விண் வெளியில் நீந்தும் விண்மீன்கள் பகுதி -2
தலைப்பு : விண் வெளியில் நீந்தும் விண்மீன்கள் பகுதி -2
வெளியீட்டாளர் : அமேசான் KDP ஒளியச்சுப்
பதிப்பு
ஆண்டு : மே 2022
பதிவு எண் ASIN
BOB1VPQT5W
மொழி: : தமிழ்
கருப்பொருள்: அண்டவியல்
பக்கங்கள் 80 விலை 5 USD
விண்வெளி என்பது எல்லோருக்கும் பொதுவான ஒரு திறவலான
புதையல் . அங்கு நித்தம் நிகழும் விந்தையான நிகழ்வுகளைக் கண்டு களிப்பதும் ,அதற்கான அறிவியல் உண்மைகளை ஆராய்ந்து
அறிவதும் பொருளாலான புதையலைவிட அதிக மகிழ்ச்சியை அளிக்கக் கூடியது.
விண்வெளியை எவ்வளவு முறை நோக்கினாலும் சலிப்பே
ஏற்படுவதில்லை .ஒவ்வொருமுறையும் ஒரு புதிய செய்தியை வழங்குகின்றது. விண்வெளியில் நீந்தும் விண்மீன்கள்
என்ற தலைப்பில் எழுதப்பட்ட இரண்டாவது நூல் இது. இந்நூலில் மூன்று அத்தியாயங்கள் உள்ளன. முதல் அத்தியாயம்
விண்மீன்களின் பொதுப்பண்புகளை விவரிக் கின்றது.விண்மீனின் ஆற்றல் மூலம்,நிறமாலை ,ஒளிப்பொலிவெண்
வெப்ப நிலை, நிறை தொலைவு , உருவ அளவு பற்றித் தெரிவிக்கின்றது .இரண்டாம் அத்தியாயம்
விண்மீனின் வளர்ச்சிப் படிகளும் சிறப்பு நிலைகளும் பற்றி விவரிக் கின்றது . இதில் இரட்டை
விண்மீன்கள்,முதன்மைத் தொடர் விண்மீன்கள்,சிபிட்ஸ் மாறொளிர் விண்மீன்கள் ,நோவா நின்றழிவு விண்மீன்கள்
சூப்பர் நோவா உடனழிவு விண்மீன்கள்,நியூட்ரான் விண்மீன்கள்,துடிப்பு விண்மீன்கள் குவாசார்
,கருந்துளை விண்மீன்கள் பற்றி தெரிவிக்கின்றது மூன்றாம் அத்தியாயம் நம்முடைய பால்வழி
மண்டலத்தில் உள்ள சிறப்பு விண்மீன்களைப் பற்றி
விவரிக்கின்றது
.விண் வெளியில் நீந்தும் விண்மீன்கள் பகுதி -3 இராசி மண்டலம்
தலைப்பு : விண் வெளியில் நீந்தும் விண்மீன்கள் பகுதி -3 இராசி மண்டலம்
வெளியீட்டாளர் : அமேசான் KDP ஒளியச்சுப்
பதிப்பு
ஆண்டு: ஜூன் 2022
பதிவு எண் ASIN BOB34TD5GX
மொழி : : தமிழ்
கருப்பொருள்:
அண்டவியல்
பக்கங்கள் 149 விலை 10 USD
காலமெல்லாம் களிப்பூட்டி வரும் இந்த வானம் இன்றைக்குத் தனிப்பெரும் அறிவியலாக வளர்ந்துவருகின்றது .ஒரு பக்கம் இயற்பியல் கொள்கைகள் - பேரண்டத்தின் எல்லையையும் , அண்டம் மற்றும் அண்டத்திலுள்ள விண்மீன்களின்
இயக்கங்களையும் ,
விண்மீன்களின் வளர்ச்சிப் படிகளையும் அலசி ஆராய்கின்றன.மறுபக்கம் அதற்கு ஆதாரமான சோதனைகள் , விண்ணியல் தொலைநோக்கிகளின் வளர்ச்சி , பகுதிறன் மிக்க நிறமாலைமானிகள் ,விண்வெளியில் நிறுவப் படும் விண்வெளி ஆய்வுக்கூடங்கள்
,மூலம் விண்மீன்களின் இருப்பிடம் மற்றும் அவற்றின் இயற்பியல் தன்மைகளை அறிதல் ,
புதிய வசிப்பிடங்களைத் தேடி பூமி தவிர்த்த சூரியக் கோள்களை எட்ட விண்வெளிப்பயணம்
, வேற்றுலகவாசிகளுடன் தொடர்புகொள்ளும் வாய்ப்புக்களை
ஏற்படுத்திக்கொள்ளுதல் போன்றவை விரிவாக வளர்ந்து வருகின்றன.
