Wednesday, September 27, 2023

விண் வெளியில் நீந்தும் விண்மீன்கள் பகுதி -1 

 


தலைப்பு : விண் வெளியில் நீந்தும் விண்மீன்கள் பகுதி -1

வெளியீட்டாளர் : அமேசான் KDP ஒளியச்சுப் பதிப்பு   

ஆண்டு  மே  2022

பதிவு எண் ASIN BO9ZLFMCTW

மொழி : : தமிழ்

கருப்பொருள் : அண்டவியல்  

பக்கங்கள் 180 விலை 15 USD

 

       வியப்பூட்டும் விண்வெளி பற்றிய விவரங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல்   இன்றைக்கு எல்லோரிடமும் காணப்படுகின்றது. பரந்த பிரபஞ்ச வெளியில்  ஒருவிண்மீன்/ஓரண்டம் அழிவதும் மற்றொரு விண்மீன்/ஓராண்டம் உருவாவதும் எங்கோ ஓரிடத்தில் நடந்து கொண்டேயிருக்கின்றன.அழிவதும் ஆவதும் இடைவிடாது  தொடர்ந்து நடைபெறுவது இயற்கையின் பரிணாமவளர்ச்சியின் மாற்றமில்லா வழிமுறை. அறிவியல் தொழிநுட்பத்தின் வளர்ச்சி, மற்றும் தன்னார்வத்தின் காரணமாக   இன்றைக்கு விண்வெளி ஆராச்சியாளர்களின் கண்ணோட்டம் நெடுந் தொலைவு ஊடுருவியிருக்கின்றது. நித்தம் ஒரு புதிய நிகழ்வை பதிவு செய்கின்றார்கள் இந்நூல் மூன்று  பகுதிகளாக அமைந்துள்ளது. முதல் பகுதி அண்டங்கள் ,நெபுலாக்கள் , இருள்மைப் பொருள் மற்றும் ஆற்றல் பற்றியும்  இரண்டாம் பகுதி விண்மீன்களின் பொதுப் பண்புகள்  மற்றும் அதன் வளர்ச்சிப்படிகள் பற்றியும்  விளக்குகின்றது . மூன்றாம் பகுதி  விண்மீன்களை ராசி மண்டலங்களாக வகுத்து , வட்டார விண்மீன் கூட்டமாக்கி  அதிலுள்ள விண்மீன்களின் தனிச் சிறப்பியல்புகளை விவரிக்கிறது . இருள்மைப் பொருளுக்கான ஒரு அறிவியல் விளக்கத்தை வட்ட அலைகள் மூலம் இந்த நூல் ஒரு புதிய கருத்தை வெளியிடுகின்றது. தமிழ்  மாணவர்களின் ஆவலைப் பூர்த்தி செய்ய இந்நூல் பயன்படும் என நம்புகின்றேன். இந்நூல் என்னுடைய 16 ஆண்டுகால முயற்சி.

         எனக்கு வானவியலில் விண்ணியற்பியல்  சிறுவயது முதற்கொண்டே ஆர்வம் உண்டு. சயின்ஸ் ரிப்போர்ட்டர் மற்றும் சயன்ஸ் டுடே இதழ்களில் ஒவ்வொரு மாதமும் அண்டங்கள் ,விண்மீன்கள் பற்றி வெளிவரும் கட்டுரைகளை விரும்பிப் படிப்பேன். மீர் பதிப்பகத்தார் வெளியிட்ட மலிவு விலைப் புத்தகங்கள் சில வாங்கி என்னுடைய விட்டு நூலகத்தில் வைத்துள்ளேன். பணி நிறைவுக்குப் பின் என் மகன் வீட்டிற்கு அமெரிக்கா சென்றபோது அங்கு அடிக்கடி பொது நூலகம் செல்வேன் . என் மகன் நூலகத்தில் உறுப்பினர் என்பதால் நூல்களைக் படிப்பதற்கு எடுத்துக்கொண்டு வருவேன். நான் அதிகாமாக அங்கு படித்த நூல்கள் எல்லாம் விண்மீன்கள் ,அண்டங்கள் பற்றியது. நாலைந்து நோட்டுக்களில் குறிப்பெழுதி வைத்திருக்கின்றேன்..உண்மையில் இந்தக் குறிப்புக்களும் ,மீர் பதிப்பகத்தார் நூல்களும் ,வலைத் தளங்களிலுருந்து சேகரித்த விஷயங்களுமே இந்நூலுக்கு ஆதாரமாக இருந்தன என்றால் மிகையில்லை  இந்நூல் என் மனைவிக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டது இதில் நான்கு அத்தியாயங்கள் உள்ளன. முதல் அத்தியாயம் அண்டத்தைப் பற்றியும் ,இரண்டாம் அத்தியாயம் நெபுலாக்கள் பற்றியும்,மூன்றாம் அத்தியாயம் இருள்மைப் பொருள் மற்றும் ஆற்றல் பற்றியும் நான்காம் அத் தியாயம் பேரண்டத்தின் கட்டமைப்பு பற்றியும்  விவரிக்கின்றன. ,விளக்கப் படங்களை வலைத் தளங்களிலிருந்து எடுத்துக்கொண்டேன். இதை எழுதிமுடித்த பிறகு எனக்குள் ஒரு சந்தோஷம் வீண்ணியியல் பற்றிய நுட்பமான விஷ்யங்களைத் தமிழுக்கு கொண்டு வந்துவிட்டோம் என்ற திருப்தியே அதற்குக் காரணம்   

No comments:

Post a Comment