Monday, September 18, 2023

என் புத்தகங்கள் என் வாழ்க்கை

 கடவுளும் மனிதனும் (God and human)

 


தலைப்பு: கடவுளும் மனிதனும் 

வெளியீட்டாளர் : அமேசான் KDP ஒளியச்சுப் பதிப்பு

ஆண்டு: செப்டம்பர்  2020

ASIN பதிவு எண் BO8JH5FX3K

மொழி : தமிழ்

கருப்பொருள்: கடவுள் , ஆன்மிகம் 

பக்கங்கள் 64 விலை 2 USD 

          இந்த புத்தகம் மனித பரிணாம வளர்ச்சியின் செயல்முறையுடன் கடவுளின் சுருக்கமான வரலாற்றையும் வழங்குகிறது. பல்வேறு மதங்கள், நாடுகள் மற்றும் இன மக்கள் மத்தியில் உள்ள அனைத்து பகுத்தறிவற்ற எண்ணங்களையும் செல்லாததாக்கி மனித நல்லிணக்கத்தைப் பேணுவதற்கு இறையியலைப் புரிந்துகொள்வதன் அவசியத்தை இது வலியுறுத்துகிறது. எல்லா மதங்களிலும் கடவுளும் அதன் அடிப்படைக் கோட்பாடுகளும் ஒரே மாதிரியாக இருக்கும் போது கடவுளின் பெயரால் எந்த சண்டைகளும் மீறல்களும் அர்த்தமற்றவை. கடவுள் என்ற கருத்துக்கு கொடுக்கப்பட்ட தர்க்கரீதியான மற்றும் அறிவியல் விளக்கங்களால் இது நன்கு ஆதரிக்கப்படுகிறது. 

         தமிழ் இலக்கியங்களின் கடவுளைப் பற்றிய கருத்துக்களைத் தொகுத்துரைத்து கடவுள் நம்பிக்கை என்பது தன்னம்பிக்கையின் ஒரு வடிவமே என்று கூறி  கடவுள் நம்பிக்கையின் தேவையைக் குறிப்பிட்டு . கடவுளின் நம்பமுடியாத குணங்களுக்கு விளக்கம் கொடுக்கின்றது. கடவுளுக்கும் கற்பிக்கப்படும்  ஒரு சில தீய குணங்கள் கடவுளும் மனிதனின் ஒரு படைப்பே என்று நிறுவி கடவுள் என்பது சமுதாய வாழ்வியலுக்கான ஒரு கொள்கை என்று கூறுகின்றது . ஆன்மிகத்திற்கும் அறிவியலுக்கும் உள்ள உள்ளார்ந்த தொடர்புகளைப் புலப்படுத்துகின்றது தர்க்கரீதியான ஒப்புமை பிரபஞ்சத்தின் கட்டமைப்பைப் பற்றி ஒரு புதிய தோற்றத்தை அளிக்கிறது. இது எல்லையற்ற பிரபஞ்சத்தை ஆதரிக்கிறது. இறப்புக்குப் பின் வாழ்க்கை பற்றிய ஆய்வு மறுபிறப்பைக் கண்டறியும். மரணத்திற்குப் பின் மனித வாழ்க்கை தொடரும் என்பதை அறிவியல் பூர்வமாக விளக்குவது இந்நூலின் சிறப்பாகும்

         அன்பே கடவுள் என்றாலோ ,இயற்கையே கடவுள் என்றாலோ , மனமே கடவுள்; என்றாலோ  எவரும் கடவுள் இல்லை என்று கூறமுடியாது. அன்பில்லாதவர்கள் இருக்கலாம் அதற்காக அன்பே இல்லை என்று கூறுவதில் நியாயம் இருக்கமுடியாது  .தாற்காலியமான செயற்கை அழகாகக் காட்சியளிக்கலாம்  அதற்காக இயற்கையை நேசிக்காமல் இருக்கமுடியாது .கடவுளோடு உறவாடக்கூடிய ஒருவர் உண்டென்றால் அது ஒருவருடைய மனமாகத்தான்  இருக்கமுடியும். ஒவ்வொருவருடைய மனதிலும் கடவுள் இருப்பதால்,மனிதனே கடவுள், என்றாலும் உண்மைதான்.ஒவ்வொருவருக்கும் அவர்களே கடவுள் என்றால் கடவுள் மறுப்பு என்பது ஒருவர் தன்னைத் தானே மறுப்பதற்குச் சமமாகும்

 கடவுள்  


 தலைப்பு : கடவுள்

வெளியீட்டாளர்: பழனியப்பா பிரதர்ஸ், சென்னை 

ஆண்டு டிசம்பர்   2020

மொழி: தமிழ் 

கருப்பொருள் : கடவுள், ஆன்மிகம்

பக்கங்கள் 102 விலை Rs.105

       கடவுள் பற்றிய என் சிந்தனைகள் மக்களைச் சென்றடையவேண்டும் என்ற உள்ளார்ந்த விருப்பத்தில் மின்னூலை இயற்பியல் பதிப்பாக பழனியப்பா பிரதர்ஸ் மூலம் வெளியிட் டேன்.. இந்நூலை என் மனைவிக்கு அன்பளிப்புச் செய்து வெளியிட்டேன். எங்களுக்கென்று என் பெற்றோர்கள் தந்த அறையில் இருந்த ஒரு அழகான படத்தை என் மனைவியாகச் சித்தரித்துள்ளேன். இது  கடவுளைப்பற்றிய ஒரு நெடிய முன்னுரையுடன் தொடங்குகின்றது  அதைத் தொடர்ந்து நான்கு அத்தியாயங்கள்   கடவுளின் மாற்றுருக்களை விவரிக்கின்றது .அன்பைக் கடவுளின் அடையாள மொழியாகவும் ,இயற்கையை கடவுளின் படைப்பாகவும் ,,மனம் கடவுள் வாழும் கோயிலாகவும் விவரிக்கின்றன. இறுதி அத்தியாயம் மரணத்திற்குப் பின் மனித வாழ்க்கை பற்றிய கருத்துக்களை எடுத்தியம்புகிறது. 


 

No comments:

Post a Comment