Monday, September 18, 2023

என் புத்தகங்கள் என் வாழ்க்கை

 இறை மொழி (Gospel of God0


தலைப்பு: இறை மொழி (Gospel of God)

வெளியீட்டாளர்: அமேசான் KDP ஒளியச்சுப் பதிப்பு

ஆண்டு அக்டோபர், 2021

ASINபதிவு எண்BO9HQW1JDN

மொழி : தமிழ்

கருப்பொருள் ஆன்மிகம்

பக்கங்கள் 28 விலை 1 USD 

         எண்ணத்தில் எழும் ஒரு பொருள் பற்றிய சிந்தனைகளை எழுத்து வடிவில் தொகுத்து வைக்கும் பழக்கம் எனக்கு இருந்தது. பதிவு செய்யாத சில கருத்துக்கள் மறந்து போகும். இக்கருத்துக்களை நீண்டகாலமாகவே நகரத்தார் மலர் ,(மதுரை)-   விஞ்ஞானச் சுடர் (கோயம்புத்தூர்)-,திருநெல்லை (கோவிலூர் ) -போன்ற சில இதழ்களில் சிந்தனை செய் மனமே,  எண்ணத்தின் வண்ணங்கள் என்ற தலைப்புக்களில் தொடர்ந்து வெளியிட்டு இருக்கின்றேன் . இதில் கடவுள்  ஆன்மிகம்இயற்கை மனம் ,வாழ்க்கை,மகிழ்ச்சி ,அன்பு, அறிவு, காதல் ,உழைப்பு ,முயற்சி வெற்றி நம்பிக்கை போன்ற பொருள் பற்றிய நன்மொழிகள் இருக்கும் . அவற்றுள் கடவுள் மற்றும் ஆன்மிகம்  தொடர்பான கருத்துக்களை மட்டும் தொகுத்து இந்நூலை அமேசான் மூலம் மின்னூலாக வெளியிட்டுள்ளேன்    

         உலகம் மேலும் மேலும் சீரழிந்து வருகிறது, மக்கள் மத்தியில் குற்றச் செயல்கள் செய்யும் விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.. அதை யாரோ ஒருவர் மாற்றவில்லை என்றால், உலகமே நொறுங்கிப் போய்விடும், தவறாகப் போகும் மக்களை வழிநடத்தவும் திருத்தவும் எளிய மற்றும் மலிவான வழி  அவர்களை  நல்ல போதனைகளுக்கு உட்படுத்தி அதை புரிந்து கொள்ளவும், சிந்திக்கவும், ஏற்றுக்கொண்டு பின்பற்றவும் இயல்பாகத் தூண்டுவதாகும்  ,.கடவுளின் நற்செய்தி ஒரு சிறந்த தேர்வாகும். ஒரு நாளுக்கு ஒரு செய்தி  அவர்களின் மனதை சாத்தியமான வழியில் மாற்றும் மந்திரத்தை கொண்டிருக்கும் என்ற நம்பிக்கையில் :இந்நூலை வெளியிட்டுள்ளேன்

No comments:

Post a Comment