக் காத்திருந்த வேளையில் அண்ணா பல்கலைக் கழகத்தின் படிக வளர்ச்சி மையத்தில் கோடைகாலப் பயிற்சி முகாமில் கலந்து கொண்டேன் . அப்போது செயற்கை வைரங்கள் உற்பத்தி பற்றிய விஷ்யங்களைத் தெரிந்து கொண்டேன். .இது அறிவியல் நோக்கில் அழகு வைரங்கள் என்ற தலைப்பில் எழுத நினைத்த நூலை எழுதிமுடிக்க உறுதுணையாக இருந்ததுஇயற்கை வைரங்களுக்கு ஒரு அத்தியாயம் செயற்கை வைரங்களுக்கு ஒரு அத்தியாயம் என இரு அத்தியாயங்கள் உள்ளன.முதல் அத்தியாயத்தில் உலகப் புகழ் பெற்ற வைரங்கள் ,அவற்றோடு தொடர்புடைய கதைகளை விவரிப்பதுடன் ,வைரங்களின் சிறப்புப்பண்புகளையும் வைரங்கள் பூமியில் தோன்றிய விதத்தையும் விளக்கிக் கூறுகின்றது வைரங்களைப் பட்டை தீட்டுதல் , நிறமூட்டுதல் பற்றிய செய்திகளைத் தெரிவிக்கின்றது .இரண்டாவது அத்தியாயம் செயற்கையாக வைரங்களை உற்பத்தி செய்யும் முறைகளை விவரிக்கின்றது  இந்த நூலுக்கு சிறந்த அறிவியல் தமிழ் நூலுக்கான பரிசு ஏன் கிடைக்கவில்லை என்று எனக்கு இன்றளவும்  தெரியவில்லை

 

Friday, September 29, 2023

என் புத்தகங்கள் என் வாழ்க்கை

 . மகிழ்வூட்டும் அறிவியல் செய்முறைகள்(Fun with Scientific experiments)

   


      
 

தலைப்பு : மகிழ்வூட்டும் அறிவியல் செய்முறைகள்(மொழிபெயர்ப்பு)

வெளியீட்டாளர் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் ,சென்னை

ஆண்டு ஆகஸ்ட் 1998

ISBN 81-234—0601--0

மொழி : தமிழ்

கருப்பொருள் விளையாட்டாய் செய்முறைச் சோதனைகள்

பக்கங்கள் 145 விலை: Rs.40

 

      பல பொது அறிவியல் நூல்களை எழுதி NCBH மூலம் வெளியிடதால் அவர்களுக்கு அறிவியல் நூல்களை மொழிபெயர்க்க நம்பிக்கையான ஒரு ஆள் கிடைத்தது , எனக்கு  வி ஜி குல்கர்னி ,ஆர் எம் பகவத் ,வி ஜி கம்பீர் ஆகியோரால் எழுதப்பட்ட

Fun with Science Experiments என்ற நூலை மொழிபெயர்க்கும் பணி கொடுக்கப்பட்டது . அதை உள்ளார்ந்த விருப்பத்துடன் செய்தேன். இந்த நூலில் கொடுக்கப்பட்டுள்ள செய்முறைகள் எல்லாம் நாம்  அன்றாட வாழ்வில் சந்திக்கின்ற நிகழ்வுகளின் இயற்பியல் வேதியியல் உயிரியல் போன்றவற்றிற்கும் அப்பாற்பட்ட இயற்கை அறிவியலை புலப்படுத்திக் காட்டுகின்றது. எல்லோருக்கும் எளிதில் கிடைக்கக்கூடிய பொருட்களைக் கொண்டே சோதனை செய்யும் முறையைக் காட்டியிருக்கின்றார்கள்

என் புத்தகங்கள் என் வாழ்க்கை

 .நுண்பொருள் உலகம் (World of microparticles) 


