.கதை சொல்லும் கணக்குகள்
தலைப்பு:
கதை சொல்லும் கணக்குகள் (கணக்கு விளையாட்டு)
வெளியீட்டாளர்: அருண் நிலையம்,சென்னை
ஆண்டு டிசம்பர் 1991
மொழி : தமிழ்
கருப்பொருள் : பொழுதுபோக்குக் கணிதம்
பக்கங்கள் 120 விலை Rs.15
அனைத்து அறிவியலுக்கும் முன்னோடியான கணக்கு அறிவியலின் தாய்.கணக்கிலே எவன் சமர்த்தனாய் இருக்கிறானோ அவனே பிற்காலத்தில் அறிவியலில் சிறந்து விளங்குகின்றான் .இயற்கையை ஆராய கணக்கு கைகொடுக்கும் கருவி . இயற்கையை ஆராய்ந்து வென்றவர்கள் எல்லோரும் கணக்கில் புலியாய் இருந்தவர்களே..எனவே கணக்கில் குழந்தைகளுக்கு இயற்கை யாக விருப்பம் ஏற்படுமாறு எதாவது செய்யவேண்டும் என்று விரும்பினேன் . வெறும் கணக்கைச் சொன்னால் பிள்ளைகள் விலகிச் சென்றுவிடுவார்கள் கதை என்றால் கிட்ட வருவார்கள் . அதனால் கணக்கை கதையோடு பிணைத்து சொல்லலாமே என்று நினைத்தேன். அதன் விளைவே இந்நூல். இதில் 15 கணக்குப் புதிர்கள் கதையாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன.
சிந்திக்கத் தூண்ட சிறந்த வழி கதைக் கணக்குகள்
என்ற முன்னுரையுடன் இந்நூல் தொடங்குகின்றது
No comments:
Post a Comment