ஒருசமயம் திக்குத் தெரியாத நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருக்கும்போது துருவ விண்மீன் அவர்களுக்கு வடக்குத் திசையைக் காட்டும் ஒரு வழிகாட்டியாக விளங்கியது. விண்ணில் இருந்து கொண்டு பூமியில் சரியான வழிகாட்டும் இந்த வழிகாட்டியின் பயனைத் தெரிந்து கொண்ட பின்னர் விண்மீன்களைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளவேண்டும்
என்ற ஆவல் மற்றவர்களைப் போலவே எனக்கும் வந்தது , பழங்காலத்திய இந்தியர்கள் .கதிர்வீதியில்
(eccliptic) உலா வருவது போலத் தோன்றும் சூரியன் மற்றும் சந்திரனின் சார்பு இயக்கங்களை மிகத் துல்லியமாக அறியும் முயற்சியில் ஈடுபட்டனர். .இப்பூமியில் வாழும் அனைத்து உயிரினங்களுடனும் சூரியனும் சந்திரனும் பிற விண்ணுறுப்புகளைவிட அதிகஅளவில் உள்ளார்ந்த ஒரு தொடர்பைப் பெற்றிருந்ததால் அது தொடர்பான விவரங்களை மட்டுமே சேகரித்தனர் . அப்போது கதிர்வீதியை ஒட்டியிருக்கும்
சில குறிப்பிட்ட விண்மீன் வட்டாரங்களை மட்டும் ஓரளவு அறிந்துகொள்ள முயன்றனர்.இதனால் அவர்கள் நூற்றாண்டுகாலக்
காலண்டரை உருவாக்கினார்கள், சந்திர-சூரிய கிரகணங்கள் ஏற்படும் காலங்களைத் துல்லியமாக அளவிட் டறிந்தார்கள். இதற்காக கதிர்வீதியை 30
டிகிரி கோணத்துடன் 12
சமபகுதிகளாகப் பிரித்தனர் . ஒவ்வொரு பகுதியையும் இராசி மண்டலம் என அழைத்தந்தனர் . இவற்றை மேஷம் (Aries).ரிஷபம் (Taurus), மிதுனம் (Gemini),கடகம் (Cancer) ,சிம்மம் ( Leo) ,கன்னி (Virgo).
துலாம் (Libra), விருச்சிகம் (Scorpio) .தனுசு (Sagittarius),
மகரம் (Capricorn).கும்பம் (Aquarius). மீனம் (Pisces)
என அழைக்கின்றார்கள். சூரியன் கதிர்வீதியில் வலம் வருவது போலத் தோன்றும் போது ஒவ்வொரு இராசி மண்டலத்தையும் 30
நாட்களில் கடந்து செல்லும் . இந்நூல் வட்டார விண்மீன் கூட்டங்களைப் பற்றிய ஒரு முன்னுரையுடன் தொடங்கி ஒவ்வொரு இராசி மண்டலத்திற்கும் ஒரு அத்தியாயம் என்று 12 அத்தியாயங்களில் ஒவ்வொரு இராசி மண்டலத்தையும் அதன் அண்டை வட்டாரங்களையும் விவரிக்கின்றது
No comments:
Post a Comment