தலைப்பு : நுண்பொருள் உலகம்

வெளியீட்டாளர் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் ,சென்னை

ஆண்டு : ஜூன் 1996

குறிப்பெண் : A 900 ISBN 81-234-0486-7

மொழி : தமிழ்

கருப்பொருள் அடிப்படைத் துகள்கள் , உயர் ஆற்றல் இயற்பியல்  

பக்கங்கள் 252 விலை Rs.64

  நான் தஞ்சாவூர் இராஜா  சரபோஜி அரசுக் கல்லூரியில பணிபுரிந்தபோது மூதறிவியல் மாணவர்களுக்கு அணுக்கரு இயற்பியல் பாடம் எடுத்தேன். அடிப்படைத் துகள்கள் பற்றி நிறையக் கட்டுரைகள் ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதி வெளியிட்டிருக்கிறேன். இருப்பினும் எனக்குள்ளும் அடிப்படைத் துகள்கள் பற்றி  நிறைய ஐயங்கள் உண்டு . அதற்காக அடிப்படைத் துகள்கள் பற்றி பல நூல்கள் வாங்கியுள்ளேன். நான் படித்ததை நான் புரிந்து கொண்டதை ஒரு நூலாக எழுதவேண்டும் என்று மனதிற்குள் ஒரு ஆசை துளிர்த்தது . கோடை விடுமுறையில் எனக்கு 2 மாதம் ஓய்வு கிடைத்தது. குடும்பத்தினரை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்துவிட்டு நான் மட்டும் தஞ்சாவூரிலேயே தங்கி இந்த நுண்பொருள் உலகம் என்ற நூலை எழுதினேன்..மீர் பதிப்பகத்தார் ஆங்கிலத்தில் வெளியிட்ட “Microworld”  என்ற நூலின் கருத்துக்களோடு தலைப்பையும் பயன்படுத்திக் கொண்டேன். நூலில் அளவு 200 பக்க நோட்டுக்களில் 3 நோட்டுக்கள் .  ஒரு சமயம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு தேர்வுத்தாள் திருத்தச் சென்ற பொழுது அப்போது அங்கு துணை வேந்தராக இருந்த சேதுநாராயணன் அவர்களோடு உரையாடும் வாய்ப்புக் கிடைத்தது. அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தரமான பாட நூல்களை வெளிட்டு வருவது எனக்கு முன்பே தெரியும் என்பதால் , நுண்பொருள் உலகம் என்ற இந்த நூலை அண்ணாமலைப் பல்கலைக்கழக வெளியீடாக வெளியிடவேண்டும் என்று கேட்டுக்கொண்டு சேதுநாராயணன் அவர்களிடம் கொடுத்தேன். அவர்களும் வெளியிடுவதாக வாக்குறுதி கொடுத்து வாங்கிக்கொண்டார்கள் . சில காலம் வெளியிடவில்லை. மறுமுறை தேர்வுத் தாள் திருத்தும் பணிக்குச் சென்ற போது என்னுடைய கையெழுத்திப் பிரதியை மறக்காமல் என்னிடம் திருப்பித் தந்து விட்டார் கள் . நான் சிறுபிள்ளையாய் இருந்தபோது விடுமுறை நாட்களில் என் தாயாரின் தாயார் வீட்டில் விளையாடுவேன்.. அவர்கள் நினைவாக இந்த நூலை வெளியிட்டுளேன். இந்நூலில் அடிப்படைத் துகள்கள் பற்றிய நெடிய முன்னுரை யுடன்  எதிர்த்துகள்கள். நியூட்ரினோக்கள் ,கேயன்ங்கள் ,ஹைபெரான்கள் ஒத்ததிர்வுத் துகள்கள் ,குவார்க்குகள் போன்ற நுண்துகள்களைப்    பற்றிய முழு விவரங்களையும் விவரிக்கின்றது ..ஏறக்குறைய இது ஒரு ஆய்வு நூல் போல இருக்கின்றது .இந்த நூலைப் படித்த பலரும் பாராட்டினார்கள் . இந்த நூலுக்கு சிறந்த நூலுக்கு வழங்கப்படும் பரிசு கிடைக்கும் என்று நினைத்தேன். நினைப்பு நினைப்பாகவே போனது . பரிசு கிடைக்காவிட்டால் என்ன மனதிற்கு ஒரு திருப்தி கிடக்கின்றதே  அதை யார் தடுக்கமுடியும்

