Saturday, September 9, 2023

 

இராமானுசனாரும் இனிக்கும் கணக்குகளும் (Ramanujan and his delightful mathematics)


தலைப்பு : இராமானுசனாரும் இனிக்கும் கணக்குகளும்                                                வெளியீட்டாளர்: வானதி பதிப்பகம் ,சென்னை                                                                                  ஆண்டு மே 1996                                                                                                                                              மொழி : தமிழ்                                                                                                                                           கருப்பொருள்: விளையாட்டுக் கணக்குகள்                                                                                        பக்கங்கள்:96                                                                                                                                                        விலை:Rs.20

       இந்நூலை இயற்பியலுக்காக் நோபல் பரிசு பெற்ற இந்திய விஞ்ஞானியான சர் சி வி இராமனுக்கு சமர்ப்பணம் செய்து வெளியிட்டேன். விளையாட்டுக் கணக்குகளில் இராமானுஜன் கண்டறிந்த சில படைப்புகள் இதில் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக இராமானுஜன் எண்கள் , இராமானுஜனும் பகா எண்களும், பை (π)- ன் மதிப்பை வேண்டிய பின்ன இலக்கங்களுக்குத் துல்லியமாகக் கண்டறியும் வழிமுறை மற்றும் இராமானுஜன் கண்ட மாயக்கட்டங்கள் போன்றவை  இந்நூலில் விவரிக்கப் பட்டுள்ளன.


9.சிறுவர்க்கான ராமானுஜன் எண்கள் (Ramanujan Numbers for children)  

தலைப்பு சிறுவர்க்கான ராமானுஜன் எண்கள்

வெளியீட்டாளர்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் ,சென்னை

ஆண்டு : முதல் பதிப்பு   டிசம்பர்  1990

பதிவு எண்  A 487

மொழி : தமிழ்

கருப்பொருள்: விளையாட்டுக் கணக்குகள் 

பக்கங்கள் 74 விலை: Rs.8.00

          நான் அவ்வப்போது எழுதி  சயன்ஸ் டுடே ,சயன்ஸ் ரிப்போர்ட்டர்  போன்ற அறிவியல் மாத இதழ்களில் வெளியிட்ட கட்டுரைகளின் விளக்கவுரையே இந்த நூலுக்கு அடக்கமாக இருந்தது  சில சமயங்களில்  எனக்குப் பிடித்த அறிஞர் பெருமக்களுக்கு  நான் எழுதும் நூல்களைச் சமர்ப்பணம் செய்வேன். இந்த நூலை இந்தியாவின் மிகச் சிறந்த கணிதவியல் மேதையான ஸ்ரீனிவாச இராமானுஜத்திற்கு சமர்ப்பணம் செய்தேன் கணிதம் படிப்பதில் ஆர்வம் கொள்வதற்கும் , கணிதத்தில் ஆக்கப்பூர்வமான சிந்தனைகள் மூலம் படைப்புக்களை வரையவும் இளைஞர் களைத் தூண்ட இந்நூலை எழுதினேன் என்றால் மிகையாகாது ராமானுஜனாரின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றிய சிறு குறிப்புடன் , 1729 என்ற எண்ணின் தனிச் சிறப்புக் களையும், R2 [R2 = a2 + b2 = c2 + d2] என்று குறிப்பிடப்படுகின்ற இரண்டாம் படி இராமானுஜன் எண்களைக் கண்டறிவதற்கான 5 வழிமுறைகளையும், R3 [R3 = a+ b3 = c3 + d3]என்று குறிப்பிடப்படுகின்ற மூன்றாம் படி இராமானுஜன் எண்களைக் கண்டறிவதற்கான 2 வழிமுறைகளையும் அவற்றின் பொதுவான சில பண்பு களுடன் விவரிக்கிறது. 



இரண்டாம் பதிப்பு பிப்ரவரி 1994                                                                                                         பக்கங்கள் 82                                                                                                                                                                         விலை: Rs.10.


மூன்றாம் பதிப்பு பிப்ரவரி 1996

நான்காம் பதிப்பு  ஆகஸ்ட் Aug 2005

ISBN 81: 81-234-0230-9-

பக்கங்கள் 82                                                                                                                                                               விலை: Rs.25.

No comments:

Post a Comment