மணிவிழா மலர்
என் புத்தகங்கள் என் வாழ்க்கை
தலைப்பு:
மணிவிழா மலர்-1
வெளியீட்டாளர் : தனலட்சுமி வெளியீடு (சுய வெளியீடு )
ஆண்டு டிசம்பர் 2006
மொழி : : தமிழ்
கருப்பொருள் நன்னெறி மொழிகள்
பக்கங்கள் 24. விலை: இலவசம்
4-7-1946 ல் பிறந்து காரைக்குடியில் ரெங்கவாதியார் ஏட்டுப் பள்ளியிலும், பின்னர் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் வித்யாலயாவிலும், இளமறிவியல் படிப்பை அழகப்பா கலைக் கல்லூரியிலும் (1963-66) மூதறிவியல் மற்றும் ஆராய்ச்சிப் படிப்புக்களை அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலும் (1966-72) முடித்துவிட்டு ஜூன் 1972 ல் கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்யாலயாவில் கல்லூரி ஆசிரியராகச் சேர்ந்தேன். 1972 டிசம்பரில் தமிழக அரசின் கல்லூரிக் கல்வி இயக்கத்தால் தேர்வு செய்யப்பட்டு அரசு கலைக் கல்லூரிகளில் பணியில் சேர்ந்து மே 2005 ல் அழகப்பா அரசு கலைக் கல்லூரியிலிருந்து ஓய்வு பெற்றேன். .பணி ஓய்வுக்கு முன்பு சில மாத காலம் கல்லூரியின் பொறுப்பு முதல்வராகப் பணிபுரிந் தேன் . 4-7- 2006
ல் 60 வயது பூர்த்தி ஆனதை என் பிள்ளைகள் அறுபதாம் ஆண்டு நிறைவு விழாவாகக் கொண்டாட விரும்பினார்கள் . அமெரிக்காவில் பணிபுரிந்து கொண்டிருக்கும் என் மகனின் வரவிற்காக என்னுடைய மணிவிழாவை டிசம்பர் 2006 ல் கொண்டாடினேன். பொதுவாக இதுபோன்ற மணிவிழாக்களிலும், திருமண விழாக்களிலும் வாழ்த்துப் பா மற்றும் ஆன்மிகம் அல்லது பயனுள்ள செய்திகளுடன் கூடிய சிறிய நூல்களை வந்திருப்போருக்கு வழங்குவார்கள். நான் சற்று வித்தியாசமாக இருக்கட்டுமே என்று அனைவரையும் சிந்திக்கத்தூண்டும் கடவுள்.,இயற்கை,வாழ்க்கை,மனம் ,மகிழ்ச்சி ,அன்பு, காதல் ,,அறிவு,உழைப்பு ,முயற்சி ,கடமை ,செல்வம் ,ஆசை போன்ற தலைப்புக்களில் பொன்மொழிச் சிந்தனைகளைத் தொகுத்து எழுதி விழா மலராக வெளியிட்டேன்.
இறுதியில்
எனக்குப் பிடித்த கீதா சாரத்தை இணைத்துள்ளேன். இச் சிறு நூலை என் மகன் தொகுத்து வெளியிட்டதால்
அவன் பெயரில் பிரசுரித்தோம்
38.எண்ணங்களே வாழ்க்கை
என் புத்தகங்கள் என் வாழ்க்கை
தலைப்பு : எண்ணங்களே வாழ்க்கை (மணவிழா மலர்-4)
வெளியீட்டாளர்: தனலட்சுமி வெளியீடு (சுய வெளியீடு )
ஆண்டு : நவம்பர் 2017
மொழி : தமிழ்
கருப்பொருள்:
நன்னெறி மொழிகள்
பக்கங்கள் 24 விலை: இலவசம்
என் பேத்தி சோலை மீனாவின் திருமணம் நவம்பர் 2017 ல் காரைக்குடியில் நடந்தது. மண விழாவிற்கு விழா மலராக .பொன்மொழிச் சிந்தனைகளையே தொகுத்து வெளியிட்டேன். இதிலும் அனைவரையும் சிந்திக்கத்தூண்டும் ஆன்மிகம்.,இயற்கை, கல்வி ,மனம் , திறமை, தன்னம்பிக்கை வெற்றி, சமுதாயம், அன்பு, இனிய வாழ்க்கை போன்ற தலைப்புக்களில் பொன்மொழிச் சிந்தனைகளைத் தொகுத்து எழுதி விழா மலராக வெளியிட்டேன். இறுதியில் எனக்குப் பிடித்த கீதா சாரத்தை யும் இணைத்துள்ளேன். தலைப்பின் முற்பகுதியையும் பிற்பகுதியையும் இணைக்கும் பாலமாக இருக்குமாறு தலைப்பின் தொடக்கத்தில் ஒவ்வொரு தலைப்பிற்கும் ஏற்ப சில கருத்துக்கள் கூறப்பட்டுள்ளது இச் சிறு நூலை ப் பிற பேரன் பேத்திகள் தொகுத்து வெளியிட்டதால் அவர்கள் பெயருடனேயே பிரசுரித்தோம்