 

என் புத்தகங்கள் என் வாழ்க்கை

 .கதை சொல்லும் கணக்குகள்


தலைப்பு: கதை சொல்லும் கணக்குகள் (கணக்கு விளையாட்டு)

வெளியீட்டாளர்:  அருண் நிலையம்,சென்னை

ஆண்டு டிசம்பர் 1991

 மொழி : தமிழ்

கருப்பொருள் : பொழுதுபோக்குக் கணிதம்

பக்கங்கள் 120 விலை Rs.15

          அனைத்து அறிவியலுக்கும் முன்னோடியான  கணக்கு அறிவியலின் தாய்.கணக்கிலே எவன் சமர்த்தனாய் இருக்கிறானோ அவனே பிற்காலத்தில் அறிவியலில் சிறந்து விளங்குகின்றான் .இயற்கையை  ஆராய கணக்கு கைகொடுக்கும் கருவி . இயற்கையை ஆராய்ந்து வென்றவர்கள் எல்லோரும் கணக்கில் புலியாய் இருந்தவர்களே..எனவே கணக்கில் குழந்தைகளுக்கு இயற்கை யாக விருப்பம் ஏற்படுமாறு எதாவது செய்யவேண்டும் என்று விரும்பினேன் . வெறும் கணக்கைச் சொன்னால் பிள்ளைகள் விலகிச் சென்றுவிடுவார்கள் கதை என்றால் கிட்ட வருவார்கள் . அதனால் கணக்கை கதையோடு பிணைத்து சொல்லலாமே என்று நினைத்தேன். அதன் விளைவே இந்நூல். இதில் 15 கணக்குப் புதிர்கள் கதையாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன. சிந்திக்கத் தூண்ட சிறந்த வழி கதைக் கணக்குகள் என்ற முன்னுரையுடன் இந்நூல் தொடங்குகின்றது  

 

என் புத்தகங்கள் என் வாழ்க்கை

 .உலோகங்களும் நாமும்  (Metals and we )


தலைப்பு : உலோகங்களும் நாமும்

வெளியீட்டாளர் : திருமகள் நிலையம் ,சென்னை

ஆண்டு: ஏப்ரல் 2006

மொழி : தமிழ்

கருப்பொருள்: கனிம வேதியியல். உலோகங்கள்  

பக்கங்கள் 200 விலை Rs.57.

            உலோகங்களைப் பற்றிய பொது அறிவியல் விவரங்களை மீர் பதிப்பகத் திலிருந்து பெற்ற மலிவு விலைப் புத்தகங்கள் இரண்டும்  சயன்ஸ் டுடே மற்றும் சயன்ஸ் ரிப்போர்ட்டரும்  தந்தன . இயற்கையில் காணப்படும் 92 தனிமங்களின் 75 சதவீதம்  உலோகங்களாகும். இவற்றுள் பெரிலியம் ,அலுமினியம் .டைட்டானியம் வனேடியம் குரோமியம் ,செம்பு துத்தநாகம் காலியம் செளினியம் ,சிர்கோனியம் ,மாலி ப்பிட்டினம் , காட்மியம் ஈயம் தோரியம் மற்றும் யுரேனியம்  ஆகிய 15 உலோகங்களை ப் பற்றிய பொதுவான இயற்பியல் மற்றும் வேதியியல் விவரங்கள் மற்றும் பயன்பாடுகள் பற்றி இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ளன ..வேறு சில உலோகங்களை இதுபோலத் தொகுத்து உலோகங்களும் நாமும் -2 என்ற தலைப்பில் வெளியிட வேண்டி திருமகள் நிலையத்திற்கு அனுப்பி வைத்தேன். எதோ சொல்ல முடியாத சில காரணங்களினால்  காலதாமதம் செய்யவே நான் பலமுறை விசாரிக்க, அவர்கள் அந்த  நூலை வெளியிடவில்லை என்று திருப்பி அனுப்பவும் இல்லை , இன்றுவரை பிரசுரித்ததாகவும் தெரியவில்லை . ஆசிரியர்களின் உழைப்பை மதிக்கத் தெரியாதவர்கள்     

 

என் புத்தகங்கள் என் வாழ்க்கை

 50.புள்ளியியல் கொள்கையும் இயற்பியலும்

 


தலைப்பு புள்ளியியல் கொள்கையும் இயற்பியலும்

வெளியீட்டாளர் அழகப்பா பல்கலைக் கழகம்  

ஆண்டு  2002

மொழி : தமிழ்

கருப்பொருள் : புள்ளியியற் கொள்கை  

பக்கங்கள் 222 விலை Rs.125 

            சில சமயம் அரசாங்கம்  மக்களிடம் நல்ல பெயர் சம்பாதிக்க நினைத்து பல்கலைக்கழகங்களுக்கு பொருளுதவி செய்து உயர் கல்விக்குரிய பாடநூல்களைத் தமிழில் எழுத ஆணையிடும். திட்டச் செலவை செலவழிக்க பல்கலை.க்கழகங்களும் சில முயற்சிகளை எடுத்துக்கொள்ளும் .அறிவியல் தமிழின் தமிழின் வளர்ச்சி நூலாக்கங்களில் மட்டுமில்லை. அதன் இயல்பான பரவலாக்கம் ,சார்புத் துறை களின் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு இவற்றோடும் தொடர்புடையதாக இருக்கின்றது. மாணவர்களிடம் அறிவியல் தமிழின் தேவையைத் தூண்டாமல் அறிவியல் தமிழ்நூல்களை எழுதுவது பெரிய அளவில் பயன் தருவதில்லை   

        நான் அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக அண்ணா பல்கலைக் கழகத்தின் படிக வளர்ச்சி மையத்தின் தலைவராக இருந்த முனைவர் இராமசாமி இருந்தார்கள். அவர்கள் எனக்கு ஏற்கனவே நன்கு அறிமுகமானவர். தன்னுடைய துறையில் சிறந்து விளங்கியவர்.ஒரு முறை அந்த மையத்தில் கோடைகால பயிற்சி முகாமில்  கலந்து கொண்டேன். அப்பொழுது பேராசிரியர்  இராமசாமி அவர்கள் எனக்கும் பயிற்சி பெற வந்த  ஆசிரியர்களுக்கும்   நிறைய பாட நூல்களைத் தந்தார்கள், திட்டத் செலவை பயனுறு விதத்தில் செலவைத்தைமைக்காக  அதற்காக அவரைப் பாராட்ட வேண்டும். நான் பணிபுரியும் அரசுக் கல்லூரியில் படிக வளர்ச்சியை  அறிமுகப் படுத்த வேண்டும் என்ற விருப்பத்தில் இரண்டு சாதனை களை அன்பளிப்பாகப் பெற்றேன். பின்னாளில் அக்கருவிகளைக் கொண்டு இரண்டு எம்.பில் மாணவர்களுக்கு அழகப்பா பல்கலைக்கழத்தில் பட்டம் வாங்கிக் கொடுத்தேன். பல மூதறிவியல் மாணவர்களின் பிராஜெக்டை முடிக்கப் பயன் பட்டது. முனைவர் இராமசாமி அவர்கள் என்னை அழகப்பா பல்கலைக் கழகத்தில் ஆய்வுப் பட்டம் பெற வழிகாட்டியாக அனுமதித்தார்கள் . மேலும் அழகப்பா அரசுக் கலைக்கல்லூரியில் மூதறிவியல் தொடங்கவும் அனுமதி தந்தார்கள் . அழகப்பா அரசுக் கலைக் கல்லூரியில் மீண்டும் மூதறிவியல் என்னால் தொடங்கப்பது   