வாழ்க்கை என்பது ஒருவர் தனித்தே வாழ்வதில்லை .இல்லறத்தில் இணைந்திருக்கவும் சாகாத சமுதாயத்தைத் தொடர்ந்து உயிர்ப்புடன் வைத்திருக்கவும் ,அந்த சமுதாயத்தில் ஒவ்வொருரும் பாதுகாப்பாக இருக்கவும் நன்மக்களைப் பெற்று வளர்த்து ஆளாக்கி சமுதாய உணர்வுடன் வாழ்வதே இனிய வாழ்க்கை . நாம் தேடும் தேடிக்கொண்டேயிருக்கும் அந்த இனிய வாழ்க்கை அவரவர் எண்ணங்களில் தான் இருக்கின்றது என்றும் எண்ணங்கள் வண்ணமயமாக இருந்தால் மகிழ்ச்சியான வாழ்க்கை தனிமனிதனுக்கு மட்டுமின்றி அவன் வாழும் சமுதாயத்திற்கும் கிடைக்கும் என்றும் இச் சிறு நூல் அறிவுறுத்துகின்றது ஒவ்வொருவரும் எப்படி வாழ்ந்தால் இந்தச் சமுதாயம் தொடர்ந்து எல்லோருக்கும் மகிழ்ச்சியைக் கொடுக்கும் என்பதற்கான நேர்முறைகளை நம் முன்னோர்கள் ஆராய்ந்து ஆராய்ந்து இப்படித்தான் வாழவேண்டும் என்று கூறிச் சென்றுள்ளார்கள் .அவற்றை அலசி அறிந்து கொள்வதோடு புரிந்தும் கொண்டால் இனிய வாழ்க்கை எளிதில் வசப்படும் என்பதை அவர்கள் பதிவு செய்யாமல் நம்மிடம் விட்டுச் சென்ற அறிவுரைகளையே இதில் தொகுத்து எண்ணங்களே வாழ்க்கை என்ற தலைப்புடன் இச்சிறு நூலை பதிப்பித்துள்ளேன்
39. பீம ரத சாந்தி விழா மலர்-2
என் புத்தகங்கள் என் வாழ்க்கை
தலைப்பு : பீம ரத சாந்தி விழா மலர்-2
வெளியீட்டாளர் தனலட்சுமி வெளியீடு (சுய வெளியீடு )
ஆண்டு ஏப்ரல் 2003
மொழி : தமிழ்
கருப்பொருள்:
நன்னெறி மொழிகள்
பக்கங்கள்: 28 விலை: இலவசம்
என் மருமகளின் ஐயா நாட்டரசன் கோட்டையில் 70 ஆம் ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடினார்கள். அதற்கு பீம ரத சாந்தி விழா மலராக ஒரு சிறு நூல் தயாரித்துத் தருமாறு கேட்டுக்கொண்டார்கள். ஏற்கனவே தொகுத்து வைத்திருந்த கடவுள்,இயற்கை, வாழ்க்கை மனம் மகிழ்ச்சி அன்பு காதல் அறிவு, உழைப்பு, முயற்சி. கடமை செல்வம் ,ஆசை பற்றிய பொன்மொழி அறிவுரைகளை இதில் தொகுத்து என் மகன் பெயரில் வெளியிட்டேன். தலைப்புகள் அதே என்றாலும் இதில் பொன்மொழிகள் பல வேறானவை.
இறுதிப் பக்கத்தில் கீதாச் சாரம் இடம்பெற்றத் தவறவில்லை
40.சதாபிஷக முத்து விழா மலர்
தலைப்பு : சதாபிஷக முத்து விழா மலர் -3
வெளியீட்டாளர் : தனலட்சுமி வெளியீடு (சுய வெளியீடு )
ஆண்டு மார்ச் 2013
மொழி : தமிழ்
கருப்பொருள் : நன்னெறி மொழிகள்
பக்கங்கள் 44 விலை: இலவசம்
என் மருமகளின் ஐயா நாட்டரசன் கோட்டையில் 80 ஆம் ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடிய போது .ஏற்கனவே வெளியிட்ட மணிவிழா மலர்போல மற்றொரு மலர் தயாரித்துத் தருமாறு விரும்பினார்கள். எண்ணத்தில் பூத்த வண்ணப் பூக்கள் என்ற தலைப்பில் கடவுள்,ஆன்மிகம், இயற்கை .வாழ்க்கை ,சமுதாயம்.மனம் , மகிழ்ச்சி அன்பு காதல் அறிவு ,செயல் வெற்றி நாடு போன்ற துணைத் தலைப்புக்களில் முன்னோர்களின் அறவுரைகளைப் பொன் மொழிகளாக்கி இந்நூலைப் படை த்துள்ளேன். இதில் இறுதிப் பக்கத்தில் கீதாச் சாரம் இடம்பெற்றுள்ளது
No comments:
Post a Comment