           நான் அழகப்பா அரசுக் கல்லூரிக்கு மாற்றலாகி வந்த பொழுது அழகப்பா பல் கலைக்கழகத்தின் இயற்பியல் துறையின் தலைவராக முனைவர் சபேசன் அவர்கள் நியமிக்கப்பட்டார்கள். நானும் அழகப்பா பல்கலைக்கழகத்தில் ரீடர் பதவிக்கு விண்ணப்பித்திருந்தேன் ,ஆனால் வெற்றி பெறவில்லை.. சபேசன் அவர்கள் எனக்கு ஏற்கனவே நன்கு அறிமுகமானவர் . அழகப்பா பல்கலைக்கழகம் மூதறிவியல் மாணவர்களுக்கான அறிவியல் பாட நூல்களைத் தயாரிக்க முயன்றபோது எனக்கு வாய்ப்புக் கொடுக்கப்பட்டது. .நான் இறப்பியலில் புள்ளியியற் கொள்கை  என்ற பாட நூலை எழுதினேன் . இது கொஞ்சம் கஷ்டமானது என்றாலும் நீண்ட காலம் இந்தப் பாடத்தை மாணவர்களுக்கு நடத்தியதால் எளிதில் எழுதி முடித்தேன். இந்த நூலை சரிபார்த்து திருத்தம் செய்தது முனைவர் சபேசன் அவர்கள்.  மூதறிவியல் பாட நூல்களை எழுதிய ஆசிரியர்களுக்கு அழகப்பா பல்கலைக் கழகம் பாராட்டு விழா நடத்தியபோது தமிழக அரசின் கல்வி அமைச்சராக இருந்த பேராசிரியர் அன்பழகன் அவர்கள் எனக்குப் பொன்னாடை போர்த்திய நிகழ்வு    


துணைவேந்தர் இராமசாமி  அன்பழகன் முனைவர் மெய்யப்பன்

 

   நான் நூல் எழுதி வெளியிடும் போது பொதுவாக பதிப்பகத்தார் 10 நூல்களை ஆசிரியருக்கு அன்பளிப்பாக வழங்குவார்கள். பொதுவாக அந்தப் பிரதிகளில் 2 மட்டும் எனக்கு வைத்துக்கொண்டு மற்றவற்றை நண்பர்களுக்கும் பள்ளிகளுக்கும் கொடுப்பேன். நான் படித்த ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் உயர்நிலைப் பள்ளி, கோவிலூர் மடாலய நூலகம் , அழகப்பா அரசு கலைக்கல்லூரி பொது நூலகம்  , உமையாள் ராமநாதன் பெண்கள் கல்லூரி போன்றவற்றிற்கு என்னுடைய நூல்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளேன் .

நான் அப்பொழுது 20-25 நூல்களை எழுதியிருப்பேன். அதை ஒருமுறை பார்த்த பாலசுப்ரமணியன் என்ற தமிழ் பேராசிரியர் எண்ணை எழுத்தாளர் விக்கிரமன் தலைவராக உள்ள அகில இந்திய எழுத்தாளர் சங்கத்தில் ஆயுட்கால உறுப்பினராச் சேர்த்து விட்டார்கள் . என்னுடைய எழுத்துப் பனியைப் பார்த்துவிட்டு எனக்கு ஒரு பாராட்டு விழா நடத்த வேண்டும் என்று எழுத்தாளர் சங்கம் முடிவு செய்தது. அந்தப்பாராட்டு வவிழா  ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் உயர்நிலைப் பள்ளியில்  துணைவேந்தர் முனைவர் ராமசாமி தலைமையில் ,குன்றக்குடி பொன்னம்பல்  அடிகளார் முன்னிலையில் நடந்தது. எழுத்தாளர் அய்க்கன் ,குன்றக்குடி அடிகளார் , துணைவேந்தர் இராமசாமி ஆகியோர் பாரட்டிப் பேசினார்கள் 

  




   

   துணைவேந்தர் இராமசாமி                  குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்

 


                                                                    பாராட்டு விழா மிகழ்வு